தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் கவனப்படுத்தப்பட்டுள்ள போலீசுக்குச் சொந்தமான துப்பாக்கிகள் காணாமல் போன விவகாரம் தொடர்பில் 24 போலீஸ் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு கூறியுள்ளது.
காணாமல்போன 44 துப்பாக்கிகளில் மீதமுள்ள 20 துப்பாக்கிகள் என்னவாகின என்று ஆராயப்பட்டு வருகிறது என உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி வான் ஜப்பார் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
துப்பாக்கிகள் காணாமல் போனதற்குக் கவனக் குறைவுதான் காரணம் என்று ஒட்டுமொத்தமாகக் கூறவியலாது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
“சில நேரங்களில், அதிகாரி ஆற்றுக்கு அருகில் குற்றவாளியுடன் போராடும் நிலை ஏற்பட்டு அப்போது துப்பாக்கி ஆற்றில் விழுந்திருக்கலாம். எனவே, வெவ்வேறு காரணங்கள் உண்டு”, என்றாரவர்.
ஆற்றில் விழுந்தவைகள் அப்படியே குற்றவாளிகள் கைகளுக்கும் போயிருக்கலாம்!
அமா அமா! துப்பாக்கிகளைத் தொலைத்த 24 போலீசார்களுக்கு சம்பள உயர்வும்,பதவி உயர்வும் கொடுத்திருப்பாங்க…..அதுதான் நடவடிக்கை!
ஆமாம் இந்த ஆயுதங்கள் காணாமல் போன உங்கள் அதிகாரிகளுக்கு
வருட இறுதியில் 6 மாதம் போனஸ் வழங்க வேண்டும் .
ஆற்றில் விழுந்தால் என்ன,கடலில் விழுந்தால் என்ன,முக்குளிப்பு வீரர்களுக்கு தகவல் சொன்னால்,ஆற்றுக்குள்ளே புகுந்து ஆயுதத்தை தேடி வெளியே கொண்டுவந்து விடுவார்களே!கொலைக்கான தடையத்தை தேடி பந்திங் ஆற்றையே கலக்கினார்களே!
துப்பாக்கி காணமல் போய் பல மாதங்களாச்சு , துப்பாக்கி காண போனா, கையெறிகுண்டு கானா போனா, கை விளங்கு கானா போனா என பண்ணியிருக்கணும் , ரிப்போர்ட் பண்ணியிருக்கணும். போலீஸ்காரர்கள் அதை செய்தார்களா?
வெளிநாடுகளில் இந்த மாதிரி ஆயுதங்கல் கானடிச்சுட்டா கடுமையான தண்டனை கொடுப்பாங்க அல்லது வேலையை சாஸ்பெண்ட் பண்ணுவாங்க, வேலையே பறிபோகும் அல்லது உள்ளேயும் போக நேரிடும்.!!! ஆனா இங்கே என்ன நடக்குது ..?!, போலீஸ்காரன் இந்த இந்த பொருட்களை , ஆயுதங்களை காணடிச்சுபுட்டு கமக்கமா இருக்கானுங்கன்னு ‘ஆடிட்டர்’ சொல்ற அளவுக்கு இருக்கு! அவரும் அவிழ்த்து விடலன்னு வச்சுக்குங்கோ…அவ்வளவுதான் அத்தனையும் செத்தவன் கணக்குலதான் இருக்கும்!!!
அது சரி கக்குஸ்லே விழுந்து தொலையிர அளவுக்கா நம்ம போலிஸ்கார ஆயுதங்கள் இருக்கு !!!???
அல்லது பெரிய பெரிய ஆயுதங்களை விழுங்க்கர அளவுக்கா நம்ப கக்குஸ் இருக்கு ? இந்த கேள்விக்கு கக்குஸ் கழுவுறங்களை வச்சு ஒரு கமிஷன் நியமிச்சு உடனடியா இது கக்குஸ் தப்பா , இல்லே ஆயுதங்களோட தப்பான்னு கண்டுபிடிக்கக்னும் !!! என்ன நான் சொல்றது?
அது சரி காண போச்சு காண போச்சுன்னு நம்ப மந்திரி ஜாஹிட் புலம்புறாரே…08 க்கு , 3 லைன் , கீத்தா கிங் கும்பல் …இவங்களுக்கெல்லாம் எப்படி ஆயுதம் அவ்வளுவு சுலபமா கிடைக்குது….? இதுக்கு நம்ப போலிஸ் நிலையத்திலே இருக்கிற கக்குஸ் குழி ரொம்ப பெருசா இருக்கிறதுதான் காரணம்னு நம்ப ஜாஹிட் சொல்லுவாரோ…..சொன்னாலும் சொல்லுவாருங்கோ!!
வடிவேலு புது படம் வந்தாலும் நம்ப ‘சம்செங்’ ஜாஹிட்டும் , ‘ நரி’ நஸ்ரியும் பண்ற லொள்ளு இருக்கே சூப்பரோ சூப்ப்பர் போங்க !!!