காஜாங் இடைத் தேர்தல் பல அமைச்சர்களையும், குறிப்பாக அம்னோ அமைச்சர்களை, தீவிரமாக சிந்திக்க வைக்கிறது. தேர்தல் காலங்களில் இந்தியர்களையும் சீனர்களையும் ஏமாற்றி அவர்களுடைய வாக்குகளை பிடுங்குவதற்கு என்ன செய்யலாம் என்று அவர்கள் ஆழ்ந்து சிந்திப்பது வழக்கம். இதனை அவர்கள் 1955 ஆம் ஆண்டிலிருந்து வெற்றிகரமாகச் செய்து வருகின்றனர். சீனமொழிக் கல்வி பற்றி தேசத் தந்தை துங்கு அப்துல் ரஹ்மான், லிம் லியன் கியோக் மற்றும் டான் செங் லோக் ஆகியோருடன் ஆழ்ந்து சிந்தித்து அவர்களை ஏமாற்றினார்!
இப்போது இரண்டாவது கல்வி அமைச்சர் இட்ரீஸ் ஜூசோ அதனைச் செய்ய களம் இறங்கியுள்ளார். தமிழ் மற்றும் மாண்டரின் மொழிகளை பள்ளிகளில் பாடங்களாக அறிமுகப்படுத்த அவரது அமைச்சு ஆழ்ந்து சிந்தித்து வருகிறது என்று இன்று கோலதிராங்கானுவில் கூறினார்.
“தற்போது ஆங்கிலம், உயர்வான சிந்தனைத் திறன் மற்றும் இதர பாடங்களை மட்டுமே நாம் வலியுறுத்துகிறோம்”, என்று கூறி அவர் தமது சிந்தனைத் திறனை வெளிப்படுத்தினார்.
இருப்பினும், இத்திட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு அது குறித்து பல கோணங்களில் ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது என்று மேலும் கூறி சமாளித்துக் கொண்டார்.
தேர்தல் முடிந்த பிறகு ! சொன்னதை மறந்து விடுவார் அமைச்சர் , நல்ல ஆலோசனை என்று ம இ கா குஜா தூக்க ஆரம்பிக்கும் , சீன மண்டையை கழுவ முடியும்மா அம்னோ ? நல்ல வேலை வேதா விலகி விட்டார் !
இது வெறும் கண்துடைப்பு. படாவி காலத்திலேயே இது ஆராய்ந்து அமல் படுத்தப் பட்டு விட்டது. அதுவும் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப் பட்டு பயிற்சி கொடுக்கப்பட்டு இப்பொழுது பனி யாற்றுகிறார்கள். தமிழ் பள்ளிகளை ஆசிரியர் பற்றாக்குறை உள்ளபொழுது இது ஒருபக்கம் அரங்கேற்றப் பட்டு விட்டது. இதன் வழி தமிழ் பள்ளிகளை மூடும் பெருந்த்திட்டமாகும்.
எல்லா அரசியல் கட்சிகளும் தோ்தல் காலத்தில் தான் மக்களை தேடி வருவா்,ஆசை வாா்தை காட்டுவா் பின் அவா்களை தேடி நாம் அலையவேணும்,அறிமுகபடுத்தவேணும்.காஜாங் மக்கள் சமுகதேவையை கேட்டு பெற்று கொள்ளவும்.சாப்பா சொக்கோங் கீத்தா கீத்தா சோக்கோங் டீயா.சும்மா ஆதாயம் இல்லாம் யாறுக்கும் வோட் போடாதீர்.பி.என் இன்ராப்பையே ஏமாத்தினான் பாக்காத்தான் இவனும் ஏமாத்தினான் புரக்கனித்தான் அழைகலித்தான்.நாராயண சமா்பணம்
இதுவும் தமிழ் பள்ளிகளையும், சீனப் பள்ளிகளையும் அழிக்க வேண்டி, கல்வி பெருந்திட்டத்தில் ஒரு பகுதியாகுமோ?
இப்பதான் பட்சக் அமலிலுள்ளதே! புதுசாஅ என்னமோ கதை சொல்றாரே
BTSK
அரசாங்கம் மாறினால்தான் நமது தமிழ் மொழி பிழைக்கும் என்னவோ!!!!!!!!!