பள்ளிகளில் மாடு வெட்டப்படுவதைத் தீவிரமாக ஆதரித்ததற்காக மலாய் இனவாத அமைப்பான பெர்காசா இந்நாட்டின் இந்து சமூகத்தினரால் வன்மையாகக் கண்டிக்கப்பட்டது. ஆனால், இவ்விவகாரத்தில் பெர்காசாவின் நிலைப்பாட்டை பேரின்பம் (New Indian Welfare and Charity Association) என்ற அமைப்பு ஆதரிக்கிறது.
“(பள்ளிகளில்) மலாய்க்காரர்கள் கொர்பான் செய்ய விரும்பினால், அதில் தவறு ஏதும் இல்லை. முந்திய சம்பவங்களில், தலைமை ஆசிரியர்கள் இவ்விவகாரத்தை பெற்றோர் ஆசிரியர் சங்கங்களுடனும் பள்ளி பணியாளர்களுடனும் விவாதித்துள்ளனர்.
“இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டியதில்லை”, என்று இன்று அவரது அமைப்பு ஏற்ப்பாடு செய்திருந்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்புக்குப் பின்னர் பேரின்பத்தின் தலைவர் யு.தாமோதரன் கூறினார். பெர்காசா உறுப்பினர்களும் அந்த உபசரிப்பில் இருந்தனர்.
போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்ற வரையில், தேசியப்பள்ளிகளில் முஸ்லிம்களால் மாடு வெட்டப்படுவது ஒரு பிரச்னையாக இருக்கக் கூடாது என்று தாமோதரன் கூறினார்.
“எடுத்துக்காட்டு, ஒரு குறிப்பிட்ட நாளில் கொர்பான் நடக்கப் போகிறது என்றால், இந்திய மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருக்க அனுமதிக்கலாம்.
“அது தேசியப்பள்ளிகளில் நடைபெறுகின்ற வரையில், அது ஏற்புடையதே. அது தமிழ்ப்பள்ளிகளில் என்றால், அது சரியல்ல ஏனென்றால் இந்து வழிபாடு அங்கு நடத்தப்படக் கூடும்”, என்றாரவர்.
கடந்த ஜூலையில், பெர்காசா, பேரின்பம் மற்றும் பெர்சிஸ்மா என்ற சீனர்களைக் கொண்ட அமைப்புடன் இனைந்து மிராக் (Mirac) என்ற மலேசிய இனங்களுக்கிடையிலான மன்றம் என்ற அமைப்பை உருவாக்கின. இதன் நோக்கம் பெர்காசா ஓர் இனவாத அமைப்பு என்ற தோற்றத்தை அகற்றுவதாகும்.
தேசியப்பள்ளிகளில் மாடுகள் வெட்டும் விவகாரத்தில் பெர்காசா உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது. ஏதேனும் எதிர்ப்பு இருந்தால், அதை ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும், ஏனென்றால் அவர்கள் இஸ்லாத்தின் பாதுகாவலர்கள்.
இப்ராகிம்: பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம்
இவ்விவகாரம் குறித்து இப்ராகிம் அலியிடம் தீபாவளி நிகழ்ச்சியின் போது கேட்டதற்கு மிராக்கின் சார்பில் எவ்வித நிலைப்பாட்டையும் தெரிவிக்க மறுத்து விட்டார்.
“நாங்கள் (மிராக்) இந்த பிரச்னையை மெதுவாகக் கையாள்கிறோம். அரசியல் கட்சிகள் உருவாக்கியிருக்கும் உணர்ச்சிகள் அடிப்படையில் நாங்கள் இதில் அவசரப்பட விரும்பவில்லை. நாங்கள் பதற்றத்தை ஏற்படுத்த விரும்பவில்லை”, என்று அவர் கூறினார்.
இந்த தமிழ்ப் பித்தன் மாடு தின்பவன் போல பேசுகிறான்.. முதலில் இவன் போன்றவர்களை உதைக்க வேண்டும். மாட்டுக்குக் கூட ஏன் ஆரியனை இழுக்கின்றாய்.. கையாலாகதவன்.. இது சமய விவகாரம் மட்டும் அல்லடா.. பண்பாடும் கூட…
SELVA RAJ ,,,,, சூப்பர்மா .அப்படி போடு ,அடுத்து நோன்பு பெருநாளுக்கு மாடு வெட்டி சூப்பு வைப்பானுங்க இந்த தமிழ் பைத்தியக்கார பித்தனை போயி மாட்டு சூப்பு குடிக்க சொல்லுங்க
மேலே படத்தில் இருக்கும் ரெண்டு முகர கட்டய பாருங்க, அம்னோவின் தாங்கிகள் மாதிரி இருக்கணுங்க
படத்தில் இர்ருக்கும் அந்த இரண்டுபேரும் முஞ்சை பார்த்தல் நல்ல மாடு தின்னும் அசாமி போல இருக்கனுங்க!இவனுங்கு ரெண்டு பேரத்துக்கும் சூப் துலங் லேம்பு குடுகண்ணும்!
SELVA RAJ அவர்களே , எனக்கு ஒரு சந்தேகம் !? மேலே உள்ள ரெண்டு கருப்பு முஞ்சிகளும் பண்டி இறைச்சி தின்னுவானுங்க போலிருக்கே ?!
டேய் அறியு கேட்ட பேரின்ப தலைவா..வி தாமோதரன்..உன் சுய லாபத்துக்காக எட்டப்பன் வேலை பர்கதே…உனக்கு மாடு மோதி தன் சாவு..