கடந்த 14 பிப்ரவரியன்று செம்பருத்தியில் “டிரஸ்ட் ஃபண்ட்”, என்ற தலைப்பில் ஒரு கட்டுரை பதிவுசெய்யப்பட்டது. திரு. ஜீவி காத்தையா கட்டுரையை இயற்றியிருந்தார்.
பேரா. நா. இராஜெந்திரன் தலைமையில் இயங்கிவரும் திட்டவரைவுக்குழுவின் கடந்த ஓராண்டுப் பணியைக் கேள்விக்குட்படுத்தியதோடு, பரிந்துரையிலுள்ள அறங்காப்பு நிதியம் (trust fund) “தமிழ்ப்பள்ளியின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் இறுதி ஆணி”யாக அமையும் என்று கட்டுரை வருணித்தது. “தமிழ்ப்பள்ளிக்கு உரிய உரிமைகளை நிலைநிறுத்து[ம்] தீர்மானத்தை நிறைவேற்றி அதனை பிரதமர் நஜிப்பிடம் வழங்கு[வதில்தான்] … தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் இருக்கிறது” என்றும் கட்டுரை திட்டவட்டமாகக் கூறியது.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பெரும்பகுதியான மலேசிய இந்தியர்களின் அறிவுக் கண்களைத் தமிழ்ப்பள்ளிகள் திறந்து வைத்துக்கொண்டிருக்கின்றன. இருப்பினும், அவற்றின் சேவையை நம் சமூகமோ அரசாங்கமோ முழுமையாக ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. தமிழ்ப்பள்ளிகள் தேவையா? அவை மூடப்படுமா? என்ற கேள்விகளைக் கேட்போர் இருக்கத்தான் செய்கின்றனர்.
அவற்றின் நீட்சியாக திரு. காத்தையாவின் கட்டுரையைப் பார்க்கிறேன். தமிழ்ப்பள்ளிகள் “சீரழிந்து” வருவதாகவும், அவை ஏதோ “சவப்பெட்டியில்” இருப்பதாகவும் காத்தையா கூறுகிறார். இது எவ்வளவு பெரிய தவறு! கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிகளின் தரம் அபரீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. தமிழ்ப்பள்ளிகளுக்குச் செல்லும் பத்து மாணவர்களில் மூவர் அல்லது நால்வர் மட்டுமே யுபிஎஸாரில் தேர்ச்சியடைவர் என்ற நிலை 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்தது. அந்நிலை மாறி, இன்று அறுவர் தேர்ச்சியடைகின்றனர். இதே காலகட்டத்தில், தேசியப்பள்ளிகள் சொல்லத்தக்க வளர்ச்சியை அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப்பள்ளிகளைத் தொடர்ந்தாற்போல் குறைத்து மதிப்பிடுவதை நாம் தவிர்க்க வேண்டும். நமது சாதனைகளையும் நமது பள்ளிகளையும் நாமே மதிக்காவிடின் மற்றவர்கள் மதிப்பரோ?
இன்றைய சிக்கல் தமிழ்ப்பள்ளிகள் நிலைக்குமா இல்லையா என்பதல்ல. அங்கு பயிலும் அனைத்து – அதாவது 100 விழுக்காடு – மாணவர்களுக்கும் தரமான கல்வி வழங்கப்படுகிறதா இல்லையா என்பதே. அத்தகைய கல்வியைத் தமிழ்ப்பள்ளிகளில் வழங்குவதற்கு வாய்ப்புகளும் வசதிகளும் உள்ளனவா என்று நாம் கேட்கிறோம். இக்கேள்விகளைத்தான் இராஜேந்திரனின் குழுவும் கேட்டது.
ஒரு நல்ல கல்வித்திட்டமானது மாணவனை மையமாகக் கொண்டிருக்கும் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். இக்கோட்பாட்டின் அடிப்படையில் கடந்தாண்டு வெளியிடப்பட்ட மலேசியக் கல்வி பெருந்திட்டமும் வரையப்பட்டிருக்கின்றது. ஆனால், அத்திட்டத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்கும் சீனப்பள்ளிகளுக்கும் போதுமான இடம் தரப்படவில்லை. அவை எதிர்நோக்கும் சிக்கல்களும், அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளும் போதுமான அளவிற்கு அலசப்படவில்லை.
அதனால்தான், தமிழ்ப்பள்ளிகளில் நிலவும் சிக்கல்களை ஆழ்ந்து அலசி, அவற்றின் உண்மையான தேவைகளை நிறைவுசெய்யும் பரிந்துரைகளை இராஜேந்திரனின் குழு முன்வைத்துள்ளது. கல்வியமைச்சில் நமக்குத் தேவையான ஆள்பலம் முதற்கொண்டு; கலைத்திட்டம்; ஆசிரியர்கள், அவர்களைத் தயார்படுத்தும் விதம்; பள்ளி நிர்வாகம்; உதவிப் பொருட்கள்; சிறார் பள்ளிகள்; பள்ளி வாரியம் வரை தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்குத் தேவையான அனைத்து கூறுகளும் வரைவில் இடம்பெற்றுள்ளன.
நிதி என்ற தலைப்பின்கீழ், அரசு உதவி பெரும் தமிழ்ப்பள்ளிகளுக்கும், அரசு தமிழ்ப்பள்ளிகளுக்கும் அவற்றின் தேவைகளை நிறைவுசெய்வதற்குப் போதுமான நிதி அரசாங்கத்தால் ஒதுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால், அடிப்படை தேவைகளை நிறைவுசெய்தால் மட்டும் போதாது, உலகத்தரம் வாய்ந்த பள்ளிகளை ஏற்படுத்தும் பணிகளிலும் நாம் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அறங்காப்பு நிதியம் பரிந்துரைக்கப்பட்டது.
அடுத்த 12 ஆண்டுகளில் மொத்தம் 500 அரக்கட்டளைப் பள்ளிகளை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இப்பள்ளிகளை நிர்வகிக்க ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டுக்கு ரிம 1,000 கூடுதலாகச் செலவாகிறது. இச்செலவை ஈடுகட்ட அரசாங்கம் தனியார் நிறுவனங்களின் உதவியை எதிர்பார்க்கின்றது. இம்முயற்சிக்கு அறங்காப்பு நிதியம் உதவக்கூடும். தமிழ்ப்பள்ளிகளை மேம்படுத்துவதற்காக சமூக அமைப்புகள் மேற்கொள்ளும் நல்ல திட்டங்களை ஆதரிப்பதற்கும் இந்நிதி பயன்படலாம். இத்தகைய ஒரு நிதியை நம் சமூகம் கொண்டிருக்குமானால், அதனால் ஏற்படக் கூடிய நன்மைகளே அதிகம் என்று தோன்றுகின்றது. தமிழ்ப்பள்ளிகளின் அழிவுக்கு நிதி வழிவகுக்கும் என்பது வீண் கவலையாக எனக்குத் தோன்றுகிறது.
தமிழ்ப்பள்ளிகளுக்கான திட்டவரைவில் சிக்கல்களே இல்லையென கூறவியலாது. மாநாட்டில் கலந்துகொண்டோர் வரைவிலிருந்த பல குறைகளைக் கண்டறிந்து திருத்தங்களைக் கொடுத்தனர். இன்னும் பல குறைகளும் சிக்கல்களும் வரைவில் இருக்கலாம்; இருக்கும். அதனைச் சுட்டிக்காட்டுவது சமூகத்தின் கடப்பாடாகும். ஆனால், திட்டமே தமிழ்ப்பள்ளிகளை ஒழிப்பதற்குதான் என்று கூறுவது சரியானதாகத் தோன்றவில்லை.
இக்கண்,
வே. இளஞ்செழியன்
பசுபதி சொன்னா உங்களுக்குப் பிடிக்காது. வடிவேலு சொல்லுவது கூடவா உங்களுக்குக் காமடியாக தோணுது? இப்ப நீங்க என்னா சொல்ல வரீங்க? தமிழர்கள் நிறைய சூதாட்டம் ஆடனும்! நிறைய தண்ணி அடிச்சா தான் மதுபான நிறுவனங்க தமிழ்ப் பள்ளிகளைக் காப்பாத்த முடியும் என்பது தானே உங்களது வாதம்! தமிழர்களே! இன்றிலிருந்து ஒவ்வொருவரும் ‘தண்ணி’ அடிச்சி நம்ம தமிழ்ப்பள்ளிகளைக் காப்பாத்தணும்!
“இல்லாத ஊருக்கு வழி கேட்டானாம் ஒருவன்” என்று நான் சொல்ல வரவில்லை. நம்பிக்கை நாயகன் நாளையே பதவியை துறக்க நேரிட்டால், நம் கதி அதோ கதிதான். அடுத்து வரப் போகின்றவன் “இல்லாத ஊருக்குத்தான்” நம்மை வழிநடத்திச் சென்று நட்டாற்றில் விடுவான். “எல்லாம் வல்ல இறைவனாலே, சொல்லப் போகும் வார்த்தைகள் யாவுமே நிச்சயம். இது சத்தியம்.”
தமிழ்மொழி,தமிழ்மொழி,தமிழ்மொழி,தமிழ்பள்ளி,தமிழ்பள்ளி,தமிழ்பள்ளி,இதை வைத்து தான் அரசியலே நடக்குது.இதன் பிரச்சனை தீா்ந்துவிட்டால் நம்மவருக்கு அரசியலே கிடையாது.நாராயண நாராயண.
ஹலோ kayee தற்போதைய பிரச்சனை தமிழ் மொழியும் தமிழ் பள்ளி களுமே — இதன் பின் இன்னும் எவ்வளவோ பிரச்சனைகள். நாம் முன்னேற வேண்டுமானால் நாம் எவ்வளவோ செய்யவேண்டி உள்ளது . தயவு செய்து அலட்சியமாக பேசாதீர்கள் .உண்மையில் உங்களுக்கு நம் இனம் முன்னேற ஆசையிருந்தால் பொறுப்புடன் பேசுங்கள்.
காயீ அவரகளே, நீங்கள் தமிழில் ‘காயாகவே’ இருக்கிறீர்கள். அதனால்தான் தமிழின் அறுமை தெறியாமல் இருக்கிறீர்கள்.தமிழ் இல்லையென்றால் நாம் இங்கே செல்லாக்காசு.சில தமிழ் பற்றாளர்கள் இருப்பதால்தான் இங்கே இன்னமும் தமிழ் வாழ்ந்துக்கொண்டிருக்கிறது. இளஞ்செழியன் போன்றோர் தமிழுக்காக போராடுகிறார் என்றால் அது நாம் செய்த புன்னியம்..வாழ்க செழியனின் சேவை.நன்றி.
போராட்டம்,போராட்டம்,போராட்டம்,சுகந்திரம் கிடைத்து எவ்வளவு காலம் ஆகிவிட்டது இன்னும் போராட்டம்.சிலர் எழுதுவா் இல்லாத வூருக்கு வழி சொல்வதாக.எல்லோறுக்கும் குடும்ப அரசியல் மீது தான் ஆா்வம் பொது அரசியலில் கிடையாது.கருணானிதி பேச்சுக்கு ஆயிரகணக்கில் திரளும் கூட்டம் ஆனால் வோட் போட மாட்டா்.அதுபோல தமிழ்பள்ளி எதிா்காலமும்,எமக்கு ஜால்றா போட பிடிக்காது.காயை நகா்தனும்,ஏட்டு சுரக்காய் குழம்பிற்கு உதவாது.தோழா தமிழ்பள்ளியில் என்ன கிடைக்குது,இன்னும் எவ்வளவு காலத்துக்கு போராட்டம்,இந்த போராட்டத்துக்கு ஏழை பிள்ளைகள் பலி கிடாவா? வாவாசான் பள்ளிகள் நிரைந்த வசதி சலுகைகள் இருந்தும்(அங்கேயும் நம் வரி பணமும் உள்ளது)ஏன் இந்த போராட்டம்,அங்கேயும் தமிழ் போதனை உள்ளதே, இதை நீங்கள், நான் தமிழை அலட்சிய படுத்துவதாக என்னக்கூடாது,தரமான விளக்கம் தேவை,இதன் மூலம் நானும் பலறும் புாிந்துகொள்ள,நாராயண சமா்பணம்.
முதலிலேயே மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்! என்னுடைய பார்வைக்கு பேராசிரியர் என். எஸ். குழுவினரின் பரிந்துரைகள் நம்மைக் கொஞ்ச காலத்திற்கு தமிழ்ப் பள்ளிகள் குறித்து வாய் மூடி இருக்க வைக்க அரசாங்கம் செய்த தந்திரமாகவே படுகிறது! நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோமோ என்று அஞ்சத் தோன்றுகிறது! பரிந்துரைகள் வழங்கப்பட்டு ஒரு மாதக் காலம் கடந்துவிட்டது. இதுவரையில் துணைப் பிரதமரான கல்வி அமைச்சரிடமிருந்து எந்த ஒரு ‘சிக்னலும்’ கிடைத்தபாடில்லை! அறிக்கை அவர் கைகளுக்கு எட்டியதா என்றும் தெரியவில்லை! அதோடு நகல் அறிக்கையைச் சற்றே பார்க்கும் ‘பாக்கியம்’ கிடைத்தது! ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் இசைஞானி இளையாராஜா ‘இசையில் எதுவும் புதிதில்லை’ என்று சொல்வதுபோல், இப்பரிந்துரைகளில் எதுவுமே புதிதில்லை! ஏற்கனவே ஆசிரியர் சங்கமும், தமிழ் அறவாரியமும், தமிழ் தலைமையாசிரியர் மன்றமும் மற்றும் தமிழ்ச் சார்ந்த பொது இயக்கங்களும் முன்வைத்தவையே இதிலும் எதிரொலிக்கின்றன. ஒரு ‘futuristic’ பார்வையோ அல்லது ஓர் ஆழமான ஆய்வின் பிரதிபலிப்போ இவ்வறிக்கையில் என்னால் காண இயலவில்லை! எனவே, இவ்வறிக்கையின்வழி பெரிய மாற்றம் நிகழுமென்று என்னால் எண்ண முடியவில்லை. அதற்காகத்தான் என் முதல் வரி!
(சொந்த மொழிக்காக) பிச்சை எடுக்கவா பிறந்தோம் இந்த நாட்டில் என்ற கேள்வி ஆத்திரத்தை மேலோங்கசெய்கிறது …இந்த தலைவர்களின் பால் நம்பிக்கையை இழக்கச் செய்கிறது…………
ஐயா sulues அவர்களே, “நம்மைக் கொஞ்ச காலத்திற்கு தமிழ்ப் பள்ளிகள் குறித்து வாய் மூடி இருக்க வைக்க அரசாங்கம் செய்த தந்திரமாகவே படுகிறது! நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோமோ என்று அஞ்சத் தோன்றுகிறது!” என்ற கருத்தினை நானும் சொன்னேன்..கொஞ்சம் காரமாக ! அதற்கு திரு வேகு என்கிற முன்னாள் தலைமை ஆசிரியர் ‘நொல்லைக் கண்ணால் பார்த்தால் எல்லாமே கோணலாகத்தான் இருக்கும் தம்பி அண்ணா’ என்று கூறிச்சென்றார்!
மீண்டும் சொல்கிறேன், புதிதாக ஒன்றும் அதில் இல்லை…சற்று மாற்றி அமைக்கபட்ட வாசகங்கள்தாம் அவை….அதனால் அதில் குறை என்றும் கூறவில்லை! அதனை செயலாக்கம் செய்கின்ற பரந்த மனபோக்கு இந்த தலைவர்களிடம் …குறிப்பாக கல்வி அமைச்சரிடமோ அல்லது நம்பிக்கை நட்சத்திரம் நஜிப்பிடமோ உள்ளதா? என்ற கேள்விக்கு இதுவரை யாருமே உத்திரவாதம் தர முன்வரவில்லை. ‘மொக்கை’ மொஹிதீன்’ இன்னும் இதைபற்றி வாயைத் திறக்கவில்லை; …அல்லது ‘கோப்பை’ திறக்கவில்லை (அல்லது குப்பையில் கிடக்கிறதா என்றும் தெரியவில்லை!!)
இந்த திட்டம் நிறைவேறினால் நிச்சயம் நமக்கு , நமது பள்ளிகளுக்கு நன்மை…இது உண்மை..இதை யாரும் மறுக்கவில்லை. ஏற்கனவே போட்ட திட்டங்களை மனமுவந்து இந்த அரசியல் தலைவர்கள் இன வேறுபாடின்றி நிறைவேற்றியிருந்தால்…இந்த நூற்றாண்டில் சொந்த நாட்டில் சொந்த மொழி பள்ளிக்கு பிச்சை எடுக்கவேண்டிய நிலை வந்திருக்குமா?
‘சரி சரி நடந்து முடிந்து போன கதையை பேசத் தேவையில்லை, போன முறை செய்தவர்கள் அனைவரும் போலிகள், உருப்படி இல்லாதவர்கள் , இனத்திற்காகவும் மொழிக்காகவும் நாடகம் போட்டு பொழைப்பை நடத்தி கொண்டவர்கள், நாங்கள் அப்படியல்ல…மாறி செய்கிறோம், மாற்றி அமைகிறோம், எங்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள், நாங்கள் அவர்கள் மாதிரி அல்ல, நாங்கள் வேற மாதிரி” என்று கூறுகிறீர்கள்!!!
ஐயா, உங்களுக்கு வாய்ப்பு யார் தரவில்லை என்று கூறியது???? எல்லா வாய்ப்பும் தருகிறோம்…நன்மையைத்தானே செய்கிறீர்கள்…அதில் எந்த சந்தேகமும் இல்லை….இந்த அறிக்கையையும், நீங்கள் மாற்றி அமைத்த இந்த தமிழ் பள்ளிகளின் முன்னேற்ற திட்டத்தையும் இந்த நஜிப்பும் , மொகைதீனும் உண்மையிலேயே ஆய்வு செய்து ஏற்றுக்கொண்டு திட்டங்களை நிறைவு செய்வார்களா? அல்லது இதனை பயன்படுத்தி ஒவ்வொரு இடைதேர்தளுக்கும் பொது தேர்தலுக்கும் பிறித்து பிறித்து எச்சில் பிஸ்கட்டுகளை ‘மீண்டும்’ போடுவார்களா? இதுதான் சந்தேகம்…இது தான் இந்தியர்களின் கேள்வி! (சொந்த மொழிக்காக) பிச்சை எடுக்கவா பிறந்தோம் இந்த நாட்டில் என்ற கேள்வி ஆதிதிரத்தை மேலோங்க செய்கிறது…இந்த தலைவர்களின் பால் நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. உங்களது திட்டத்தில் குறை இல்லை…அவர்களது நிறைவேற்றும் சட்டத்தில்தான் குறை!
சுலுஸ், நீங்கள் சொல்லுவது சரியே! அடுத்த தேர்தல் வரை இதனைச் சொல்லியே காலத்தைக் கடத்துவார்கள்! தேர்தல் நெருங்கும் போது ஏதோ ஒரு எலும்புத் துண்டைப் போட்டு அதனைப் பெரிதாக விளம்பரப் படுத்துவார்கள்! இதற்கு பழனிவேலு, கமலநாதன், சம்பந்தன் தனேந்திரன், தாமோதிரன் எல்லாம் சேர்ந்து தலையாட்டுவார்கள்!
உண்மையைச் சொன்ன சுலுவுக்கு நன்றி.
உங்கள் வாதங்களைப் பார்க்கும்போது இந்த நாட்டில்’ தமிழ் மெல்ல சாவும்’ என்று யாரோ சொன்னார்கள்.அதை வாதம்பன்னும் நீங்கல் மெய்ப்பிப்பீர்களோ என்று அஞ்ஜுகிறான்மொழி பற்றற்ற இவர்களை தமிழ் தாயே காப்பாத்தட்டும்..
மொழி பற்றற்ற எவரும் இங்கே வந்து தமிழ் தாய்மொழிக்காக மண்டியிடவில்லை மாறாக தமிழ் மொழி பற்று இருப்பதினால்தான் இந்நாட்டில் தமிழ் மொழி மெல்ல சாகக்கூடாது என்று மண்டியிடுகின்றோம், மன்றாடுகின்றோம். எங்கள் தமிழ் தாய்க்காக. உண்மையைச் சொல்லுபவனை சுண்ணாம்பைக் கண்ணில் விட்டுக் கொண்டு பார்த்தால் எரியத்தானேச் செய்யும். நன்றாக எரியட்டும். எங்கள் தமிழ் தாயிக்காக.
திரு வேகு அவர்களே…
எனக்கு ஒரு சந்தேகம்….உண்மையிலேயே உங்களுக்குத்தான் யாரையே தற்காக்க வேண்டும் என்ற விடாப்பிடி முயற்ச்சியில் இறங்கி எல்லாவற்றையுமே நொல்லைக் கண்ணால் l பார்க்கின்றீர்களோ என்ற உணர்வு தோன்றுகிறது. தயவு செய்து இங்கே நமது நண்பர்கள் என்ன எழுதுன்றார்கள் ,எதற்காக எழுதுகின்றார்கள் அவர்களின் ஆதங்கம் என்ன என்ற கருத்தை முன்வைத்து , அறிந்து பிறகு பதில் எழுதினால் நன்றாக இருக்கும் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ் தமிழ் என்று இப்போது வாதாடும் சில தலைமை ஆசிரியர்கள் , பத்தியில் இருந்த பொது தமிழுக்காக எப்படியெல்லாம் மாவட்ட, மாநில அதிகாரிகளிடம் போராடினீர்கள் என்று எங்களுக்கும் தெரியும் திரு வேகு அவர்களே.
பதவியில் இருக்கும்போது கூக்குரல் இடாத பலர் இன்று ஓய்வு பெற்ற பின்பு தமிழ் தமிழ் என்று போராடுவது வேடிக்கையாக உள்ளது. பதவியில் இருந்த பொது எத்தனை பேர் வீடு வீடாக சென்று பிள்ளகை சேர்த்தீர்கள்? சனிகிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பல நண்பர்களோடு , தமிழ் ஆர்வளர்களோடும் வீதி வீதியாக வீடு வீடாக சென்று பிள்ளைகளை சேர்த்தவர்கள் நாங்கள். தயவு செய்து மறந்தும் கூட எங்களால் தமிழ் சாகும் என்ற ஒரு வார்த்தையை ஒரு முன்னால் தலைமை ஆசிரியர் என்ற முறையில் கூறாதீர்கள், அதனை இந்த தமிழ் தாய் பொறுக்கமாட்டாள்.
இன்னுமொரு விஷயம் , மொழிப் பற்றை எங்களிடம் நீங்கள் பேசுவதை விட உங்கள் தமிழ் ஆசிரியர்களிடம் பிரச்சாரம் செய்தால் இன்னும் சிறப்பு, அப்படி செய்தால் தமிழ் வாழும், தமிழ் பள்ளியும் வாழும், தமிழ் பள்ளிகளில் நிறைய தமிழ் பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகளும் சேர்வார்கள். அந்த பிரச்சாரத்தை எங்களிடம் செய்து உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்கவேண்டாம்….தமிழ் பற்று காரணமாகத்தான் இங்கே இவ்வவளவு ஆதங்கத்தோடு பல நண்பர்கள் தங்களது என்ணத்தை இங்கே வெளியிடுகிறார்கள்.
மீண்டும் மீண்டும் சொல்கிறேன்…திட்டத்தை குறை கூறவில்லை…அமுலாக்கம் செய்ய உரிமையை கொண்டுள்ள தலைவர்களின் சாக்கு போக்குகளைதான் இங்கே சாடுகிறோம். தயவு செய்து இங்கே மற்றவர்கள் என்ன கூறவருகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு நீங்கள் உங்கள் அபிமானிகளை தற்காத்து பேசலாமே!!
எங்களால் தமிழ் நிச்சயம் சாகாது திரு வேகு, ‘கூட்டு சதி செய்து தமிழை சாகடிப்பவர்களையும் நாங்கள் விடோம்!!!
தம்பி அண்ணா அவர்களே உங்கள் ஆதங்கத்திற்கு மிக்க நன்றி.உங்கள் இளைய சமுதாயத்தின் மத்தியிலே தமிழ் பள்ளி வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வியும் தமிழ் இடைநிலைப்பள்ளி தேவையா என்ற வினாவும் மேலோங்கி இருபதைக் கண்டு மணம் புண்பட்டு எழுதிய கருத்துகள்..அப்படி இல்லையென்றால் மகிழ்சி.தமிழர்கள் சென்ற நாடு களிலெல்லாம் தமிழ் செத்துவிட்டது.இந்தோனெசியா,மொரிசியஸ்,தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் தமிழ் அழிந்து விட்டது.இதற்கு முக்கிய கரணியம் அந் நாடுகளில் இருந்த தமிழ் பள்ளிகளை மூடிய விலைவே என்றால் மிகையாகாது.அதே போன்று நம் நாட்டிலும் நடக்கக்கூடாது என்பதெ எனது அவா,ஆதங்கம். நன்றி வாழ்க தமிழ்.வாழ்க உங்கள் தமிழ் பற்று.
வேகு அண்ணா, வணக்கம். எனது எழுத்துக்களில் ஆதங்கமும் சில இடங்களில் ஆத்திரமும் இருந்ததை நான் உணர்கிறேன். அப்படி இருந்தும் கண்ணியமான முறையில் பதில் எழுதியுள்ளீர்கள். அந்த கண்ணியத்திற்கும் புரிந்துணர்வுக்கும் தலை வணங்குகிறேன். குரலின் தடிப்பு மாறுபட்டாலும் எமது கூக்குரல் தமிழுக்காகத்தான்.
வாழ்க தமிழ். நன்றி.
உலகம் விரல் நுனியில் வளரும்பொழுது..தமிழ் இன்னும் நவீன பிடியில்
தவித்துக் கொண்டிருக்கிறது.மின்னஞ்சல் பக்கத்தை இலகுப் படுத்துங்கள்.
மீண்டும் ஈபோர் தமிழ்ப்பள்ளி 29/6/2014 விளையாட்டு போட்டி மிக விமரிசையாக ஆங்கில பாடல்களுடன் அரங்கேரி முடிந்தது.வருடத்திற்கு ஒருமுறை நடைப்பெறும் இந் நிகழ்வு மிக அவசர அவசரமாக நடந்து முடிந்தது.மற்றும் ஒரு வாடிக்கையான வேடிக்கை அதாவது வழக்கமாக இருதி ஆண்டான ஆராம் ஆண்டுக்கு கொடுக்கப்படவேண்டிய ஓலாராகாவான் சிறப்பு ஐந்தாம் ஆண்டு மாணவனுக்கு கொடுக்கப்பட்டது.மூன்று குழுவில் நீல நிற குழு வெற்றிப்பெற்றது,குழு விளையாட்டு இரண்டிலும் நீல நிறமே வேற்றிப்பெற்றது மற்றம் ஒற்றையர் பிரிவில, நீல நிற குழுவை சேர்ந்த ஆராம் ஆண்டு மாணவன் முதல் நிலையில் வந்தார் கடைசியில் கௌரவம் நீல நிற குழுவை சேர்ந்த ஐந்தாம் ஆண்டு மாணவனுக்கு கொடுக்கப்பட்டது,ஏன் ஞாயமா ? அன்யாயமா ?நாராயண நாராயண.