நடுரோட்டில் பெண் ஒருவரை பொலிஸ் அதிகாரி ஒருவர் சவுக்கால் அடிப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூடானை சேர்ந்த ஹலிமா என்ற பெண்ணே தண்டனைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தலைநகரான கார்டோமில் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஹலிமா, முன்பின் தெரியாத நபரின் காரில் ஏறியதையடுத்து, நடுரோட்டில் வைத்து அனைவரின் முன்னிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் சவுக்கால் அடித்துள்ளார்.
அப்போது, இனிமேல் காரிலேயே ஏறக்கூடாது என்று கூறிக்கொண்டே அடித்துள்ளார். வலிதாங்க முடியாமல் குறித்த பெண் கதறுகிறார்.
இதுகுறித்து கார்டோமின் கவர்னர் கூறுகையில், சவுக்கடி தண்டனை ஒழுங்காக நிறைவேற்றப்பட்டதா என்பது தெரியவில்லை.
ஆனால் ஷரியத் சட்டப்படி அப்பெண் தண்டிக்கப்பட வேண்டியவள் தான் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ள காதலுக்கு சரியான தண்டனை இதுதான், நம்ம நாட்டுலே அதிகம் கள்ள காதல் நடக்குதுங்கோ, இந்த தண்டனையை நம்ம நாட்டுலையும் கொடுக்கணம்.
உண்மை தெரியாமல் உளற வேண்டாம். சூடானில் என்ன நிலை என்று தெரியாமல் ஏதும் கூறக்கூடாது.அத்துடன் மத வெரி பிடித்த அனாகரிகமானவன்கள்.
எதில் எங்கு இல்லை மூடத்தனம்! உண்மையிலும் மூடத்தனமோ!
உண்மை உங்களுடையே கருத்தை ஆதரிக்கிறேன், இங்கேயும் கள்ள காதல் அதிகமாயிட்டு இருக்கு, அதற்கு இது போல் கடுமையான தண்டனை தேவை
இது தான்…….! புரிகிறதா? புரிந்தால் சரி! மனிதாபிமானம் என்னும் பேச்சுக்கே இடமில்லை!