நாட்டில் புகைமூட்ட நிலை மோசமடைந்து வருகிறது. காலை 9-க்கு காற்றின் தரத்தை அளவிட்டபோது 13 பகுதிகளில் காற்றின் தரம் சுகாதாரத்துக்குக் கேடு செய்யும் வகையில் இருந்ததாக பதிவாகி இருந்தது.
இவற்றில் ஏழு பகுதிகள் கிள்ளான் பள்ளத்தாக்கில் இருப்பதாக சுற்றுச்சூழல் துறை இணையத்தளத்தின் காற்றுத் தூய்மைக்கேட்டு குறியீடு (அப்பி) காட்டுகிறது.
கோலா சிலாங்கூரில்தான் காற்றின் தரம் மிக மோசமாக, 158ஆக, இருந்தது. அதற்கு அடுத்த இடத்தில் இருந்தது போர்ட் கிளாங். அங்கு 148.