இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் அமெரிக்கா சமர்ப்பித்துள்ள யோசனையின் தீரத்தை குறைக்க வேண்டாம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் ஆங்கில செய்திதாள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இறுதிப்போரின்போது தமிழர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளுக்கு நீதியான தீர்வுக்காணப்பட வேண்டும்.
எனவே அமெரிக்கா யோசனையின் தீரத்தை குறைக்காமல் இருப்பதை இந்தியா உறுதிசெய்ய வேண்டும் என்று கூட்டமைப்பு கோரியுள்ளது.
இதனை வலியுறுத்துவதற்காக தூதுக்குழு ஒன்றை இந்தியாவுக்கு அனுப்ப நேற்று முன்தினம் கொழும்பில் கூடிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவெடுத்தனர்.
விரைவில் இந்த தூதுக்குழுவினர் இந்தியாவுக்கு செல்லவுள்ளனர்.