மலாய்க்காரர் உரிமைக்காக ஓயாமல் குரல் கொடுக்கும் இப்ராகிம் அலி, சீனர்களுக்காக பரிந்து பேசி இருக்கிறார். காஜாங் இடைத் தேர்தலில் சீனர்களின் தலையைப் போட்டு உருட்டுவது ஏன் என்று அவர் ஒரு அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிகேஆர் உள்தகராறுக்குத் தீர்வுகாண சீனர் ஒருவரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என அந்த முன்னாள் பாசிர் மாஸ் எம்பி கூறினார்.
“ஏன் (காஜாங் சட்டமன்ற உறுப்பினர்) லீ சின் செ-யை (இடம்) விலகச் சொல்ல வேண்டும்? புக்கிட் அந்தாராபங்சா சட்டமன்ற உறுப்பினர் அஸ்மின் அலி விலகி இருக்கலாமே.
“எதற்காக ஒரு சீனரைப் பலி கொடுக்க வேண்டும்? அன்வார் இப்ராகின் தீவிர ஆதரவாளர் அஸ்மின் (வலம்) ஏன் அந்தத் தியாகத்தைச் செய்யக் கூடாது?”, என்று இப்ராகிம் அலி வினவினார்.
பெர்காசா தலைவராக அல்லாமல், தனிப்பட்ட முறையில் விடுக்கும் அறிக்கை என்று கூறியுள்ள அவர், மசீச-வின் வேட்பாளர் எனக் கருதப்படும் சியு மெய் பன்னுக்குத் தம் ஆதரவையும் தெரிவித்துக் கொண்டார்.
ஆடு நனயிதுன்னு ஓநாய் அழுவுது ஹஹஹஹஹஹ் !!!!!!!!
வரட்டு தவளையே சீனர்களின் மேல் திடீர் பாசமா ?
ஓநாய் ஒலமிடுவதெல்லம் ஒப்பாரி ஆகிவிடுமா என்ன ?
தைரியம் இருந்தால் ம சீ சாவுக்கு பதிலாக அம்னோவை களம் இறங்கச் சொல்லலாமே???? உமது மங்கி போன அரசியல் அரிசி இக்காலத்தில் வேகாது!!!!
இது கிண்டல் மைக், அஸ்மினை சீன்ட அன்வருக்கு தைரிய இல்லை என்று சூசகமாக எச்சரிக்கிறார் இந்த குண்டர்.ஆணால் பி.என்னில் பிரதமருக்கு வோட்கேட்டு யாராவது நிட்பார்,பி.கே.ஆரில் மட்டும் உள்ளுரில் பிரபளமானவர் தனக்கு வோட்கேட்டு அடிலான் சின்னத்தில் நிட்பார்,பின் அவரை துரத்திவிட்டு இவர் புகுந்து கொள்வார்.எல்லாறுக்கும் சம உரிமை சொல்வார் ஆனால் மலாய்க்கு 6சீட்,3சீட் சீனர்க்கு,1சீட் வாயில் வருவதெல்லாம் பொய்.அன்வர் சொல்வதெல்லாம் சாசனத்தில் உள்ளதா சாத்தியமா என்று யோசித்து பாரும்,சில நேரம் செம்ம காமடியா இருக்கும்.நாராயண நாராயண.
தவளை தாவுகிறது
இப்ராஹின் அலி எப்படி எளிய முறையில் ஞானம் பெற்றார் ?
அவன் முகத்தை நல்லா ஒரு முறை உற்று பாருங்கள் ….எதோ ஒரு ஞாபகம் கண்டிப்பா வரும்…. என்ன எழவோ..