பாகிஸ்தானில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உயிருடன் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் லாகூரை அடுத்த தோபா தெக்சிங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சித்திக்மொகல்.
நேற்று பள்ளிக்கு சென்ற இவரது 13 வயது மகள், வீடு திரும்பவில்லை.
இதற்கிடையே சிறுமியை இரண்டு பெர் கடத்தி சென்றதாக சிலர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பெற்றோர்கள் தேடிப் பார்த்தும் சிறுமி கிடைக்கவில்லை.
இந்நிலையில் அங்குள்ள சாலையோரம் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
உடனடியாக விரைந்து வந்த பொலிசார், சடலத்தை எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அதில், குறித்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், கொலைக் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


























இதுதான்
பாக்கிஸ்தான்
…….
பாகிஸ்தானுக்கு அழிவு காலம் நெருங்கி விட்டது .