இலங்கை அரசுக்கெதிராக எழுப்பப்படும் போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் பற்றி இலங்கை மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.
விடுதலைப்புலிகளுடனான 30 ஆண்டு காலப் போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று கூறிய அவர், ஆனால் தனது அரசு தமிழ்ப்புலிக் கிளர்ச்சியாளர்களைத் தோற்கடித்ததன் மூலம் இந்தக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக கூறினார்.
போர்க்குற்றங்கள் குறித்த எந்த ஒரு புகார்களும் தனது நாட்டின் நீதி அமைப்பின் மூலம் விசாரிக்கப்பட முடியும் என்றும் அவர் கூறினார்.
காமன்வெல்த் உச்சிமாநாடு இலங்கையில் நாளை வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள நிலையில் அவரது இந்தக் கருத்துக்கள் வருகின்றன.
இந்த உச்சிமாநாட்டை, இலங்கையின் மனித உரிமைச் செயல்பாடுகள் குறித்த சர்ச்சையில், இந்திய,கனடிய மற்றும் மொரிஷியஸ் பிரதமர்கள் புறக்கணிக்கின்றனர். -BBC
உகண்டாவில் சில தசாப்தங்களுக்கு முன்பு ஒரு ‘மனிதநேய மாணிக்கம்” ஒன்று இடி ஆமின் என்ற பெயரில் தன விரோதிகளைக் கொடூரமாகக் கொன்று அவர்களின் இருதயங்களை சுட்டு சுவையுடன் உண்டு களிப்புக்கொண்டது. அதுவும் தன ஆட்சியின் கீழ் உகண்டாவில் “everything is fine here” என்று நாட்டிலிருந்து விரட்டப்படும் வரை கூறிக்கொண்டுதான் திரிந்தது. அப்போது வட இந்திய வணிகர்கள் அநேகர் அழ்துக்கொண்டே உகண்டாவை விட்டு வெளியேறியதால் அனைத்துலக அரங்குகளில் (CHOGM உட்பட) இந்தியா உகண்டாவின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழங்கியது. ஈழத்தில்…….?! உணர்வற்ற மதராசிகள்தானே… படட்டும்… பரவாயில்லை. அடிமைத் தமிழனின் அவல விலங்கை அறுக்கவந்த தலைவரின் தியாகமும் நிறைவேறவில்லை…, இது வரையில்.
பீஜி தீவில் 1987ல் சித்திவேணி ராபுக்கா அங்குள்ள இந்தியர்களுக்கு (பெரும்பான்மையோர் வடவர்) எதிராக நடத்திய புரட்சியின் போதும் இந்தியா துடிதுடித்தது. உலக அரங்கில் பிஜியைத் தண்டிக்கக் வேண்டும் என குரல் கொடுத்தது. CHOGM -ல் இருந்து வெளி ஏற்றப்பட வேண்டும் என் உரக்கக் கூவியது. (இந்த புரட்சி நடப்பதற்கு மகாதிர் மூலகாரணமாக இருந்தார் எனவும் அப்போதைய செய்தி.) அங்கு இந்தியர் இராணுவத்தால் கொள்ளப்படவில்லை; கற்பழிப்புகள் இல்லை. ஆனால் ஈழத்தில் நடந்துள்ளது அதைவிட எத்தனையோ மடங்கு கொடூரம். இத்தாலிகாரியை குஷியாகக முன்டாசுக்காரனும் கேரள மேனன்களும் செய்த/செய்யும் சதி. இதற்கு தமிழர் நாட்டு செல்வாக்கு மிக்க தமிழர் விரோத பார்ப்பனர் (ஒரு சிலர்) கூட்டமும் “‘நடத்து2′”….. என துதிபாடுதல். அறியாமையில் தமிழர் கூட்டம் அம்மா நடுத்தும் டாஸ்மாக் கடைகளிலும், சினிமாக்களிலும் முட்டி மோதிக்கொண்டு….!!.
நீ மறைக்க, வெட்கப்பட, ஆறு அறிவு உள்ள மனிதனா? வள்ளுவரும் வள்ளலாரும் சிரிக்க போகிறார்கள் .நீ கும்பிடும் புத்தர் கூட அழுவார் .
நீர் கூறுவது உமைதான். அதுதான் பெரும்பாலும் சேனல் 4 மூலம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டதே…..!!! இனி மறைக்க என்ன உள்ளது. இனிமேல் ஆகவேண்டியது…., வெளியே வந்தவை குறித்து முறையான நீதி விசாரணை; பின்பு அதற்கு ஏற்ற கண்டிப்பு மிகு சர்வதேச நடவடிக்கை. அப்போதும் . இந்த துரோகி இந்தியா உன்னைக் காப்பாற்ற முயலும் – மல்லாடி2………..
.