சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, த சிறிலங்கன் கார்டியன் இணையத்தளம் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான கடிதம் என்ற தலைப்பில் இந்த மனு தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில், இன்னும் இரண்டு வாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பு நாடுகள் ஒன்று கூடவுள்ளன.
தொடர்ந்து ஒரு மாதத்துக்கு இடம்பெறும் அதன் கூட்டத்தை இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை ஒன்றை முன்னெடுக்க வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு சர்வதேச விசாரணை ஒன்றை முன்னெடுத்தால் மாத்திரமே, இலங்கையை நீதி மற்றும் மறுசீரமைப்பின் பாதையில் கொண்டு செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.