காணாமல் போன மாஸ் எம்எச்370 தின் பயணம் இந்திய பெருங்கடலில் முடிந்து விட்டது என்று பிரதமர் நஜிப் ரசாக் வெளியிட்ட அகாலமான அறிக்கைக்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று அந்த காணாமல் போன விமானத்திப் பயணித்த சீன பயணிகளின் உறவினர்கள் கூறுகின்றனர்.
அதில் எவரும் உயிருடன் இல்லை என்று அறிவித்த மாஸ் விமான நிறுவனமும் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர். பிரதமர் நஜிப்பும் மாஸ்சும் வெளியிட்ட அறிக்கைகளுக்கு போதுமான ஆதரம் இல்லை என்று அவர்கள் கூறினர்.
இன்று பெய்ஜிங்கிலிருந்து இங்கு வந்து சேர்ந்ததும், 35 உறவினர்கள் அடங்கிய குழுவின் பேச்சாளர் ஒருவர் பிற்பகல் மணி 2.00 அளவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தை நடத்தினார்.
“இப்போதிலிருந்து மலேசிய அதிகாரிகள் அவர்களின் முழு ஆதாரங்களை வெளியிடுவார்கள் என்றும், எங்களுடைய கேள்விகளுக்கு பதில் அளிப்பார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம்.
“அடுத்து, கடந்த வாரம் குழப்படியான தகவல்களை அளித்து தேடல் மற்றும் மீட்பு பணிகளை முடக்கியதற்காக மலேசிய அரசாங்கம் மன்னிப்பு கோர வேண்டும்.
“மேலும், மலேசிய அரசாங்கமும் மாஸ்சும் எவ்வித ஆதாரமும் இன்றி அந்த விமானம் சிதைந்து விட்டது என்றும் எவரும் உயிர் பிழைக்கவில்லை என்று பொறுப்பற்ற முறையில் கூறியதற்காக மன்னிப்பு கோர வேண்டும்”, என்று அப்பேச்சாளர் ஜியாங் ஹுய் செய்தியாளர்களிடம் கூறினார்.
சிவந்த கண்ணுடன் காணப்பட்ட அவரது மகன், “எங்களுக்கு ஆதாரம், உண்மை மற்றும் எங்களின் அன்பானவர்கள் வேண்டும்” என்று கத்தினார்; கூட இருந்தவர்கள் தங்களுடைய கண்ணீரை துடைத்துக் கொண்டனர்.
மார்ச் 24 இல், பிரதமர் நஜிப் எம்எச்370 இன் பயணம் இந்திய பெருங்கடலில் “முடிந்து” விட்டது என்று அறிவித்தார். அது விழுந்து நொறுங்கி விட்டது என்று கூறவில்லை.
இதனிடையே, சீனாவில், நஜிப்பின் அறிக்கை வெளியிடப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக மாஸ் நிறுவனம் பயணிகளின் உறவினர்களிடம் இதனைத் தெரிவிக்க தொடங்கியதோடு அதில் எவரும் உயிர் பிழைக்கவில்லை என்றும் தெரிவித்தது.
மன்னிப்பு கேட்டால் பத்தாது!
மற்றவகளின் உழைப்பில் சுகபோகமாக,மிரட்டி வாழும் கூட்டத்தாரின்அதிகாரம் சீனப் பயணிகளிடம் எடுபடாது,சில நாடுகள் அளித்த குழப்பமான தகல்களை அடிப்படையாகவைத்து mh370ன் பயணம் இந்திய பெருங்கடலில் முடிந்து விட்டது என்று முடிக்கப்பார்த்தார்,பிரதமர் நஜிப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு அவருக்கே வினையாக அமைந்து விட்டது 35 உறவினர்களின் கேள்விக்கணைக்கு எப்படி பதில் அளிக்கிறார் பார்க்களாம் எங்கு போயி முடியுமோ ,,,,,,,,!
MH 370 விமான சீன பயணிகளின் உறவினர்களே !!!!!
உங்களைவிட எங்கள் பிரதமருக்கு அவர்களது முஸ்லீம் சகோதரர்கள் ” BANGSAMORO ” முக்கியமானவர்கள் அல்லவா !!!
அதுதான் அந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இப்படி ஒரு
அவசர அறிவிப்பை செய்திருக்கிறார்.
இனி நமது கல்வி அமைச்சர் சீன மொழிக்கு எந்த நெருக்குத ல்களையும் கொடுக்க முடியாது! சீன அரசாங்கம் பார்த்துக் கொள்ளும். அவர்கள் என்ன இளிச்சவாயர்களா!
இவனுங்க அதாவது மலேசியா அரசாங்கம் மட …
அம்னோ ஆணவம் சீன அடிமை .