ஆஸ்திரேலிய செயற்கைக்கோள் படங்களில் காணப்படுபவை காணாமல்போன எம்எச்370-இன் உடைந்த பகுதிகளாக இருக்கலாம் என்று கருதப்படுகின்ற வேளையில் அப்பொருள்களைத் தேடி எடுத்து உறுதிப்படுத்திக்கொள்வது இலேசுபட்ட காரியமாக இருக்காது எனத் தெரிகிறது.
ஆஸ்திரேலிய கடலியல் ஆய்வாளர் ஒருவர், அந்தச் சிதைந்த பகுதிகள் மிதப்பது உலகின் மிக மோசமான கடல்பகுதியாகும் என்கிறார்.
அப்பகுதியில், சுழன்றடிக்கும் பயங்கரமான காற்று ராட்சத அலைகளைத் தோற்றுவிக்கிறது என சாரி பட்டியராட்சி என்னும் அந்த ஆய்வாளர் கூறியதாக சிட்னி மார்னிங் ஹெரால்ட் அறிவித்துள்ளது.
“மேற்பகுதியில் காணப்படுபவை சிதைந்த பகுதிகளாக இருக்கும். ஆனால், விமானத்தின் பெரும்பகுதி கடல் ஆழத்தில் கிடக்கும். அங்கு கடலின் ஆழம் 5கிலோ மீட்டர்”, என்றாரவர்.
“உலகின் மோசமான கடல்பகுதியில் ஐந்து கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள ஒன்றை வெளியில் கொண்டு வருவது மிக மிக சிரமமாகும்”, என்றவர் சொன்னார்.
அப்பகுதியில் காற்றின் வேகத்தை மட்டுப்படுத்த நிலப்பகுதி எதுவும் இல்லை என்பதால் பலம் வாய்ந்த, ராட்சத அலைகள் உருவாவதாக சாரி கூறினார்.
இதனிடையே, இந்தோனேசிய அதிகாரி ஒருவர் வேறொரு கருத்துத் தெரிவித்திருப்பதையும் சிட்னி மார்னிங் ஹெரால்ட் சுட்டிக்காட்டியது. கடலில் மிதக்கக் காணப்பட்ட அப்பகுதிகளை எம்எச்370-உடன் தொடர்புப்படுத்தித் தகவல் வெளியிடுவதில் ஆஸ்திரேலியா அவசரம் காட்டி இருப்பதாக அவர் கருதுகிறார்.
சிதைந்த பகுதிகளைச் சரிபார்த்த பின்னரே அதிகாரிகள் தகவல் வெளியிட்டிருக்க வேண்டும் என்றாரவர்.
இதிலிருந்து என்ன்ன தெரிகிறது சகலமும் தலைகீழாக நடக்குது நாட்டிலே கரணம் bn … செய்யும் அட்டகாசம் , அட்டுழியம் இறைவனால் சகிக்க முடியாமல் இந்த BN … பாடம் கற்று கொடுத்து கொண்டிருக்கிறார் இன்னும் நிறைய அழிவுகள் MUHIDIN MAHATHEER NAJI ROSMAH வினால் மலேசியா மக்களுக்கு ஏற்பட போவது உண்மை ஆகவே மக்கள் நன்றாக வாழ இந்த … அழிவதே மேல்