நேற்று மசீசவிலிருந்து நீக்கப்பட்ட மத்திய செயல்குழு உறுப்பினர், லீ ஹுவா பெங், கட்சித் தலைவருக்கு எதிராக ஏபிசி இயக்கம் ( Anybody But Chua Soi Lek) தொடங்கியதுதான் தாம் கட்சியிலிருந்து தூக்கப்பட்டதற்கான காரணம் என்கிறார்.
மூன்று நாள்களுக்கு முன்னர்தான் அந்த இயக்கம் தொடக்கப்பட்டது என்றும் அதன் தொடர்பில் சிலாங்கூர், கோலாலும்பூர், பேராக் ஆகிய மாநிலப் பேராளர்களைத் தொடர்புகொள்ள முயன்று கொண்டிருந்ததாகவும் லீ கூறினார்.
எனவே, கடந்த ஆண்டு ஏப்ரலில் கிள்ளான் துறைமுக தீர்வையற்ற மண்டலம் மீதான தம் நூல் வெளியீட்டுக்கு டிஏபி தலைவர் லிம் கிட் சியாங்கை அழைத்திருந்ததுதான் தம்மைக் கட்சிநீக்கம் செய்ததற்கான காரணம் என்பது சற்றும் பொருந்தாது என்றாரவர்.
“நூல் வெளியீட்டு விழாதான் காரணம் என்றால், நீண்ட காலத்துக்கு முன்பே அவர் (சுவா) என்னை விலக்கி இருக்க வேண்டும்”, என மூன்று தவணைகள் சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினராக இருந்தவரான லீ கூறினார்.
போடா ! காலம் கடந்தது உங்கள் குப்பை செய்திகள் ம .இ. க . போல !
சார் இவன் பெரிய திருடன்.
இனி நீங்க உருப்பட்ட மாதிரிதான்.. லிம் குவான் எங் கிடம் போய் மண்டி போடுங்கள்..