மசீச இளைஞர் பகுதியின் மத்திய செயல்குழு, அதன் தலைவர் வீ கா சியோங்கும் துணைத் தலைவர் மா ஹங் சூன்னும் முறையே துணைத் தலைவர், உதவித் தலைவர் பதவிகளுக்குப் போட்டியிட வேண்டும் என ஒருமனதாக பரிந்துரைத்துள்ளது.
“மசீசவுக்கு இளம் இரத்தம் தேவை என்று முடிவுசெய்து மத்திய செயல்குழுவினர் என்னையும் மா-வையும் அப்பதவிகளுக்கு ஒருமனதாக பரிந்துரை செய்திருக்கிறார்கள்”, என வீ செய்தியாளர்களிடம் பேசியபோது கூறினார்.
இதற்கு அவரின் முடிவு என்ன? அது வேட்பாளர் நியமன நாளில்(டிசம்பர் 16)தான் தெரியும் என்றார்.