இலங்கையில் இலத்திரனியல் பதிவு முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது

இலங்கையர் அனைவரையும் இலத்திரனியல் பதிவுக்கு உட்படுத்தவுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கென தேசிய இலத்திரணியல் பதிவொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப்பதிவுகளை மேற்கொள்வதற்கென 14.5 பில்லியன் இலங்கை ரூபாக்கள் செலவிடப்படவுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக சகலரும் மேற்படி நடைமுறையின் கீழ் இலவசமாக உள்வாங்கப்படவுள்ளனர்.

இது இலங்கையிலுள்ளவர்களின் விபரங்கள் உள்ளடக்கிய தேசிய இலத்திரனியல் பதிவு ஒன்றையே பாதுகாப்பு அமைச்சு மேற்கொள்ளவுள்ளது.

நாட்டின் எதிர்கால நலன் கருதியே இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் ஏற்கனவே ஜுலை மாதம் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நடைமுறையை அமுல்படுத்துவதன் மூலம் இலங்கை நபரொருவரின் தகவலை ஒரு நொடியில் பெற்றுக்கொள்ள வசதியாக இருக்கும் என்றும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

TAGS: