கெடா, சுங்கை லிமாவ் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல், பாஸ் ஜெராய் தொகுதி இளைஞர் தலைவர் அஸாம் சமட்டுக்கும் பிஎன் வேட்பாளரான யுனிவர்சிடி சுல்தான் இட்ரிஸ் விரிவுரையாளர் சுஹாய்மி லாஸிமுக்குமிடையிலான நேரடிப் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் 4 இடைத் தேர்தலில் போட்டியிடும் அவ்விரு வேட்பாளர்களின் பெயர்களும் இன்று முறைப்படி அறிவிக்கப்படும் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.