எம்பி: மாடுவெட்டுதல் கல்வியின் ஒரு பகுதியாகும்

mp1பள்ளிக்கூடங்களில் மாடுவெட்டுதல் என்பது முஸ்லிம் மாணவர்களின் கல்வியில் ஒரு பகுதியாகும் என பிஎன் எம்பி ஒருவர் கூறினார்.

அது இஸ்லாமியக் கல்வியில் ஒரு பகுதியாகும்  என  ஷாபுடின் யாஹ்யா (பிஎன் -தாசெக் குளுகோர்) நாடாளுமன்றத்தில்  பட்ஜெட் விவாதத்தின்போது கூறினார்.

“அது மாடுகளை எப்படி முறைப்படி வெட்டுவது என்பதை விளக்கும் ஒரு செய்முறை பாடமாகும். அது தேவைதான்” என்றவர் சொன்னார்.

அதில் இந்துகளை அவமதிக்கும் நோக்கம் கொஞ்சமும் இல்லை என்று கூறிய ஷாபுடின், இந்தியர்களும் சீனர்களும் நடத்தும் ஊர்வலங்களை முஸ்லிம் சமூகத்தினர் சகித்துக் கொண்டிருப்பதைச் சுட்டுக்காட்டினார்.