விலை உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் வேண்டாம்: இப்ராகிம் அலி

aliமக்கள் வாழ்க்கைச் செலவு உயர்வதைக் காரணம் காட்டி தெரு ஆர்ப்பாட்டத்தில் இறங்கக்கூடாது என மலாய் உரிமைக்காக போராடும் பெர்காசாவின் தலைவர் இப்ராகிம் அலி கேட்டுக்கொண்டிருக்கிறார்.

“அப்படிப்பட்ட செயல்களால் நிலைமை மேலும் மோசமாகும்”, என இப்ராகிம் செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார்.

“என்னைப் பொறுத்தவரை, பெர்காசா போன்ற என்ஜிஓ-கள் அரசாங்கத்துக்கு மகஜர் கொடுப்பதே மேலானது ”, என்றாரவர்.