கோலாலலும்பூர் மாநகராட்சி மன்றம் ஸ்ரீமுனீஸ்வரர் காளியம்மன் ஆலயத்தை உடைக்கவில்லை; அதை அழகுபடுத்தப் போகிறது என்கிறார் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் மன்சூர் கூறினார்.
ஜாலான் பி.ரம்லியில் உள்ள அது ஒரு சிறு கோயில் என்று கூறிய அமைச்சர் அங்கு சில சட்டவிரோத நடவடிக்கைகள் நடப்பது அமைச்சுக்குத் தெரிய வந்துள்ளதாக சொன்னார்.
“அண்மையில் குருக்கள் ஒருவரை அனுப்பி வைத்திருந்தோம். அவர் அங்குள்ள குளியலறையில் அவர் மதுபானங்கள் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டார்.
“கோயிலைத் தவறாக பயன்படுத்தக் கூடாது”, என்றவர் குறிப்பிட்டார்.
“அந்த ஆலயத்தை அழகுபடுத்தி அதைச் சுற்றுப்பயணிகளைக் கவரும் இடமாக்க விரும்புகிறேன்”, என்றாரவர்.
அழகுபடுத்தும் பணியை விரைவில் செய்து முடிக்க எண்ணி இருப்பதாகவும் தெங்கு அட்னான் தெரிவித்தார்.
நம் நாட்டில் இவ்வகையான குட்டி கோவில்கள் எண்ணிலடங்கா…!!இங்கே தெய்வத்துக்கு பஞ்சம் இல்லை,சாமியார்களுக்கு பஞ்சம் இல்லை,பாபாக்களுக்கு பஞ்சம் இல்லை,குருஜிகளுக்கு பச்ஞம் இல்லை.இருந்தும் இந்த சமுதாயம் நாட்டு வளர்ச்சியில் பின்னால் தள்ளப்பட்டுள்ளது!!! ஏன்..ஏன்…ஏன்…? காரணம் இங்கு கூறப்பட்டுள்ள வழிபாடுகள் மனிதனின் சுல நலத்தினால் உருவானவை.இங்கு தூய்மையான பக்தி இல்லை.பக்தி என்ற பெயரில் வியபாரம் செய்வது.
இதைத்தான் நான் பல காலமாக சொல்லிவருகிறேன் ,எவன் கேட்டான் ?
ஆலயங்களை உடைத்தவுடன் இவர்கள் சொல்லும் கதை இது தெங்கு அட்னான் இதற்கு படில்சொல்லியே ஆகவேண்டும் ஆலயத்தை அழகு படுதுகிறேன் என்பது பிறகு அங்கு தீய சம்பவம் நடக்கிறது என்பது என்று சொல்வது எல்லாம் இவர்களுக்கு வாடிக்கையாக போய்விட்டது இந்த ஆலயம் நேற்று தோன்றிய ஆலயம் இல்லை 101ஆண்டு சரித்திம் பெற்ற ஆலயம் இந்திய அரசியல் கட்சி தலைவர்களே இனியும் பொருத்தது போதும் இந்த ஆலய பிரச்சனைக்கு அரசியல் பேதம் இன்றி ஒன்று கூடி போராடுங்கள் வாய்மையே வெல்லும் என்பது நிச்சயம் ஜால்ரா தட்டும் தலைவர்கள் நமக்கு தேவை இல்லை
Typed with Panini Key
கோவிலை உடைப்பதற்கும்,அகற்றுவதர்க்கும்,நல்ல முறையில் சாங்கிய,சம்பர்தாயமும் பின்பற்றிவரும் இந்தியர்களிடையே ,தெங்கு அட்னான் சாராய கடை போன்று கேவலப்படுத்தி அராஜகமாக கோவிலை உடைத்துவிட்டு, கதை சொல்லுகிறான்,இதுவரையிலும் உடைத்தெறிந்த அத்தனை கோவில்களிலும்,மதுபானம் இருந்ததா? ஏன் பள்ளிவாசலுக்குல் சுற்றுப் பயணிகளை அனுமதிப்பதில்லை ? திடீர் என்று நம் இந்து கொவில்களிடம் என்ன அக்கறையாம் ? யாரைக்கேட்டு முடிவு செய்தாராம் ?
ஓர் இந்து எப்படி இஸ்லாத்தின் தொழுகை இடத்தை பற்றி பேச அருகதை இல்லையோ அது போல ஒரு முஸ்லிமான டெங்கு அட்னான் இந்து சங்கத்தின் வாயிலாகவோ அல்லது மற்ற இந்து சமய அரசுசார்பற்ற நிறுவனத்திடமோ பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். அதைவிடுத்து செய்த தவறுக்கு நாயம் கற்பிக்க கூடாது. இவனுடுய செயல் கண்டனத்திற்கு உரியது.
ஒரு குருக்கள் சென்று கண்டார் மது பாட்டில்களும் மது பானங்களும் இருப்பதை.
குட்டிக் கோவில்கள் ! எப்படி இந்த குட்டிக் கோவில்கள் உருவானது என்பதை விளக்கவேண்டுமானால் இதற்க்கு ஒரு நீண்ட கட்டுரையே எழுதவேண்டும். காளான்கள் போல் ஆங்காங்கே உருவான கோவில்களை பற்றி பலர் கருது கூறிவிட்டனர் , 100 ஆண்டுக்கால கோவில்கள் இன்று நமக்கு குட்டிக் கோவிலாக தெரிகிறது , இருபதற்கு காரணம் யார் ? உதாரணதிற்கு : இன்று ஷா அலாம் பெரிய மாநகரம் ! மாட மாளிகைகள் ! கோடீஸ்வரர்கள் வாழும் கோட்டை ! இந்த கோட்டைக்கு நடுவில் இடுக்கு முடுக்கில் நம் பாட்டன் காலத்து கோவில்கள் ,அங்கும் இங்கும் ஊசலாடும் தமிழ் பள்ளிகள்? ஏன் இந்த நிலை ? யார் அறிவார் இந்த கதை ? 50 ஆண்டுகள் முன்னர் இந்த வட்டாரம் “தமிழன் ” கோட்டை !! தலைநிமிந்து நின்ற கோவில்கள் அரசியல்வாதிகள் சூழ்ச்சியால் , அவர்கள் லாம் தேட , நம் இந்தியர்களின் தேவையை , வசதியை புறக்கணிக்கப்பட்டதால் – இன்று இந்த கோவில்கள் குட்டிக் கோவிலாக தெரிகிறது ! ( மிட்லான்ஸ் கோவிலை தவித்து ). 100 ஆண்டு கோவிலுக்கு அரசாங்கம் ஏன் இடம் ஒதுக்க வில்லை ? நாடு முழுவதும் இதே கொடூரம் நிலவினால் நம் நிலை என்ன ? பத்துமலை எடுத்துகொள்ளுங்கள் , நடராஜாவை தவிர வேறு யாரும் கிட்ட போகமுடியாது – இதுதான் செட்டியார் கோவில்களிலும் ?? ஆகா , குட்டிக் கோவில்கள் உருவாவதற்கு அஸ்திவாரம் போட்டதே அரசாங்கம் தான் . மன்னியுங்கள் !
குருக்கள் என்றல் எத்தனை? ஒரு குருவ அல்லது பல குருக்கள் லா?
செட்டியார் கோவில்களும் யாழ்ப்பாணத் தமிழர்களின் கோவில்களும் நல்ல முறையில் கட்டி நல்ல முறையில் வழிபாடும் நடக்கின்றது. இந்தக் குட்டி குட்டிக் கோவில்களுக்குச் சொந்தக்காரர்கள் தான் நம்மைப் போன்ற நடைமுறைத் தமிழர்கள். அது தவறல்ல. நமது தவறெல்லாம் அந்தக் கோவில்களுக்கு எந்த மேம்பாட்டையும் நாம் கொண்ட வரவில்லை. நான் அறிந்த ஒரு கோவில். ஒரு பெரியவர் பந்தல் போன்று நான்கு கம்புகளை ஊன்றி அங்கு வழிப்பட்டு வந்தார். அங்கு பன்றியின் பற்கள் தொங்கும். பீர் போத்தல்கள் கிடக்கும். அவ்வளுவு தான். ஆனால் இன்று அதே இடத்தில் பல லட்சங்கள் (அரசாங்க உதவியுடன்) செலவு செய்து பிரமாண்டமான கோவில் உருவாகிவிட்டது. கொஞ்சம் பொது நலம் இருந்ததால் இப்படி ஒரு வளர்ச்சி. அது தான் நமக்கு வேண்டும்.