தேர்தல் தொகுதிகளைத் திருத்தி அமைப்பது வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செய்யப்பட வேண்டும். இல்லையேல் அது தொடர்பான சட்ட முன்வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கும் அதன்மீது விவாதம் நடத்தப்படுவதற்கும் பக்காத்தான் ரக்யாட் இடமளிக்காது என மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதன் தொடர்பில் பெர்சே கூட்டுத் தலைவர்களான எஸ்.அம்பிகா, பாக் சமட் சைட் ஆகியோருடனும் கலந்து பேசி விட்டதாக அவர் சொன்னார்.
நியு யோர்க் சென்றுள்ள அன்வார் இப்ராகிம், அங்கு சுமார் 100 பேருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டபோது இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
“அவர்கள் அதை (தொகுதிகளைத் திருத்தி அமைத்தலை)த் தொடர்ந்தார்களானால், நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் அதைப் பெரிய விவகாரம் ஆக்குவோம், விட்டுக் கொடுக்க மாட்டோம்”, என்றவர் அழுத்தம் திருத்தமாக உரைத்தார்.
தொகுதிகளைத் திருத்தி அமைப்பது மீதான சட்ட முன்வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதை பக்காத்தான் எப்படி தடுக்கும் என்பதை அவர் விவரிக்கவில்லை.
I சப்போர்ட் Pakatan!ஹிடுப் Pakatan…….!!!!!!!!!!!
hidup pakatan