கர்பால், கனவு காண்பதால் மட்டுமே புத்ரா ஜெயா கைக்கு வந்துவிடாது

1 putraஉங்கள் கருத்து:  ‘பக்காத்தானில் இன்னும் சீர்படுத்த வேண்டியவை நிறைய உள்ளன. இன்னும் விவேகமாகவும் கடுமையாகவும் உழைக்க வேண்டும்’

கர்பால்: மிகவும் வயதாவதற்கு முன்பே புத்ரா ஜெயாவைக் கைப்பற்றுவோம்

பெயரிலி #69337042: கடந்த 56 ஆண்டுகளாக தேர்தல் ஆடுகளம் சமமாக இருந்ததே இல்லை. அதன் விளைவாக ஒரே ஆட்சி இத்தனை காலமாக தொடர்வது ஒரு துர்அதிர்ஷ்டமே.

13வது பொதுத் தேர்தலில் டிஏபி-இன் அடைவுநிலை நன்றாகத்தான் இருந்தது.  பாஸும் பிகேஆரும் தங்களைத் திருத்தி அமைத்துக்கொள்ள வேண்டும், வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.அப்போதுதான் 14வது பொதுத் தேர்தலிலாவது புத்ரா ஜெயாவைக் கைப்பற்ற முடியும்.

மைஹோப்: ஆட்சி செய்வதைப் பற்றிப் பேசுவதற்குமுன்  பக்காத்தான்  தன் பலத்தையும் பலவீனத்தையும் வாய்ப்புகளையும் மருட்டல்களையும் சீர்தூக்கி ஆராய வேண்டும். இன்னும் கடுமையான, விவேகமான உழைப்பு தேவை.

ஜேபோண்ட்: பாஸ், தன்னை வலுப்படுத்திக்கொள்வது முக்கியம். அதுதான், 13வது பொதுத் தேர்தலில் கூட்டணியின் பலவீனமான இணைப்பாக இருந்தது. சாபா, சரவாக் உள்புறப் பகுதிகளிலும் ஆழமாக ஊடுருவ வேண்டும். வியூகங்கள், வியூகங்கள் தேவை.

கறுப்புமம்பா:  மெக்சிகோவில் ஆளும் கட்சியைத் தூக்கி எறிய 75 ஆண்டுகள் ஆயிற்று.

14வது பொதுத் தேர்தல், பக்காத்தான் புத்ரா ஜெயாவில் ஆட்சி அமைப்பதை முடிவு செய்யும் தேர்தலாக இருக்கும்.

ரிக்:  வாக்காளர் பட்டியலில் கோளாறு உள்ளவரை பக்காத்தானுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிட்டாது.

நியாயவான்:  பக்காத்தான் ஆட்சிக்கு வரும்போது கர்பாலும் லிம் கிட் சியாங்கும் மறைந்து போய் விடலாம். ஆனாலும், அதிகாரப் பீடத்தில் இருந்தவர்களின் வீழ்ச்சிக்குக் காரணமானவர்கள் என்ற முறையில் அவர்கள் என்றும் நினைவுகூறப்படுவர்.

மூவார்: அந்த நாள் வரும்போது, நீங்கள் இல்லையென்றாலும்,  வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை அடைய வழி அமைத்துக்கொடுத்த உங்களின் பங்களிப்பு உங்களை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.

13வது பொதுத் தேர்தலில் அவர்களின் ஆதரவாளர்கள் இணையத்தில் மேற்கொண்ட பரப்புரை மலாய்க்காரர்களை ஆத்திரப்பட வைத்தது. அதன் விளைவுகளால் பாதிக்கப்பட்டது பாஸ். அதே போக்கு தொடருமானால் அடுத்த தேர்தலிலும் பக்காத்தான் தோற்பதுடன் அக்கூட்டணியே அழிந்தும் போகலாம்.

அதற்காக, மலாய்க்காரர்கள் அம்னோவின் கொள்கைகளை ஆதரிக்கிறார்கள் என்பது பொருளல்ல. எதிரணியினரின் வலைத்தளங்களிலும் மலேசியாகினியிலும் மலாய்க்காரர்களைத் தொடர்ந்து சாடி வந்தது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

மலாய்க்காரர்களின் ஆதரவின்றி பக்காத்தானால் புத்ராஜெயாவைக் கைப்பற்ற முடியாது. டிஏபிக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் மலாய்காரர்களின் நலன்களையும் அம்னோவின் நலன்களையும் வேறுபடுத்திப் பார்க்க தெரிந்திருக்க வேண்டும். அதை அவர்கள், கர்பால் உள்பட, இதுவரை செய்யத் தவறிவிட்டனர்.

பீடுநடை தொடரட்டும்: மலாய்க்காரர்களை ஆத்திரப்பட வைத்தது பக்காத்தானின் வியூகமோ, இணையத்தளமோ அல்ல. அம்னோ பாரு, பெர்காசா ஆகியவற்றின் இனவாதம்தான் பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் தங்களுக்குப் பாதுகாப்பு இருக்காது என்ற அச்ச உணர்வைப் பரப்பி விட்டது.

லூயிஸ்: கர்பால், இளம் தலைமுறையினருக்கு நீங்களும் லிம்மும் இன்னமும் தேவைப்படுகிறீர்கள். ஊழலை எதிர்ப்பதில் உங்களின் அனுபமும் துணிச்சலும் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.