சுங்கை லிமாவ் இடைத் தேர்தலில் நேரடிப் போட்டியில் குதித்துள்ள வேட்பாளர்கள் இருவரும் இன்று காலை வாக்களிக்க வாக்களிப்பு மையங்களுக்குச் சென்றார்கள்.
பாரிசான் நேசனல்(பிஎன்) வேட்பாளர் அஹ்மட் சொஹாய்மி லாஸிம் காலை மணி 8.47க்கு அவரின் மனைவியுடன் சென்று ஸ்கோலா கெபாங்சான் டூலாங்கில் வாக்களித்தார். பாஸ் கட்சியின் முகம்மட் அசாம் அப்துல் சமட், 8.30க்கு ஸ்கோலா கெபாங்சான் புக்கிட் புசாரில் தம் வாக்கை அளித்தார்.
இருகட்சி ஆதரவாளர்களும் தங்களின் ஆதரவைக் காட்ட காலை 7மணிக்கே வாக்களிப்பு மையங்களில் திரண்டிருந்தனர்.