இந்திய மீனவர் அத்துமீறல் பிரச்சினை! ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கொண்டு செல்லப் போவதாக இலங்கை எச்சரிக்கை

fishing boatஇந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதை நிறுத்தாது போனால், இந்தியா இந்த விடயத்தில் உரிய தீர்வை வழங்காது போனால், தாம் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறையிடப் போவதாக இலங்கை எச்சரித்துள்ளது.

இலங்கையின் மீன்பிடித்துறை உதவி அமைச்சர் சரத்குமார குணரட்ன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் இலங்கை கடல்வள பாதிப்பு மற்றும் மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து நாளை இலங்கை வரும் இந்திய வெளியுறவு அமைச்சரிடம் விளக்கமளிக்கப்படவுள்ளது என்று உதவி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அத்துமீறும் மீனவர்களின் நடவடிக்கையை முழுமையாக கட்டுப்படுத்தா விட்டாலும் அந்த எண்ணிக்கையை குறைப்பதற்காகவது இந்தியா நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரப்படவுள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாக வடக்கின் முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வருவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

TAGS: