கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் வழமைக்கு மாறாக அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மற்றும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சிபன்னங்கண்டி, முரசுமோட்டை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் வழமைக்கு மாறாக அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் இவ் இராணுவத்தினர் வீதியால் செல்வோர் வருவோரை எல்லாம் வழிமறித்து தேசிய அடையாள அட்டை இலக்கம், வாகன சாரதி அனுமதிப்பத்திரம், சாரதி அடையாள அட்டை என்பவற்றின் பெயர் விபரங்களைத் திரட்டி வருகின்றனர்.
இதனால் தேர்தல் தினத்தன்று தமது அடையாள அட்டைகள் மற்றும் வாக்குச் சீட்டுகள் என்பன பறிமுதல் செய்யப்படுமோ என்ற அச்சநிலை ஏற்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு இந்தியா என்ன சொல்ல போகிறது.?
விடுதலை புலிகள் சிந்திய ஒவ்வொரு சொட்டு ரத்தமும் புலிகளாக
எழுந்து இந்த ரத்த வெறியர்களை அழித்து தனி நாடு அமைக்க
வேண்டும் .இது நிச்சயம் நிறை வேறும்.