பொதுக் கணக்குக்குழு(பிஏசி)வுக்குக் ‘கடிக்க’ பல் இல்லை, அதனால் அக்குழு முன்வைக்கும் பரிந்துரைகள் குறித்து எவரும் கவலைப்படுவதில்லை என பக்காத்தான் ரக்யாட் கூறியுள்ளது.
கணக்கறிக்கையில் காணப்படும் முறைகேடுகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கொண்ட உயர்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார்.
“அக்குழுவில் துணைப் பிரதமர், மாற்றரசுக் கட்சித் தலைவர், தலைமைக் கணக்காய்வாளர் ஆகியோரும் இடம்பெற்றிருக்க வேண்டும்”, என லிம் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதை வலியுறுத்தி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு கடிதம் எழுதப்போவதாகவும் அவர் சொன்னார்.
பிரதமர் நஜிப்புக்கு கடிதம் எழுதலாம். ஆனால், பதில் கிடைக்காது. கோபிந் சிங்கின் நேரடியான கேள்விக்கே பதில் கூறாமல் அமர்ந்திருந்த நஜிப் கடிதத்தைக் கண்டு கலங்க மாட்டார்.
பொது குழு அரசியல் பொழுது போக்கா எதையாச்சும் சொல்லி எல்லாத்தையும் நட்ட கணக்கில் எழுதுவாங்க. இந்த பொது குழுவுக்கு 20 மில்லியன் பழுக்கும். இதை ஓ கே யு கால் இல்லாத நொண்டிகளுக்கு தரலாம். ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் சம்பளம் கிம்பளம் வாங்கிட்டு ஹீ ஹீ என கை குலுக்கி நமக்கு டாடா பாய் சொல்லுவாங்க ? போதுமா?