முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஸஹ்ரேன் ஹஷிம் இந்தோனேசியாவுக்கான மலேசியத் தூதராக நியமிக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்வதாகக் கூறி அந்நாட்டு அரசாங்கத்திடமிருந்து இன்னும் கடிதம் வரவில்லை.
இதை, இன்று நாடாளுமன்ற வளாகத்தில் தெரிவித்த வெளியுறவு துணை அமைச்சர் ஹம்சா சைனுடின், அதன் காரணமாக ஸஹேரேனை முறையான தூதர் என்று குறிப்பிட முடியாது என்றார்.
“அதனால்தான் நேற்று நான் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில் தூதர்களின் பட்டியலில் அவரைச் சேர்க்கவில்லை”, என்றவர் விளக்கினார்.
பினாங்கு, பாயான்பாரு தொகுதி மக்களையே விற்றவன் இவன்! இந்தோனேசியாவுக்கான மலேசியத் தூதராக இவன் நியமிக்கப்பட்டால், வாய்ப்பு அமைந்தால், மலேசியாவையே இந்தோனேசியாவுக்கு விற்றாலும் விற்றுவிடுவான்!
அந்நாட்டு அரசாங்கத்திடமிருந்து முறையான கடிதம் வரவில்லை என்றால் அவரை ஏன் இன்னும் பொறுப்பில் வைத்திருக்கிறீர்கள்?
இவன் ஒரு பட்சோந்தி. நம்பினவனை பின்னல் குத்தும் ஈன புத்திக்காரன். இவனை எவனும் மதிக்க கூடாது. சொந்த லாபத்துக்காக எதுவும் செய்ய கூடியவன் . தூதராக அனுப்புவதில் எந்த நன்மையையும் நாட்டுக்கு கிடைக்க போவதில்லை . பணமே குறியாக இருக்கும் இவனை போன்றோரை அடுத்த வேலை சாப்பாட்டுக்கு அலைய விட வேண்டும்.