“அல்லா” விவகாரத்தில் மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ரோமன் கத்தோலிக்க திருச்சபை பெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டை அந்நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என்று ஆறு மாநில இஸ்லாமிய மன்றங்களும் ஒரு சீன முஸ்லிம் அமைப்பும் கோரிக்கை விடுத்துள்ளன.
மேல்முறையீடு செய்வதற்கு அனுமதி கோரும் கத்தோலிக்க திருச்சபையின் மனுவில் முன்வைக்கப்பட்டுள்ள சட்டக் கேள்விகள் அந்த உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ள தேவைகளைப் பூர்த்தி செய்ய தவறி விட்டன என்று ஆட்சேபம் தெரிவிக்கும் இஸ்லாமிய அமைப்புகளின் சத்தியப் பிரமாணத்தில் கூறப்பட்டிருப்பதை மலேசியாகினி கண்டுள்ளது.
திராங்கானு, கெடா, ஜொகூர், மலாக்கா, கூட்டரசுப் பிரதேசம் மற்றும் சிலாங்கூர் மாநிலங்களின் இஸ்லாமிய மன்றங்களும் மலேசிய சீன முஸ்லிம் சங்கமும் அந்த கோரிக்கையை விடுத்த அமைப்புகளாகும்.
மதியற்ற போராட்டத்தில் மனிதன் இறங்கி விட்டால், வீழ்வது மனித இனமே! இறைவன் அல்ல. சிவ, சிவ.
மெய்யியல் தத்துவத்தையே விவரித்து வரையறை வகுக்காத இரு பெரு மதங்கள், கள்ளுண்டு மதமேறிய மந்தி போன்று இறைவனின் திருநாமத்துக்கு போராடுவதைப் பார்க்கும் போது வேடிக்கையாக உள்ளது.
அது நடக்காதே! நம் நாட்டு மக்கள் பணத்தை பெரும் அளவு சுட்டு வெளி நாட்டு வங்கிகளில் அம்னோ கொள்ளையர்கள் பதுக்கி வைத்திருக்கும் முழு விபரம் vatican கையில் ஆகையால் பெரும் சிக்கல்! ஆனால் அதுக்கும் ஒரு வழி இருக்கிறது! பிரச்னையை எழுப்பும் அனைவரையும் datuk ஆக்கி விடுங்கள்……(இன்னொரு பக்கம் ஆளும் கட்சியின் திருடர்கள் கூட்டம் பெருகி கொண்டே போகும்,anyway அது small matter)……1Malaysia semua boleh…..!
உலக முஸ்லிம் சமூகமும், குரானிலும் தடை சொல்லப் படாத ஒன்றை அம்னோ என்ற முஸ்லிம் அல்லாத அமைப்பு தடை விதிக்க சொல்லுகிறது. இது அல்லாவுக்கே வெளிச்சம்.
மதம் மனிதனை கெடுக்கும் போதைப்பொருள்..! என்று ஒரு தத்துவ மேதை சொல்லி இருக்கிறார். அது உங்களைப்போன்ற வெறியர்களுக்கு சரியாகத்தான் உள்ளது..?
…………………… மதத்தை பின்பற்றாத நாடுகளை அமைதியாக இருக்க விடமாட்டார்கள்.
தேனீ , அறுமையாக சொன்னீர் ..
கிறிஸ்த்துவ சமய விவகாரங்களில் உலக முஸ்லிம்கள் தலை இடுவது இல்லை, ஆனால் கிறிஸ்த்துவர்கள் அப்படி இல்லை குழப்பத்தை உண்டாக்கி கொண்டே இருக்கிறார்கள். இஸ்லாத்தில் இரு பிரிவுகள் மட்டுமே உள்ளது சன்னி மற்றும் சியாஹ் ( அதரவாளர்கள் என்று அர்த்தம்) ஆனால் கிறிஸ்த்துவ மதத்தில் பல பிரிவுகள் உள்ளது அதை பத்தி முஸ்லிம்கள் எதாவது சொல்லியிருப்பார்கள இல்லை என்றைக்காவது குழப்பத்தை உண்டு பன்னிருப்பார்களா?
இந்த மத வெறி மர மண்டயன்கள் நாய் வால் போல் .இவன்கள்.திருந்த மாட்டான்கள்.
அல்லா மாலிக்
மதம் மனிதனை பிரிக்கும் ,மனிதநேயம் மனிதனை ஒற்றுமையுடன்
வாழ வழிவிடும் ,2000-3000 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்த
மதத்தினால் மனிதர்கள் மோதிக்கொள்ளும் அவலநிலை தொடர்கிறது ,கடவுள் ஒருத்தர் இருந்தால் அவர் எல்லோருக்கும்
சொந்தம் ,ஒரு மதவாதி மட்டும் சொந்தம் கொண்டாடினால் கடவுள்
மற்ற மதவாதிகளுக்கு சொந்தம் இல்லையா . இல்லாத ,கான முடியாத கடவுளை எப்படி கூப்பிட்டால் என்ன யார் கூப்பிட்டால் என்ன , சண்டை வேண்டாம் , பேசாம அவர்ரவர் பெற்றோர்களை கும்பிடுங்கள் அவர்தான் உங்கள் கடவுள் ,அதனால் தான் தந்தை பெரியார் கடவுள் இல்லை இல்லவே இல்லை ,கடவுளை கண்டுபிடித்தவன் காட்டு மிராண்டி என்று கூறினார நைனா .
தமிழ் பித்தரே, தந்தை பெரியார் கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்று வலியுருத்தியதர்க்குக் காரணம் ஆரியன் வருணாசிரம கோட்பாட்டைக் தனது கையில் எடுத்துக்கொண்டு மேலோர், தாழ்ந்தோர் என வரையறையிட்டு கடவுளரை தாழ்ந்தோர் எனப்படுபவரிடம் இருந்து விலக்கி வைத்ததால். வைணவத் தெய்வங்களைத் தனது பாரம்பரிய சொத்தாக அகப்படுத்திக் கொண்டு, பக்தி மார்க்க மூட நம்பிக்கைகளை தாழ்ந்தோர் எனப்படுவோரிடம் ஏவிவிட்டதால் “கடவுளைக் கண்டுபிடித்தவன் காட்டுமிராண்டி” என்றார். அந்த அடைப்பெயர் ஆரியனனுக்கே தகும் காரணம் அவாக்கள் மனித நேயத்தை மறந்து காட்டுமிராண்டித் தனமாக நடந்துக் கொண்டதால். பக்தி பரவசத்தால் தில்லை நடராசரைக் காண தெற்கு வாயில் வழியாக வந்த நந்தனாரை “நெருப்பிலிட்டு” தூயப்படுத்தி, “தீட்டுப்பட்ட” அவ்வாயிலையே இன்று வரை மூடி வைத்துள்ளனர் தில்லை தீட்சிதர்கள். இவர்களே பெரியார் சொன்ன “காட்டுமிராண்டிகள்”. தந்தை பெரியார் இன்னும் ஒரு படி மேல் சென்று உண்மையான சைவ நெறியை கற்றுத் தேர்ந்து தமிழர்களுக்குப் போதித்து இருந்தால் இன்று அவர் சான்றோராக நம்மிடையே வாழ்ந்திருப்பார். ஆரியன் இன்று சிறுபான்மையினராகி, அவாக்கள் செல்வாக்கு சரிந்த நிலையில் இருப்பதால், வேள்வி நெறியை விட்டு, தமிழர் சைவ நெறிக்குத் திரும்ப இதுவே சரியான தருணம். தந்தை பெரியாரைத் தவாறாக புரிந்துக் கொள்ள வேண்டாம். .
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்.
வணக்கம்!திரு தேனீ,திரு ஜெகவீரபாண்டியன் மீண்டும் சந்திப்பதில் சந்தோசம்!
தேனீக்கு வணக்கம் , தந்தை பெரியாரை பற்றி தெரிந்து வைத்துள்ள
உங்களுக்கு நன்றி, அவர் ஒரு படி மேலே போய் சைவ மதத்தை
தொடங்கியிருந்தால் நம்மவன் எந்த சாமியைத்தான் கும்பிடுவான் ,
இந்து மதத்தில் எல்லா சாமிகளும் கலந்து குழப்படியான நிலையில்
இருக்கிறது ,அதனால் அதை பிரித்து எடுத்து நம்மவர்களுக்கு கூறும் நேரத்தை மூடபழக்கத்தை ஒழிப்பதிலும் ,பெண் உரிமை
போராட்டம் ,சாதி கொடுமை ,போன்ற போராட்டங்களில் ஈடுபட்டார்.
கடவுள் இல்லை ,இல்லவே இல்லை,கடவுளை கற்பித்தவன் காட்டு மிராண்டி என்று தந்தை பெரியார் கூற காரணம் ஆரியன்
காட்டுமிராண்டியாக வாழ்ந்தான் என்பதற்காக மட்டும் அல்ல ,மனிதன் எல்லோரும் முதலில் காடுகளில் வாழ்ந்தார்கள் ,அப்போது உருவான மதம் நமக்கு தேவையில்லை என்பதற்காக
அவர் அப்படி கூறினார் . .சரி நைனா நாம இப்போது இப்படி வாழ
காரணம் ஆரியர்கள் தான் என்று கூறுகிறோம் , அப்படினா நமக்கு
சிந்திக்கும் புத்தி இல்லையா .சைவ ,வைணவ மதத்தை பின்
பற்றிய நம்மவர்கள் எப்படி இந்து மத வாதியானார்கள் , இவர்களை
1200 பெரியார்கள் வ்ந்து திருத்தினாலும் திருந்த மாட்டார்கள் , நைனா .
நண்பர்களை இப்பகுதி கருத்து பரிமாற்றத்தின் வழி சந்திப்பதில் சந்திப்பதில் மகிழ்ச்சி.
தமிழ் பித்தருக்கு பதில் இரவில்.
கற்று கொடுக்கும் இனம் தமிழினம்! இறைவனின் படைப்பில் முதல் இனமும் தமிழனே! முதல் மொழி தமிழ்! உலக நாகரிகம் தோன்றியது தென் நாட்டில்!.18 சித்தர்களும் அவர்களின் தலைவன் முருக பெருமானும் உலக நாகரிகத்தை கற்று கொடுத்தவர்கள்.
இப்போதுள்ள சரித்திரம் அனைத்தும் அவர் அவர் பெருமைக்கு எழுத பட்டவை.அது போன்று ஆரியனுக்கு கற்று கொடுத்ததும் தமிழனே!
நேர்மை என்பவரும் , உண்மை என்பவரும் இஸ்லாமியரா? அல்லது பிற சமயத்தவரா? என்று தெரிந்தது கொள்ள விரும்புகிறேன். நீங்கள் இஸ்லாத்தை நன்கு அறிந்தவர் புரிந்தவர்கள் என்றால் எனக்கு சில கேள்விகள் உண்டு. நீங்கள் முஸ்லீம் இல்லை எனில் பரவாயில்லை. நீங்கள் பொய்யாக முஸ்லீம் என்று சொல்ல, வாதம் திசைமாறிச் சென்று மற்றவரைக் காயப்படுத்திவிடும் என்பதனால் உங்களின் பின்புலத்தையும் , உண்மையான பெயரையும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். நன்றி!
தமிழ் பித்தரே, தங்களுக்கு சமயத்தைப் பற்றிய ஞானம் குறைவாக உள்ளதாக தங்களின் கருத்து வழி அறிகின்றேன். முதலில் தந்தை பெரியார். அவரும் அவரைச் சார்ந்த திராவிட கழகத்தினரும் எதிர்த்தது பிராமனிய ஆச்சாரத்தை. பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட அவர்களுடைய ஆச்சாரத்தையும், பலவகையில் விதவைப் பெண்களுக்கு சம்பிரதாயம் என்ற போர்வையில் விதிக்கப் பட்ட தண்டனைகளும், உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பிரிவினையையும் தமிழர்களிடையே பல நூற்றாண்டுகளுக்கு முன்பே (2-ம் நூற்றாண்டு முதல்) புகுத்தி விட்டனர். இதை எதிர்க்கப் போய், கரை காணாமல் கடவுளே இல்லை அல்லது வேண்டாம் என்ற நிலையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். மூட்டைபூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்திய கதையானது தி.க.வின் நிலை. தொடரும்.
எப்படி ஆரியன் அவர்களுடைய ஆச்சாரத்தை தமிழர்களிடையே அல்லது தென்னாட்டு திராவிடர்களிடையே சட்டமாக்கினான் என்பதற்கு நீங்கள் இந்தியாவின் வரலாற்றைப் படிக்க வேண்டும். ஆரியர்கள் எதையும் சிந்தித்து, தீர ஆராய்ந்து அவர்களின் எண்ணங்களை செயல்படுத்துபவர்கள். அந்நாளில், அவர்களின் முதல் குறி தென்னாட்டு குறுநில மன்னர்கள். முதலில் மன்னர்களை மயக்க, மன்னர்கள் தத்தம் எதிரிகளை வெல்ல இத்தாதி, இத்தாதி வேள்விகளை நடத்தினால் நினைத்தது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு என்று நம்ப வைத்தனர். மன்னனும் நம்பினான், வேள்வி மரபை ஏற்று மதம் மாறினான். மன்னன் எவ்வழியோ அவ்வழியே மக்களும் என்றாயிற்று. இதே அணுகுமுறையை கையாண்டுதான் இந்து மன்னர்களாக இருந்த தென் கிழக்காசிய சாம்ராஜ்யங்களை, இஸ்லாமிய சாம்ராஜியங்களாக மாற்றினார்கள் அரேபியா மத போதகர்கள். பின்னர் இப்பகுதி வாழ்மக்கள் இஸ்லாமியர்களாக மாறி விடவில்லையா? ஆங்கிலேயன் சிவில் சட்டத்தை 18-ம் நூற்றாண்டில் இந்தியாவில் அறிமுகப் படுத்துவதற்கு முன் ஆரியனின் மத சட்டமே சமுதாய சட்டமாக இருந்தது. அது எவ்வளவு கேடு கெட்டதாக இருந்தாலும் எதிர்க்க வல்லமை போதாதால், தமிழன் அதற்க்கு தலை வணங்கி நடக்க வேண்டியதாயிற்று. இன்று நிலை மாறிவிட்டது. பிராமனியம் இன்று நம்மர்வகளை கட்டுபடுத்த இயலாது என்பதை நாம் உணர்ந்துக் கொண்டோம். அவாக்களும் புரிந்துக் கொண்டார்கள். ஆதலால், அவாக்களின் ராஜ்ஜியம் ஆலயத்திற்குள் மட்டும்தான் வெளியே செல்லாது. தமிழன் தலை நிமிர்ந்து நிற்கும் காலம் இது. தொடரும்.
சைவ சமயம் அல்லது சிவ நெறி தொன்மையானது என்பதற்கு பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி மொஹஞ்ச்தாரொ, ஹராப்பா அகழ்வாராய்ச்சிகள் உண்மையென நிறுவுகின்றன. ஏறக்குறைய 3,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததாக சரித்திரம் அறிவிக்கின்றது. இச்சமயத்தை 6-ம், 7-ம் நூற்றாண்டுகளில் சமண பௌத்த ஆதிக்கத்தில் மூழ்கி இருந்த இந்திய தென்னாட்டில் மீட்டெடுத்தனர் நம் நால்வர் பெருமக்கள். அதன் மெய்யியல் தத்துவத்தை 7-ம் நூற்றாண்டு தொடங்கி 14-ம் நூற்றாண்டு வரை திருமூலர் மற்றும் சந்தானாசிரியர்கள் அறுவர் வகையறுத்துக் கூறினர். ஆகவே நான் தந்தை பெரியாரை சைவ சமயத்தை தொடங்கச் சொல்லவில்லை மாறாக முன்னமே இருந்த சைவ சமயத்தை அறிந்து தமிழர்களுக்கு நால்வர் பெருமக்கள் காட்டிய சிவம் என்ற பரம்பொருளை முன்னிறுத்தி ஓர் இறைக் கொள்கையை நிறுவி இருக்கலாம் என்றேன், பிராமனியத்தின் மீது இருந்த வெறுப்பால், தி.க-வினர் இதைச் செய்ய தவறிவிட்டனர். தவறு நம்முடையது. இன்றும் காலம் தாழ்ந்து விடவில்லை, தாங்கள் விரும்பினால் வைணவம் அல்லது இந்து மதம் காட்டும் பல தெய்வ வழிபாட்டை விட்டு, சைவ சமயம் காட்டும் ஓர் இறைக் கொள்கையில் நிற்கலாம். மனமிருந்தால் மார்கமுண்டு. தாங்களும் மற்றும் சைவ அன்பர்களும், இந்து பெருமக்களும் எதிர்வரும் 1-1-2014-ம் நாள் சுங்கை சிப்புட் (வ) பேராக் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் காலை 9.30 மணி முதல் 12.30 வரை நடை பெறவிருக்கும் “திருமுறைக் காட்டும் ஓர் இறைக் கொள்கை” என்ற சித்தாந்தச் சிந்தனை களத்தில் கலந்து கொண்டு பயனடையலாம்.