பாஸ் இளைஞர்: காலிட்-அஸ்மின் மோதல் பக்கத்தானின் தோற்றத்தை பாதித்துள்ளது

 

Khalid-Azmin tiffசிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் மற்றும் பிகேஆர் உதவித் தலைவர் அஸ்மின் அலி ஆகிய இருவருக்கிடையிலான கருத்து வேறுபாடுகள் பக்கத்தானுக்கு பாதகமான விளம்பரத்தை தரும் என்பதால் அவர்கள் தங்களுக்கிடையிலான வேறுபாட்டை களைய வேண்டும்.

இன்று வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கையில் பாஸ் இளைஞர் பிரிவு தலைவர் சுஹைஸான் அந்த இருவரும் எரிசக்தி, விலைவாசி உயர்வு, அரசாங்க கசிவுகள் மற்றும் ஊழல்கள் போன்றவற்றின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறார்.

“அவர்கள் இது போன்ற காரியங்களை கவனிக்க வேண்டும். அதை விடுத்து உட்சண்டையில் ஈடுபடக்கூடாது. அது பக்கத்தான் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையை பாழாக்கும்”, என்றாரவர்.

TAGS: