தென்சீனக் கடலில் சில பொருள்கள் மிதப்பதைச் செயற்கைக்கோள் படங்கள் காட்டுவதாக சீனாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் தலைவர் இன்று கூறினார்.
“சீன செயற்கைக்கோள்கள் புகை மண்டலத்தையும் பொருள்கள் மிதப்பதையும் படம் பிடித்துள்ளன…..ஆனால், அவற்றை காணாமல்போன விமானத்துடன் சம்பந்தப்படுத்த இப்போதைக்கு எங்களிடம் ஆதாரமில்லை”, என லி ஜியாஸியாங் செய்தியாளர்களிடம் தெரிவித்தாக ராய்ட்டர்ஸ் கூறியுள்ளது.
இதற்குமுன்னர், சீனா அதன் செய்ற்கைக்கோள்களில் ஒன்று மலேசிய விமான நிறுவனத்தின் விமானம் காணாமல் போனதாக ஊகிக்கப்படும் கடல் பகுதியில் மூன்று பெரிய “பொருள்கள் மிதப்பதை”க் கண்டதாகக் கூறி இருந்தது..
சீனா, காணாமல்போன விமானத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் பத்து செயற்கைக்கோள்களை ஈடுபடுத்தி இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
காத்திருப்போம்
அமெரிக்கர்கள் அடிகடி கூருவாற்கள் உலகத்தின் எந்த பாகத்திலும் ஒரு துரும்பு அசைந்தாலும் கூட எங்களுக்கு தெரியும் மென்று, இறைவன் ஒருவன் மற்றுமே அனைத்தும் அறிந்தவன்.அமெரிக்கர்கள் தயாரித்த (போயிங்) விமானத்தை அவர்களாளையே கண்டு பிடிக்க முடியவில்லை.
சாத்தன் கூறினான் நான் வானத்து நட்சத்திரத்துக்கு மேலே என்னோடு சிம்மாசனத்தை கட்டுவேன் என்று ஆணவத்தோடு கூறினான் . அனால் கடவுளோ அவனை நரகத்துள் வீழ்த்தினார்.அதுபோல் ஆணவமும் அகம்பாவமும் உள்ள மனிதனின் சிந்தனையை சிதறி அடித்து விடுவார் ….ஏன் என்றல் கடவுளே கூறியுள்ளார் என்ன வழி உங்கள் வழி அல்ல உங்கள் வழிகள் என்ன வழி அல்ல என்று.
இந்த மாதிரி தென்கிழக்கு ஆசிய நாடுகளான SINGAPORE, THAILAND, VIETNAM, PHILIPPINES, INDONESIA போன்ற நாடுகளை சேர்ந்த விமான நிறுவனத்தின் விமானம் காணமால் போயிருந்தால், உடனே நமது மலேசியே நாட்டின் அனைத்து தொலைகாட்சியிலும் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், அதிகாரிகள், நிபுணத்துவர்கள் என்று போட்டி போட்டு கொண்டு ” நாங்களாக இருந்தோமானால் இதை இப்படி புடுங்கி அப்படி கத்தை கட்டி எப்படியும் தூக்கி போட்டிருப்போம்” என்று வீர வசனம் பேசி இருப்பார்கள்.
நமது நாட்டு விமானம் காணமல் போய் 1 வாரம் ஆகியும் ஒரு உரோமத்தையும் தொடக்கூட முடிய வில்லை!!!!!!!!!!!!.
வெட்ககேடு !!!!!! வெட்ககேடு !!!!!! வெட்ககேடு !!!!!! வெட்ககேடு !!!!!!
இந்த லட்சணத்தில் அமெரிக்கர்கள் மீது குறை கூறுவதா ?
எதைச் சொன்னாலும் அதனை உடனே மறுக்க வேண்டும் என்று ஹிஷாமுதீனுக்குக் கட்டளை இட்டிருக்கிறார்கள்! அதனை அவர் செம்மையாக செய்கிறார்!
மலேசியா விமான போக்குவரத்து கண்காணிப்பாளர்கள், மலேசியா விமான நிறுவனம் மற்றும் இந்நாட்டு அரசாங்கம் இந்த விமானம் தேடும் பணியில் ஏற்பட்டுள்ள சுணக்கத்திற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். காரணம் “Pentagon” இன்று அளித்த தகவலின் படி, விமானத்தின் சமிக்ஞ்சை தொடர்பு கருவிகள் 2 வெவ்வேறு நேரங்களில் நிறுத்தப் பட்டுள்ளது. “Not a sudden failure”. விடியற்காலை 1.30 மணி அளவில் விமானத்துடன் தொலை தொடர்பு நின்று போயும், மேற்கூறிய 3 அதிகாரத்துவ இலாக்காக்கள் காலை 5.30 மணிக்குத்தான் விமானத்தை தேடும் பணியை ஆரம்பித்து உள்ளனர். (முதல் நாள் தகவல்). ஆக, விமானத் தொடர்பு நின்று போய் 4 மணி நேரம் கழித்துதான் அவர்கள் செயல்படவே ஆரம்பித்து உள்ளனர். இந்த 4 மணி நேரங்களில் இவர்கள் திறமையானவர்கள் என்றால் உடனடியாக அந்நிய நாட்டு செயற்கை கோள் நிறுவனங்களின் உதவியை நாடி விமானத்தை தேடி இருக்கலாம். உடனடியாக அந்நேரத்தில் தென் கிழக்கு ஆசியாவில் பறந்து கொண்டு இருக்கும் விமாங்களை தொடர்பு கொண்டு தொடர்பு விட்டு போன விமானத்தை கண் காணிக்க வேண்டுக்கோள் விடுத்திருக்கலாம். (இதை வியாட்நாம் கண்ட்ரோல் ரூம் செய்ததாக செய்தி வந்தது). நம்மவர்கள் “search & rescue” பணியில் 4 மணி நேரம் காலம் தாழ்த்தியது ஒரு மாபெரும் அறிவிலித்தனம், கையாலாகாதத்தனம் என்று கூற வேண்டும். இந்த 4 மணி நேரமும் அந்த MH 370 வான்வெளியில் சமிக்ஞ்சை தொடர்பு அற்று பறந்துக் கொண்டு இருந்தது உண்மையானால், இந்த விபத்துக்கு நம் நாட்டு அரசாங்கமும், மாஸ் விமான நிறுவனமும் முழு பொறுப்பு ஏற்று, இத்தகைய பொறுப்பற்ற போக்கினால் அவ்விமாத்தை கரை சேர்க்க முடியாமல் போனதற்கு மேல் நிலை அதிகாரிகள் உடனடியாக அவர்தம் பதவில் இருந்து விலக வேண்டும். இல்லையேல், இவ்வாறான மட்டிகளை வைத்துக் கொண்டு நாம் நிம்மதியாகவும் பாதுகாப்புடன் வாழ இயலாது. 9/11 விபத்து அன்று, அமெரிக்க போக்குவத்து மந்திரி முதல் விமானம் இரட்டை கோபுரத்தை தாக்கிய உடனே வின் வெளியில் பறக்கும் அத்தனை விமானங்களையும் உடனடியாக தரை இருக்கும் படி கட்டளை இட்டார். ஏன் அந்த வேகமும், விவேகமும் ஏன் இங்கே இல்லை?. இங்கே மூடி மறைக்கப் படும் விடயங்களில் இதுவும் ஒன்றாக இருக்குமோ? கையாலாகாத்தனம்.
தேனி ஐயா! ஒன்று புரிகிறது! இதெல்லாம் திட்டம் போட்டு செய்த வேலை என்று சொல்லலாமா? அன்வாரின் தீர்ப்பு, அடுத்து எதிர்பார்க்கப்பட்ட ஆர்ப்பாட்டம், காஜாங் தேர்தல், விலைவாசி ஏற்றம் இவைகளை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது இது ஒரு திட்டம் போட்டு செய்த சதி என்றே தோன்றுகிறது! உயிருள்ள ஒரு பெண்ணை வெடி வைத்து கொன்ற ஒரு அரசாங்கம் அல்லவா நமது அரசாங்கம். இது ஏன் செய்ய மாட்டார்கள்? இந்தத் தேர்தல் கூட பாரிசானுக்குச் சாதகமாக (ஏமாற்று வேலை தான்) பயன்படுத்திக் கொள்ளுவார்கள் என நான் நினைக்கிறேன்!