மாஸ்சின் விமானம் எம்எச்370த்தின் உடைந்து சிதறைய பாகங்கள் எதுவும் வியட்னாமிய கடலில் காணப்படவில்லை என்பதை வியட்னாமிய கடற்படையினருடன் உறுதிப்படுத்திக் கொண்டதாக அரச மலேசிய கடற்படை தெரிவித்துள்ளது என்று பிரதமர் நஜிப் கூறினார்.
“உடைந்து போன பாகங்கள் ஏதும் இல்லை என்று அரச மலேசிய கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது”, என்று நஜிப் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த நிமிடம் வரையில் எம்எச்370 க்கு என்ன ஆயிற்று என்பது யாருக்கும் நிச்சயமாக தெரியவில்லை.
இதனைத் தெரிவிக்க அமைச்சரவையின் உறுப்பினர்களில் பலர் நஜிப்புடன் செய்தியாளர் கூட்டத்தில் காணப்பட்டனர்.
என்னடா இது மூடு மந்திரமா?
இது நஜிப் மோங்கி புட்டிகாரனின் திசை திருப்பும் விளையாட்டு ஒரு மலாய் இனத்தவனும் பயணிக்கவில்லை எல்லோருமே அந்நிய இனம் மேலும் TV 3 கேனயன் நியூஸ் நிலையம் அன்வர் கேசை திசை திருப்ப காலை toodarnthu இது வரை இதையே என்னமோ சீன இனத்தவர்கள் மீது அளவில்லாத பற்று கொண்டவனை போல நாதேறி டிவி3 இடையே ஒழி பரப்புரணுங்க மக்களே மாற்றி யோசி பெரும் தொகை கை மாறி அரசியல் நாடகம் ஆடுகிறான் நஜிப்
விமான விபத்து மனக்கவலை அளிக்கிறது.
விமான விபத்து மர்மமாகவே உள்ளது
அனைவரும் உயிருடன் இருந்தால் மகிழ்ச்சி
திசை திருப்பும் வேலை. நல்லா நடிக்கிறானுங்க
இயற்கை இவர்களைக் காப்பாற்றட்டும்…அனைவரும் நல்லபடியாக நாடு திரும்ப வேண்டும்..
புகை மூட்டம் மோசமான சூழ்நிளையில் விமானபயணம் அவசியமா,பழனிவேல் காணாமல் போனது போல் மாஸ் விமானமும் காணமல் போய்விட்டது.கட்டாயம் விபத்துக்குள்ளாகி இருக்கும் அண்டை நாட்டில் தரையிரங்கி இருந்தால் இந்நேரத்துக்கு தகவல் கிடைத்திருக்கும்.நாராயண நாராயண.
இன்றைய நிலையில் 777 200,போயிங் எம் எச் 370 நவீன விமானம்,பராமறிப்பில் எதோ தவறு நேர்ந்திருக்க வேண்டும் இந்த விமானத்தில் பயணித்தவர்கள் 239 பேரில்5 இந்தியர்கள்,152 சீனாவை சேர்ந்தவர்கள்,38 மலேசியாவை சேர்ந்த பயணிகள்,இந்தோனேசியா சேர்ந்த7பயணிகள்,ஆஸ்திரேலியாவை சேர்ந்த6 பயணிகள்,பிராஸ்,அமெரிக்கா 3 பயணிகள் நியூச்லாந்து,உக்ரைன்,கனடா,நாட்டவர் தலாஒருவர் பயணித்துள்ளதாக தகவல்,கடவுளே உன் கோவம்,உன்னை நேசிப்பவர்களையும் யோசிக்கவைகாதே,ஆனால் உன் அன்பு உன்னை வெறுப்பவர்களையும் நேசிக்கவைக்க 239 உயிர்களையும் பாதுகாப்பாக திரும்ப தா,தா,உனக்கு நன்றி சொல்கிறேன்!
விமானிகள், விமானத்தைக் கடத்த ‘auto pilot mode’ – ல் போட்டு விட்டு தூங்கினார்களா என்ன?. எந்த ஒரு அவசர அழைப்பும் இல்லாமலா காலன் அவர்களை அழைத்துச் சென்றான்?
மனம் பாரமாகத்தான் இருக்கிறது.. என்ன செய்வது… மனசாட்சி இல்லாத இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் பணத்திற்காகவும், பதவிக்காகவும் எதையும் செய்வார்கள்.. இதுவும் ஒரு அனுமானம்தான். ஆனால் இது கண்டிப்பாக இருக்க கூடாது என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன். பயணம் செய்தவர்கள் அனைவரும் உயிர் பிழைக்க நாம் அனைவரும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்…இறைவா அவர்களை காப்பாற்று…
eduellam tantirem,flightil erundever ellorum erendu poonarkel,vietnam news soolivittedu,ende bn aresangem toopukeete aresangem…………modele aresangete maatungkepa……..bn satikarenungke
இச்செய்தியை படிக்க மனம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. என்ன செய்வது.பிரார்த்தனை செய்வதை விட வேற வழி தெரியவில்லையே.——-தலமை பதவியும், கடமை பொறுப்பும் தகுதியானவர்களுக்கும், திறமையானவர்களுக்கும்தான் கொடுக்க வேண்டும். குருதி வழி வந்தவர்களுக்கும், தோலின் நிறத்தை பார்த்து கொடுத்தால் இதுதான் நடக்கும்.
இந்த சூழ்நிலையில் ஆருதல் சொல்ல இல்லையே வாா்தை,பொருமையுடன் இருங்கள் இறைவன் உலகுக்கே பொது,விதியை ஏற்போம்.அலட்சிய போக்கையும்/பொருப்பற்ற அரசாங்கத்தையும் அதன் அதிகாரியையும் கன்டிப்போம்.நாராயண சமா்பணம்.
என்ன சொல்றதுனே தெரியல! நமது நாட்டில் பாவங்கள் அதிகரிச்சாச்சு! அதான் தொடர்ந்து ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவங்களே நடக்குது! வெய்யிலின் வறட்சி…நேர்மை இல்லாத சட்ட ஒழுங்கு… கொலை கொள்ளை போதாததற்கு மர்மமாய் போன விமானம்!!kadavulee தப்பு யார் பண்ணியிருந்தாலும் காணமல் போனவர்கள் அனைவரும் நாடு திரும்ப நீதான் அருள பாலிக்க வேண்டும்!!
விமானத்தை மொங்கோலியா நாட்டுக்கு கடத்தி இருப்பார்களோ என்று நினைக்க தோன்றுகிறது . ..
என்ன அனாலும் அனைவரும் பத்திரமாக திரும்பி வர இறைவனை பிரார்த்திகிறேன்.
இறைவனே அனைவருமே நல்லபடியாக நாடு திரும்ப வேண்டும்.
இறைவனை பிரார்திப்போம். அனைவரும் நலமாக நாடு திரும்ப வேண்டும்.
பல நாடுகள் காணாமல் போன நம் விமானத்தை கண்டுபிடிக்க உதவிக்கு வந்திருக்கின்றன. இதுவன்றோ உலக மனித நேயம்? அவர்களுக்கு நன்றி நவின்றிடுவோம்.
உயர் நிலை சதி போல் தெரிகிறது …….
இதுவும் சதியா?
மாயமாய் மறைந்த (வி)மானம்
மலேசிய வானொலி, தொலைக் காட்சி அனைத்திலும் இதைப் பற்றிதான் செய்தி அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது பற்றிய செய்திகள் அனைவருக்கும் தெரிந்திருப்பதால், அதைப் பற்றி இங்கு எழுதப் போவதில்லை. ஆனால் அதற்கு அப்பால் சில விஷயங்கள் இருக்கின்றன. அவை என் உள்ளத்தை உறுத்திக் கொண்டிருக்கின்றன. பகிர்ந்து கொண்டு தான் ஆக வேண்டும்.
ஒரு விமானம் காணாமல் போகிறது என்றால் மூன்று காரணங்களை அவதானிக்கலாம்: 1) கடத்தப் பட்டிருக்கலாம்; 2) வெடித்துச் சிதறியிருக்கலாம்; 3) இயற்கை காரணங்களால் திசை திரும்பி திக்குத் தெரியாமல் போயிருக்கலாம்.
இந்த மூன்று காரணங்களையும் ஒவ்வொன்றாக ஆராய்வோம்.
முதலாவது கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அனுமானம். இந்த அனுமானத்தில் இரண்டு முக்கிய கேள்விகள் உதிக்கின்றன: 1) கடத்தியவர்கள் யார்; 2) ஏன் கடத்தினார்கள். தீவிரவாதிகள் கடத்தினார்கள் என்றால் அவர்களின் கோரிக்கை என்ன? இன்நேரத்திற்குள் அவர்கள் மலேசிய அதிகாரிகளை/அரசியல்வாதிகளைத் தொடர்பு கொண்டு, விமானம் தங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்று சொல்லியிருக்க வேண்டும் – அப்படிச் செய்யவில்லை. அப்படியே கடத்தியிருந்தாலும் இன்னேரத்திற்குள் வேறு ஒரு இடத்தில் விமானத்தைத் தரையிரக்கி இருக்க வேண்டும். எங்கு தரையிறக்கப்பட்டதோ அந்நாட்டு அதிகாரிகள் நம் நாட்டோடு தொடர்பு கொண்டு அறிவித்திருப்பார்கள்.
அன்வார் ஆதரவாளர்களைச் சந்தேகப்பட முடியுமா? அன்வருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்கும் குறைவாக இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. ஆனால் அன்வாருடைய தீவிரவாதிகள் இதுவோன்ற தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டதில்லை. இதற்கு முன்பும் அவர் சிறைபடுத்தப்பட்டபோது கடத்தல் வேலைகளில் ஈடுபட்டது கிடையாது. எனவே, இந்த அனுமானத்திலும் அடிப்படை இல்லை.
சூலு தீவிரவாதிகளையும் நாம் மறந்து விட முடியாது. கடந்தாண்டு அவர்கள் சபா நிலப் பகுதியில் அத்து மீறி நுழைந்து நாட்டு பாதுகாப்பை சீர்குலைத்துப் போட்டார்கள். ஆனால் இங்கேயும் ஏதோ ஒன்று உதைக்கிறது. அந்நிய நாட்டுத் தீவிரவாதிகள் விமானத்தைக் கடத்தியிருந்தால்/வெடிக்கச் செய்தால் அதற்குத் தாங்களே பொறுப்பு என்று மார் தட்டிக் கொள்வார்கள். பிலிப்பினா அரசாங்கமும் இந்த விஷயத்தில் மலேசியாவுக்கு அதிக ஒத்துழைப்பு தருவதால் அந்த அளவுக்குப் போக வாய்ப்பில்லை.
இயற்கை சீதோஷ்யம் காரணமாக திசை மாறிச் சென்றதா? என்ற கேள்வியும் எழுகிறது. அப்படிச் சென்றிருந்தால் அந்நிய நாட்டிக் கட்டுப்பாட்டுக் கோபுர ராடாரில் நமது விமானம் காட்டப்பட்டிருக்கும். அது பற்றிய செய்தியும் கிடைத்திருக்கும். எனவே இந்த அனுமானமும் வலுவற்றுப் போகிறது.
இது ஒரு சதிநாச வேலையா? விமானம் ‘டைம்பாம்’ வைத்து வெடிக்கப்பட்டதா? விமானம் வியட்நாம் கடற்பகுதிக்குச் சென்று ஒரு சில விநாடிகளின் தொடர்பு கிடைக்காமல் போகிறது. அதன் அடிப்படையில் ‘டைம்பாம்’ மேல் சந்தேகப்பட வாய்ப்பு இருக்கிறது. இப்படி ‘டைம்பாம்’ வைப்பதற்கு ‘உள்ளுக்கு’ இருந்து அதிக ஒத்துழைப்பு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி வெடிக்கப்பட்டிருந்தால் உடைந்த பாகமும் மனித சடலங்கும் இந்நேரத்திற்குள் கடற்பகுதியில் காணப்பட்டிருக்க வேண்டும்.
சரி, இச்செய்தியைப் பின்தொடர்பவர்கள் கடற்பகுதியில் காணப்பட்ட பெட்ரோல் திட்டையும், ‘உடைந்த பாகத்தையும்’, கள்ளக் கடப்பிதழையும் அறிந்திருக்கலாம். ஆனால், இது எல்லாம் நமக்கு நம்பிக்கையைத் தரவில்லை. பெட்ரோல் திட்டு வேறு ஒரு கப்பலில் இருந்து வெளியாகியிருக்கலாம். ‘உடைநத் பாகம்’ என்று நம்பம்படுவது வேறு ஒரு கப்பல் அல்லது இரண்டாம் உலகப் போரின் போது சிதறிய பாகமாகக்கூட இருக்கலாம்.
இதில் நகைப்புக்குரிய காரியம் கள்ள கடப்பிதழ்தான். யாராவது தங்கள் விருப்பத்தின் பேரில் கள்ளக் கடப்பிதழை வைத்துக் கொண்டு தற்கொலை அல்லது கடத்தல் வேலைகளில் ஈடுபடுவார்களா? அப்படியே இருந்தாலும் வேடித்த விமான பாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கும். கடத்தியிருக்கிறார்கள் என்றாலும் நான் மேலே குறிப்பிட்டுள்ளது போல அவர்கள் அந்த விமானத்தை வேறு ஒரு நாட்டில் தரையிரக்கி இருக்க வேண்டும். ஏனென்றால் விமானம் குறிப்பிட்ட அளவு பெட்ரோலை வைத்துக் கொண்டு 24 மணி நேரமும் வானில் பறந்து கொண்டிருக்க முடியாது.
ஒரு முக்கிய புலன் விசாரணையை ஏன் நடத்தவில்லை என்ற கேள்வி என் மனதில் எழுகிறது. அது என்னவென்றால், விமானத்தில் பயணம் செய்தவர்களின் நெறுங்கிய குடும்ப உறுவினர்களை விசாரித்தால் புதிய தகவல் கிடைக்கும். குறிப்பாக கள்ளக் கடப்பிதழில் பயணித்தவர்களைப் பற்றியத் தகவல் கிடைக்கும். இதற்குப் பன்னாட்டு ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. குறிப்பாக அமெரிக்கா போன்ற புலன் விசாரணையில் நிபுணத்துவம் பெற்ற நாடுகளின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
விமான பழுது பார்ப்பு / பாதுகாப்பு ஊழியர்கள் தங்கள் கடமையைப் பொறுப்போடு செய்து வருகிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது. இந்த அனுமானத்தில் அடிப்படை இருக்கிறது. மாஸ் நிறுவனம் தொடர்ச்சியாக நஷ்டத்தில் ஓடுகிறது என்பதை அறிவோம். எனவே, செலவைக் கட்டுப்படுத்துவதற்குப் பல செலவீனங்களை அதிகாரிகள் குறைத்திருக்கலாம். அதன் விளைவாக ஊழியர்களும் ஏனோதானோ என்று தங்கள் கடமைகளைச் செய்திருக்கலாம். இது மிகவும் அபாயகரமானது இது உண்மையென்றால், அனைத்து மாஸ் விமானங்களும் பாதுகாப்பு அற்ற நிலையில் உள்ளன என்று அர்த்தம் கொள்ளலாம். பயனுகளும் பயணிக்க வேறு விமானச் சேவைகளை நாடலாம்.
அப்படியென்றால், இந்த விமானத்திற்கு என்ன கதி என்று சொல்ல வருகிறீர்கள் என்று கேட்கலாம். இதற்குக் காலம்தாம் பதில் சொல்ல வேண்டும். நான் இங்கு எழுதியிருப்பது காலத்தின் தீர்ப்புக்கு முந்திய அனுமானம்.
தாய்லாந்த் பொர்டெர்லஹ் போம் வேடிச்ச்சவுடன மலேசியா அலெர்ட் இருந்திருக்க வேண்டும்.
ஐயா ஜோன்சன் விக்டர் அவர்களே, தங்களுடைய அலசலில் இன்னொரு விடயத்தை மறந்து விட்டீர்கள். மலேசிய விமானத்தள கட்டுபாட்டு கோபுரத்தின் ரேடார்கள், புதியதொரு நிறுவனத்தால் பொருத்தப்பட்டு கடந்த ஓரிரு வருடங்களாக சரியான முறையில் வேலை செய்யவில்லை என்பது இதற்க்கு முன்னர் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகளின் மூலமாகவே செய்தி கசிந்து வந்தது. மலேசிய இராணுவ ரேடார், விமானம் “வழி திரும்பியதாக” (ATB) சொல்லப் படும் வேளையில், விமானத்தள கட்டுப்பாட்டு கோபுரத்தில் இந்த ரேடார் தகவல் கிடைக்காமல் போனது எப்படி? எப்படி? யாரோ எதையோ “மறைகின்றார்கள்” என்பது மட்டும் புலனாகின்றது. அது என்ன என்பது இன்னும் புலப்படவில்லை. கத்திரிக்காய் முற்றினால் கடைத் தெருக்கு வந்தே ஆக வேண்டும்.
தேனீ, நீங்கள் சொல்லுவதில் அர்த்தம் இருக்கிறது. கட்டுப்பாட்டு கோபுரத்தின் ராடார்கள் புதிய நிறுவனத்தால் பொருத்தப்பட்டது என்றால் அது பூமிபுத்தரா நிறுவனமாக இருக்க வேண்டும். பூமிபுத்தரா நிறுவனங்கள் என்றால் அவைகள் கெடுதல் செய்வதற்காகவே வேலைகள் கொடுக்கப்படுகின்றன. இவைகள் எல்லாம் அரைகுறை நிறுவனங்கள். என்ன “மறைக்கின்றார்கள்” என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
கட்டுப்பாட்டு கோபுரத்தின் ராடார்களின் தவறா ?????? அல்லது
அதில் பணி புரிந்த ஊழியர்களின் தவறா ?????? என்பதையும்
விசாரணை செய்ய வேண்டும்.
kutappunarchiyil அதிக கவனம் செலுத்த வேண்டி உள்ளதால்……………
MH370 விமானம் கடைசியாக மலாக்கா நீரிணையின் மீது சென்ற போது KLIA விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு ஊழியர்கள் தொடர்பு கொண்டதாக Al Jazeera தெரிவிக்கின்றது. அதனால்தான் மலாக்கா நீரிணையிலும் அமெரிக்க விமானம் ஒன்று தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கின்றது. விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுத் தல ஊழியர் அவ்விமானத்துடன் தொடர்ந்து எவ்வளவு நேரம் தொடர்பு கொண்டிருந்தார்? அவரின் இறுதி நேர உரையாடலின் சாரம் என்ன? இவற்றின் தகவல்களையும் நமது அரசாங்கம் தெரிவிக்க வேண்டும். மேலும் திருட்டுக் கடப்பிதழை வைத்திருந்தோர் வெளிநாட்டவர் என்பதால் அவர்கள் எவ்வாறு மலேசியாவில் நுழைத்தனர்? அங்கே நமது நாட்டின் குடிநுளைவுத் துறையினர் வழக்கம் போல் தூங்கிக் கொண்டிருந்தனரா? எல்லாவற்றுக்கும் பதில் வருமா என்று பார்ப்போம்.
ஒரு வேலை சகுனி மாமாவை கேட்டால் உண்மை வெளி வருமோ என்னமோ…..