சீனப்பள்ளிகளுக்கு உதவமாட்டேன். சீனர்கள் பாரிசானை ஆதரிக்கிறார்கள் என்பதை அவர்கள் நிரூபிக்க வேண்டும் என்றெல்லாம் சீன சமூகத்திற்கு சவால் விட்ட கெடா மந்திரி புசார் முக்ரீஸ் மகாதிர் இப்போது வேறொரு தொனியில் அவர் அச்சமூகத்திற்கு உதவப் போவதாக உறுதியளித்தார்.
சுங்கை லிமாவ் டாலம், மசீச இடைத்தேர்தல் நடவடிக்கை மையத்தில் நடைபெற்ற ஒரு சந்திப்பில் இதனை முக்ரீஸ் இன்று (அக்டோ[பர் 28) கூறினார்.
“எனது அறிக்கை குறித்து அவ்வளவு நல்ல வரவேற்பு இல்லை என்பது எனக்குத் தெரியும். தயவு செய்து அது குறித்து அலட்டிக்கொள்ளாதீர்கள்”, என்று அங்கிருந்த சீன மக்களின் ஆரவார கைதட்டுதலுடன் கூறினார்.
“சீன சமூகத்தினர் பல கோரிக்கைகளை வைத்துள்ளனர் என்பது எனக்குத் தெரியும். நான் உதவுவேன், காதுகொடுத்து கேட்பேன்”, என்று அவர் மேலும் கூறினார்.
நவம்பர் 4 ஆம் தேதி வாக்களிக்கும் போது உங்களுடைய குழுந்தைகளின் முகத்தை எண்ணிப்பாருங்கள், ஏனென்றால் அந்த நிகழ்ச்சி எதிர்கால சந்ததியினருக்கு “முக்கியமானது”, என்று அந்த சீன வாக்காளர்களிடம் முக்ரீஸ் கூறினார்.
“இது மிகச் சுலபமானது. இரண்டு கோடுகளைப் போடுங்கள்; பெரும் விளைவுகளைப் பெறுங்கள்”, என்றாரவர்.
ஆரம்பித்து விட்டான் இவன் பாம்பு ஆட்டத்தை ??
பிச்சை கேக்கறான் பிசைகாரன்.
KARIYAM NADAKKA VEENDUM ATHANAAL KALAI PIDIPPAN PIRAGU UTHARIVIDUVAAN
நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும் நல்லவர் கெட்டவர் யாரென்றும் பழகும் போதும் தெரிவதில்லை பாழாய் போன இந்த பூமியிலே, முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள் முதுகுக்கு பின்னால் சீறும் முகத்துதி பேசும் வளையும் குழையும் காரியம் ஆனதும் மாறும்.
IF CHINESE VOTE BN THEY ARE TE….AS
ஐயோ சீனர்களின் ஓட்டில் பன்றி வாசனை வருமே பரவாயில்லையா? இப்ப ஒட்டிக் கொள்ளவில்லையோ அவ்வாசனை? நாறுது BN அரசியல் நாடகம்.
அடிடா மவனே பல்டி ! சீனன் கொக்கா என்ன ?