தேசிய கல்வித் திட்டம் என்பது நாட்டில் “ஒருமொழிக் கல்வி மட்டுமே” என்ற நிலையை உருவாக்கும் 1956ஆம் ஆண்டு ரசாக் அறிக்கையின் “முடிவான குறிக்கோளை”ச் செயல்படுத்தும் ஒரு வழிமுறையாகும் எனச் சீனக் கல்விநலக் குழுவான டொங் சொங் கூறியுள்ளது.
கல்வி செயல்திட்டத்தைப் புரிந்துகொள்ளாமல் பேசுகிறார்கள் என கல்வி துணை அமைச்சர் மேரி யாப் அண்மையில் குற்றம் சாட்டியதற்கு டொங் சொங் குழுவினர் இவ்வாறு எதிர்வினை ஆற்றியுள்ளனர்.
தாய்மொழிக் கல்வி பற்றி டொங் சொங் பயப்படுவது வீண். செயல்திட்டத்தில் தாய்மொழிப் பள்ளிகளுக்காகவே ஒரு தனி அத்தியாயம் உண்டு என்று மேரி கூறினார்.
ஆனால், டொங் சொங் அதை ஏற்கவில்லை.
“கல்வி செயல்திட்டம் பற்றி அறிவித்த துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான முகைதின் யாசின், ரசாக் அறிக்கையின் கொள்கைகளையும் நோக்கங்களையும் முழுமையாக செயல்படுத்த முடியுமா என்பதை அறிய மிகுந்த கவனம் செலுத்தப்போவதாக பல இடங்களில் குறிப்பிட்டு வந்துள்ளார்”, என டொங் சொங் கூறியது.
அச்செயல் திட்டத்தில் தாய்மொழிக் கல்வி பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தாலும் சீன, தமிழ்ப் பள்ளிகளை “விளிம்பு நிலைக்கு”த் தள்ளிச்செல்லும் “சாதகமற்ற கொள்கைகள்” அதிகரித்து வருவதாக அது கூறிற்று.
மற்றவற்றோடு, “ஒரே-இன நாடு” என்ற நிலையை உருவாக்கும் நோக்கில் தாய்மொழிப் பள்ளிகளில்கூட பகாசா மலேசியா கற்பிக்கும் நேரம் கூட்டப்பட்டிருப்பதை அது சுட்டிக்காட்டியது.
இணைய மூலமும் நமது எதிர்ப்பினைத் தெரிவிக்க ஏற்பாடு செய்யுங்களேன்.
பழனி வேலு ………………றான் ??
அதுவும் முன்னேற்றகரமானதாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் வக்ரபுதியுடன் மற்றவர்களை அடக்கி ஒடுக்க வேண்டும் எனும் தீய எண்ணம் உடைய அம்னோ ஓநாய்களின் கோட்டம் அடங்கும் அல்லது அடக்கப் படும். இறைவா..
மலாயாவை ஆண்ட டச்சு,போர்த்துகீசியர், ஆங்கிலேயர் அனைவரும் அன்னியர்தானே. இந்தியர்கள் நாட்டை வளப்படுத்த கொண்டுவரப்பட்டவர்கள்.மற்றவர்கள் இந்நாட்டுக்கு வந்தவர்கள் என்பதை அழிக்கப்படாத வரலாறு சொல்லும். முன்னவன் புரிந்த ஆட்சி முறையையே இப்போது உள்ளவன் கடைப்பிடிக்கிறான். மொழி,பண்பாடு.கலாச்சாரம் ஆகியவற்றை இரவல் கொடுத்த இனம் நம் இனம், ஆனால் நாம் இன்று இரவல் வாங்கியவனிடம் சலுகைக்கும், உரிமைக்கும் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆணவம் கொண்டவன் அழியும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பரம்பொருள் அறிவார்.
பழனிவேலுவும் MIC புடுங்கரணுங்க மோகன் மோகன்!!!
தற்போதைய மலாய்க்காரர்கள் முந்தய சரித்திரத்தை அறியாவர்கள்.அதிலும் காகாதிர் பதவிக்கு வந்த பின் மற்ற இனத்தவர்களின் பங்களிப்பை எல்லா வகையிலும் அழித்த துரோகி. ஆனால் MIC – MCA துரோகிகள் இவன்களுக்கு துணை போனதே மானக்கேடு
………..பயிற்சி