இலங்கைக்கு எதிராக கடுமையான தீர்மானமொன்றை நிறைவேற்றுமாறு வலியுறுத்தப்படும்: பிரித்தானியா

Hugo_Swireஇலங்கைக்கு எதிராக கடுமையான தீர்மானமொன்றை நிறைவேற்றுமாறு வலியுறுத்தப்படும் என பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் வில்லியம் ஹேக் மீண்டும் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைப் பேரவையின் தலைமையில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.

கடுமையான ஓர் தீர்மானத்தை நிறைவேற்றும் நோக்கில் உறுப்பு நாடுகளின் ஆதரவு திரட்டப்பட்டு வருகின்றது.

சர்வதேச விசாரணைகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை, ஆதரவு வழங்குவதாக வெளியிட்ட கருத்து வரவேற்கப்பட வேண்டியது.

முழு அளவில் சர்வதேச ரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என ஹேக் தெரிவித்துள்ளார்.

TAGS: