“ஷூ” வெடிகுண்டுகளுடன் தீவிரவாதிகள்: அமெரிக்கா எச்சரிக்கை

shoe_001அமெரிக்காவில் விமான பயணிகள் போன்று “ஷூ” வெடிகுண்டுகளுடன் தீவிரவாதிகள் ஊடுருவலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

அதில், விமான பயணிகள் போல ‘ஷூ’ வெடிகுண்டுகளுடன் தீவிரவாதிகள் ஊடுருவலாம் என்றும், ஒப்பனை பொருட்கள், திரவங்கள் வாயிலாகவும் வெடிபொருட்களை மறைத்து கொண்டு வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தீவிர சோதனையிட ஹோம்லண்ட் செக்யூரிட்டி பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

ஆனால் எந்த தகவல் அடிப்படையில் இந்த எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் விளக்கப்படவில்லை.