அரசாங்கக் கொள்கைகளை வகுப்பதும் செயல்படுத்துவதும் பிரதமர் துறை(பிஎம்டி)தான் என்பதால் அதற்கு பட்ஜெட்டில் பெரும் நிதி ஒதுக்கப்படுகிறது.
பிரதமர் துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பொறுப்பாக உள்ளன என பிரதமர்துறை அமைச்சர் இட்ரிஸ் ஜாலா கூறியதாக உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது.
“உதாரணத்துக்கு நாட்டின் முதலீட்டுச் செலவினம் மொத்தமும் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவு வழியாகத்தான் வழங்கப்படுகிறது. அது மிகப் பெரிய பிரிவு. பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைக்கும் அமைப்பாக அது விளங்குகிறது. எனவேதான் அதற்குப் பெரிய ஒதுக்கீடு தேவைப்படுகிறது”.
பிரதமர்துறைக்கு முன் எப்போதையும்விட அதிகமாக ரிம16.45 பில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாக மலேசியாகினியில் வெளியிடப்பட்டிருந்த செய்தி பற்றிக் கருத்துரைத்தபோது இட்ரிஸ் இவ்வாறு கூறினார்.
போடா அறிவுகெட்ட ப… மக்களை பணத்தை சூறையாடி diomand ரிங் வாங்கி பொண்டாடிக்கு கொடுக்கவ ?