இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் தனது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும், இந்த விடயத்தில் அதீத கவனத்துடன் தான் செயற்படுகிறேன் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை ஆணையர் நவநீதம்பிள்ளை உறுதிபட மீண்டும் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கமே நியமித்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் சிபார்சுகளைக் கூட அந்த நாடு நிறைவேற்றாத நிலைமையே தொடர்ந்தும் காணப்படுகிறது.
தான் மனித உரிமைப் பேரவையில் இறுதியாகத் தெரிவித்த வாய் மூல அறிக்கை தொடர்பில் சிறிலங்கா அரசு கவனம் செலுத்தி அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்கு முன்னர் நிறைவேற்றப்படல் வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நவிப்பிள்ளைக்கு பணிந்தது இலங்கை அரசு: மார்ச் மாதம் அறிக்கை
அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வில் மனித உரிமைகள் முன்னேற்றம் தொடர்பிலான அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இந்த மீளாய்வு அறிக்கையின் தயாரிப்புப் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் இலங்கையின் வெளிவிகார அமைச்சின் செயலாளரான கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார்.
நவிபிள்ளை குறிப்பிட்ட சில விடயங்களில் அநேகமானவற்றை நாம் ஏற்கனவே பூரணப்படுத்தி விட்டோம் அவற்றில் சில நடைமுறைப்படுத்த முடியாதவை என்றும் அவர் கூறினார்.
இலங்கை மனித உரிமைகள் விடயத்தில் பொறுப்புக்கூறுதலில் முன்னேற்றத்தை காட்டத் தவறியுள்ளதென மனித உரிமை ஆணையாளர் நவிபிள்ளை ஐநா மனித உரிமைகள் பேரவை அமர்வில் கூறினார்.
இலங்கை அடுத்த மார்ச் மாதத்துக்கு முன்னர் அதன் முன்னேற்றத்தை காட்டத் தவறினால் அது ஒரு சர்வதேச விசாரணைக்கு வழிவகுக்கலாம் என்றும் அவர் கூறினார்.
அத்துடன், இலங்கை அரசின் மனித உரிமைகள் மீளாய்வு தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான கால எல்லையை நிர்ணயிக்கும் அதிகாரம் மனித உரிமைப் பேரவை ஆணையர் நவநீதம்பிள்ளைக்கு இல்லை என தெரிவித்துள்ள அவர், அவ்வாறானதொரு காலக்கெடுவை அரசு ஏற்கப் போவதும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
இலங்கை அரசு நல்லவே டிராமா காட்டுவானுங்க எல்லாமே “சோகம் ” மாநாட்டுக்கு முன் நடக்க வேண்டும்…மார்ச் 2014 ராஜபக்சி சோகம் தலைவன் ஆவான் அதற்கு பிறகு எல்லாமே இல்லை என்பான்…இப்போதே மனித உரிமை மீளாய்வு ஐநா செய்ய முடியாது என்கிறான். என்னடா கோமன் வெல்த் கோமாளிகளா? நவநீதம் பிள்ளை உழைப்பு எல்லாம் கடலில் போடும் உப்பா? இந்த உலகில் மனித உரிமை அறிவாளிகளே இல்லையா? எல்லாம் கொலையாளிகளா?
ஓடுமீன் ஓட ஒருமீன் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு!