பினாங்கு மாநிலத்தில் இனவாத மருத்துவர்கள் பற்றிக் கூறியதை சுகாதாரத் துணை அமைச்சர் டாக்டர் ஹில்மி யஹ்யா மீட்டுக்கொள்ள வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும். தவறினால், அவருக்கு எதிராக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வழக்கு தொடுப்பார்.
ஹில்மி தாம் கூறியதை மீட்டுக்கொள்ள ஏழு நாள் அவகாசம் அளித்து அவருக்கு வழக்குரைஞர் கர்பால் சிங் மூலமாக ஓர் அறிவிக்கை அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக மாநில ஆட்சிக்குழுவில் சுகாதார விவகாரங்களுக்குப் பொறுப்பாக உள்ள டாக்டர் அரிப் பஹாருடின் கூறினார்.
“ஹில்மி அவர் சொன்னதை மீட்டுக்கொள்ள சில வாய்ப்புகளைக் கொடுத்தோம். அவர் செய்யவில்லை. அதனால் அவருக்கு அறிவிக்கை அனுப்ப முடிவு செய்தோம்”, என்றாரவர்.
முதலில் நிஞ்சா டாக்டரை கவனிங்கள் அடுத்த இனத்தவரை தொட
கூட பயபடுகிறார்கள்.
எப்படி ஐயா முடியும்??? இனவாத அரசியல் இல்லையேல் அம்னோ அழிந்து விடுமே!!!!
இவர்களின் வாழ்வும் சாவும் இனவாத அரசியளில்தானே இருக்கிறது…
அம்னோகாரர்கள் மாறவே மாட்டார்கள். இவர்களுக்கு ஜால்ரா போடும் ம இ கா காரர்களும் மாற மாட்டார்கள்…