சிலாங்கூர் பிகேஆர், அதன் தலைவர் அஸ்மின் அலி சிலாங்கூர் மாநில மேம்பாட்டு நிறுவன (பிகேஎன்எஸ்) இயக்குனர் வாரியத்திலிருந்து தூக்கப்பட்டது ஏன் என்பதை மந்திரி புசார் அப்துல் காலிட் விளக்க வேண்டும் என விரும்புகிறது.
அரசியல் நியமனங்களைச் செய்யும்போது கட்சியுடன் ஆலோசனை கலக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதக் கட்சி மாநாட்டில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது என சிலாங்கூர் பிகேஆர் செயலாளர் அமிருடின் ஷாரி சுட்டிக்காட்டினார். ஆனால், அப்துல் காலிட் கட்சியிடம் அலோசனை கேட்காமலேயே முடிவெடுத்துள்ளார்.
“(அம்முடிவு குறித்து) கட்சித் தலைமையகத்துக்குத் தெரிவிக்கப்பட்டதா என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்”, என்றவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
அமிருடுன்…… பி கே என் எஸ் தலைவர் என்ன முட்டாளா? வரும் பி கே ஆர் கட்சி தேர்தலுக்கு பிறகு பி கே ஆரியன் தலைமைத்துவம் தலைகால் தெரியாமல் துண்டாடப்படும்.அப்போது மிரட்டலாம்.
ஒரு வேலை அடுத்தத் தேர்தலுக்குப் பின்னர் மந்திரி பெசார் கழற்றி விடப்படுவாரோ?
இந்த அஸ்மின் அலி அம்னோவின் மறுபதிப்பு. அதனாலேயே, பாஸ் மற்றும் ஜ.செ.க. கட்சிகள் காலிட்டை முதல் அமைச்சராக அவசர குடுக்கையாக முன்மொழிந்தன. இவர் நீக்கப் பட்டதில் ஆர்சரியம் ஒன்றும் இல்லை. இதைக் கேள்விக் கேட்டு P.K.R. தனது முகத்திலேயே மக்கள் மத்தியில் கரியைப் பூசிக் கொள்ள வேண்டாம்.