உரிமைகளை வென்றெடுக்க தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமை அவசியம்: இரா.சம்பந்தன்

sambanthanதமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஒற்றுமையாக உரிமைகளை வென்றெடுக்க முன்வர வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

யாழில் மீள்குடியேற்றப்பட்ட முஸ்லிம் பிரதிநிதிகளை நேற்று சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச நாடுகளின் அழுத்தத்தினாலேயே அரசாங்கம் வடமாகாண சபைத் தேர்தலை நடத்தியிருக்கின்றது.

இத்தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் அளித்துள்ள ஆதரவைக் கொண்டு, அனைத்து இனங்களையும் சமமாக மதித்து, மக்களுக்கு நீதி வழங்கவும் பாதுகாப்பு கிடைக்கவும் ஏற்ற வழிமுறைகளை புதிய மாகாண சபை உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்- முஸ்லிம் மக்களுக்க எதிராக இடம்பெறுகின்ற அடக்குமுறைகளுக்கு எதிராக, நாம் சிந்தித்து ஒற்றுமையுடன் எமது கருத்துக்களை முன்வைக்க வேண்டும். சிறந்த முறையில் வட மாகாண சபை நடைபெறுகின்ற போது பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வாய்ப்புக்கள் இருக்கின்றன.

1990ஆம் ஆண்டு வட பகுதியிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டது ஒரு கசப்பான அனுபவம். இனிமேலும் இவ்வாறான வன்முறைச் சம்பவம் நடைபெறமாட்டாது. அன்று தொடக்கம் இன்று வரை வட பகுதியில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றாக வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை யாரும் மறந்து விடமுடியாது.

எந்த சூழ்நிலையிலும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையோடு எங்கள் பலத்தை வெளிக்காட்ட வேண்டும் என தெரிவித்தார்.

TAGS: