ஸ்காட்லாந்து மக்களை தம்மோடு தொடர்ந்தும் இணைந்தே இருக்குமாறு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கிழக்கு லண்டன் ஒலிம்பிக் பார்க் அரங்கில் உரையாற்றிய கேமரூன், 2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் 65 பதக்கங்களை வென்ற பிரிட்டன் ஒலிம்பிக் அணியின் ஒற்றுமை உணர்வை நினைவுகூர்ந்தார்.
மேலும் ஆளும் ஸ்காட்லாந்து தேசியக் கட்சி வாக்குறுதி அளித்தபடி, எதிர்வரும் செப்டம்பர் 18ம் திகதி நடக்கவுள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில், ஸ்காட்லாந்தில் வாழும் 16 வயதுக்கு மேற்பட்ட சுமார் 40 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ளனர்.
உலகில் பெரிய பங்கு வகிக்கும் நாடொன்றின் அங்கமே ஸ்காட்லாந்து என்று கூறிய மேமரூன், ஒட்டுமொத்த 63 மில்லியன் ( 6.3 கோடி) பேரான நாம் எல்லோரும் இந்த வாக்கெடுப்பால் கடுமையாகப் பாதிக்கப்படுவோம்.
மேலும் ஸ்காட்லாந்து பிரியவேண்டும் என்று தீர்மானித்தால், முழு ஐக்கிய இராச்சியமும் ‘மோசமாக சுருங்கிவிடும்’ என்று பிரதமர் கேமரூன் லண்டனில் ஆற்றிய உரையில் கூறியுள்ளார்.