யாழ். நகர் மற்றும் அதை அண்டிய பிரதேசங்களில் நேற்று மாலை முதல் பெருமளவு இராணுவம் குவிக்கப்பட்டு ரோந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாள் மற்றும் நாளை மாவீரர் நாள் என்பன அனுஷ்டிக்கப்படக் கூடும் என்ற அச்சத்தில் நேற்று மாலை முதல் யாழ். நகர் மட்டுமன்றி கிராமப் புறங்களிலும் திடீரென இராணுவத்தின் நடமாட்டம் அதிகரித்து ரோந்து நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.
இதேவேளை மாவீரர் தினத்தை முன்னிட்டு ஆலயங்கள் மற்றும் பொது இடங்களில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்த பொலிஸாரினால் தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினரும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்கள் வீர திருமகன்!
மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வாருங்கள்
பிரபாகரன் பிறந்த நாளை மிகைபடுதுவதால் பயன் ஒன்றும் இல்லை.. புகல்வதில் வீரர் தமிழன்.செயலில் பின் நோக்கி ஓடுவதிலும்
சிறந்தவன் தமிழன். பிரபாகரர் இவரின் கனவை செயலாக்க நாம் என்ன செயல்படகூடும் என்ன்பதை யோசிப்பது சிறந்த பயனுள்ள செயலாகும்
சாதிக்க பிறந்தவனே ,தமிழர்க்கு தலைமகனே ,செய்தி ஒன்று தருவாயோ ,நின் பதிகை கண்டே அலறுகிறது ,அலறிமாளிகைகள் ,அடுத்த மூப்பில் அடிஎடுத்து வைக்கும் தலைவா, எம் தலைவா ,என்றும் மங்கா புகழுடன் ,செல்கின்றோம் நீங்கள் காட்டிய வழியில் ,[மலரட்டும் தமிழ்ஈழம் ].
observer! நீங்கள் அடிக்கடி பின் நோக்கி ஓடியிருப்பீர்கள்,அல்ல ஈழ திருமகன்! தன் மண்ணில் கடைசி நேரம் வரை போர் செய்தான் வீரத்திருமகன்! அது உங்களை போல் பார்வையாளர்களுக்கு அவன் தியாகம் புரியாது!!!
http://www.tamilwin.com/show-RUmrzBRaMakty.html
observer! அவர்களே இந்த காணோளியை பார்க்கவும்.
http://www.tamilwin.com/show-RUmrzBRaMakty.html