-மு. குலசேகரன், ஏப்ரல் 3, 2014.
மஇகா முன்னாள் தலைவர் ச. சாமிவேலு 31 -3-2014 இல் டிவி 1 க்கு அளித்த நேர்க்கானலில் மஇகா ஹோல்டிங்ஸ்சின் தோல்விக்கு என்ன காரணம் என்று கேட்டபொழுது, அதற்கு அவர் அன்றைய அரசாங்கம் போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை எழுப்பியிருந்தார்.
இந்தப் பதில் முன்பு சாமிவேலு கூறாத புதிய ஒன்று என்று நான் கருதுகிறேன். கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கூறவேண்டுமே என்று நினைத்து சாமிவேலு உளறியிருப்பதாகவே எனக்கு படுகிறது. எத்தனையோ சந்தர்ப்பங்களில் பங்குதாரர்களும், பத்திரிகையாளர்களும் ஏன், நான்கூட இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளேன். அப்பொழுதெல்லாம் மஇகா ஹோல்டிங்ஸ் தோல்வியானதற்கு அரசாங்கத்தின் ஒத்துழையாமைதான் காரணம் என்று அவர் கூறியதே இல்லை. இப்பொழுது இந்தப் புதிய சால்ஜாப்பு எங்கிருந்து வந்தது? இதனை சாமிவேலுவால் நிருபிக்க முடியுமா?
இது அரசாங்கதின் மீது போடும் பழியாகாதா? இதனைக் கேட்டுக்கொண்டு பாரிசான் அரசு சும்மா இருக்கக் கூடாது. உண்மையென்றால் சாமிவேலு அதற்கான ஆதரங்களை வழங்க வேண்டும். இல்லையென்றால் அரசாங்கம் சாமிவேலு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மஇகா ஹோல்டிங்ஸ்சின் தோல்விக்கு இதுதான் காரணமா ?
ஏழைகளின் பணத்தை வசூல் செய்து, “ இதைச் செய்கிறேன், அதைச் செய்கிறேன்” என்றெல்லாம் வாக்குக் கொடுத்து, 25 வருடங்களுக்குப் பிறகு முதலுக்கு “பங்கம்” ஏற்படா வன்ணம் அப்படியே முழுமையாகக் கொடுக்க சாமிவேலுவைத் தவிற வேறு யாரால் முடியும்? மஇகா ஹோல்டிங்ஸ்சின் ஊழலை விசாரிக்க ஜனநாயக செயல் கட்சியின் ஆலோசகர் லிம் கிட் சியாங் 1992 இல் நாடளுமன்றத்தில் சர்ச்சையை கிளப்பியபோது அவரை நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ள சில மாதங்கள் தடை விதிக்கப்பட்டது . அது அவருக்கு கொடுக்கப்பட்ட “பரிசு” என்பது மலேசிய இந்தியர்களுக்கு தெரியும். அப்பொழுதே அந்த விசாரணையைச் செய்ய அனுமதி அளித்திருந்தால் உண்மை அப்பொழுதே வெளிப்பட்டிருக்கும்.
சாமிவேலு மஇகா ஹோல்டிங்ஸ் தோல்விக்கு மட்டும் காரணமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களின் இன்றையத் தாழ்வு நிலைக்கும் அவரே காரணம்!
1997 ல் தென்னிந்திய தோட்டத் தொழிலாளர்களுக்கு சொந்தமான நிபோங் திபாலில் இருந்த 10 ஏக்கர் நிலத்தைஅம்னோவிற்கு தாரை வார்த்ததுவும் சாமிவேலுதான். அப்பொழுதே நான் நாடாளுமன்றத்தில் அதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தேன்.
இந்திய மாணவர்கள் எண்ணிக்கை உயர் கல்விக்கூடங்களில் தேய்பிறைபோல் குறைய ஆரம்பித்ததும் இந்த மகான் காலத்தில்தான்.
அவர் காலத்தில்தான் குண்டர் கும்பல் ம.இ.காவில் தலையெடுக்க ஆரம்பித்தது. அதற்கு சாட்சிதான் குண்டர்களால் நானும் சுப்ராவும், மஇகாஹோல்டிங்ஸ் கூட்டத்தில் கேள்வியெழுப்பிய போது வாங்கிய அடிகள்.
சாமிவேலு மற்றும் மகாதீர் காலத்தில்தான் இந்தியர்களின் வீழ்ச்சிக்கு வித்திடப்பட்டது.காவல்துறை, பாதுகாப்புதுறை , சுகாதாரத்துறை, பொதுப்ணித்துறை இப்படி எல்லா துறைகளிலும் இந்தியர்கள் என்ணிக்கை மகாதீரால் திட்டமிட்டு குறைக்கப்பட்ட போது அவருக்கு ஒத்து ஊதிக்கொண்டு ஜால்ரா போட்டது இந்த சாமிவேலுதான்.
இந்தியர்களுக்காக உருப்படியான எந்த ஒரு திட்டத்தையும் சாமிவேலு முன்னெடுக்கவில்லை. அவர் தனக்கும் தன்சகாக்களுக்குமே சொத்து சேர்ப்பதில் முனைந்தாரே தவிற இந்தியர்களுக்கென்று அவரிடம் ஒரு திடமான முன்னோடி திட்டம் இல்லை.
மஇகா ஹோல்டின்ஸ்கூட இந்தியர்களுக்காக அவர் போட்ட வளர்ச்சித் திட்டம் என்று சொல்லப்பட்டாலும் அதன் முடி எதிர்மறையாக போனதற்கு அவர்தான் காரணம். சரியானபொருளாதார அறிவும், அனுபவமும், பணத்தை நிர்வகிக்கக்கூடிய திறமையான ஆட்களை நியமிக்காத காராணத்தினால்அந்தத் திட்டம் தோல்வியில் முடிந்தது. ஊதுபத்தி கம்பெனியிலும், விசிடி கம்பெனியிலும் பணத்தைப் போட்டால் வேறு என்ன கிடைக்கும் ?
1980 -90 களில் நாட்டிலுள்ள தோட்டப்புறங்கள் அரசாங்கத்தால் மேம்பாடு என்ற பெயரால் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்தியர்கள் ஆதரவற்றவர்களாக விடப்பட்டபோது அதைப் பார்த்துக்கொண்டு வாளாவிருந்தவரும் இந்தத் தானைத் தலைவர் சாமிவேலுதான். இதற்கு புத்ரா ஜெயா உருவாக்கத்தின் போது வெளியேற்றப்பட்ட இந்தியர்கள் டெங்கில் என்ற இடத்தில் முறையான வீடு கொடுக்கப்படதாதால் கூடாரம் அடித்து வாழ்ந்து வந்ததை நல்ல உதராணமாகக் கொள்ளலாம். சிங்கம் போல் கர்ஜித்த குரலில் மஇகாவினரையும் சாதாரண ஏழை இந்தியனையும் அடக்கி ஆண்ட சாமிவேலு மாகதீரின் முன்னால் பூனையாகி வாயை மூடிக்கொண்டு ஆமாம் சாமி போட்டர். அவர் நினைத்திருந்தால் அந்த தோட்ட தொழிளாளர்களுக்கு பெல்டா போன்று ஒரு திட்டத்தை ஏற்படுத்த அரசாங்கத்தை வலியுருத்தியிருக்க முடியும். அதற்கான நியாயமான காரணங்களும் அப்பொழுது இந்தன. ஆண்டாண்டு காலமாக இந்த நாட்டின் வளப்பத்திற்காக தியாகம் செய்த இந்தியர்களுக்காக இப்படி கேட்பது ஒன்றும் அதிகமில்லை.
வாய்ப்பும் பதவியும் அதிகாரமும் கையில் இருந்த காலத்தில் அதனை சரியாக பயன்படுத்த பயந்து அம்னோவுக்கும் மகாதீருக்கும் அடிமை போல் சேவை செய்ததால்தான் இந்தியர்களின் உரிமையை தட்டிக் கேட்க இயலாமல் போய்விட்டது.
தன் சுயலாபத்திற்காகவே மஇகாவை பயன் படுத்திக் கொண்ட சாமிவேலு, அவரின் இலட்சியத் தோன்றலான மஇகா ஹோல்டிங்ஸ்ஸின் தோல்விக்கு அரசாங்கத்தை குறை கூறுவது உண்மைக்கு புறம்பானது. வசூலித்த 10 கோடி வெள்ளியை அரசாங்கமா எடுத்துக்கொண்டது? அரசாங்கமா பணத்தை இப்படிதான் முதலீடு செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தது?
“நமக்கென்று சேர்த்துக்கொள்ளும் ஆசை வந்துவிட்டால் பிறருக்கென்று எதுவும் செய்யமுடியாமல் போய்விடும்.” இது எம்ஜிஆர் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பேசிய வசனம். இந்த வசனம் சாமிவேலுவை பொறுத்த மட்டில் மிகவும் உண்மை.
சரியான கேள்வி.ஆடதேரியாதவன் மேடை கோணல இருக்குனு சொன்ன கதையாள இருக்கு.
யாங் பெர்ஹோர்மாத் அவர்களே ஷபாஸ்.
இந்த மாண்புமிகு ……
ம. இ கா. ஒல்டிங்க்சின் …….
வழக்குகளை முன்னெடுத்தவர் !!
இவரின் குடும்பமே ……
அன்று … ம . இ . வின் உறப்பினர்கள் !!
இந்த குலசேகரனுக்கு சுயவிளம்பரம் தேட வேண்டும் என்றால் சாமிவேலுவை வைத்தே தேடி கொள்வார் என்பது நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை .முடிந்து போன ஒரு அத்தியாயத்தை வைத்து அரசியல் லாபம் தேடுவதில் என்ன லாபமோ தெரிய வில்லை இந்த நாடாளமன்ற உறுபினருக்கு.இந்தியர்களின் முழு விழ்ச்சிக்கு சாமீ வேலுதான் மூல காரணம் என்று மீண்டும் அள்ளிவிட்டு அரசியல் லாபமும்’ காசே இல்லாமல் சுய விளம்பரம் தேடி கொள்வதும் கண்டனத்துக்குரியது .எனக்கு ஒன்னு மட்டும் புரியவே இல்லை இந்த குலசேகரனுக்கு அம்னோ அரசாங்கத்தை நேரடியாக விமர்சனம் செய்வதற்கு என்ன நடுக்கமோ தெரிய வில்லை ,சாமீ வேலுவை மக்களுக்கு எதிரியாக காட்டியே இவர் அரசியல் நடத்துவது வெட்க கேடு .என்ன அருவருப்பான ஒரு அரசியல் .ஜனநாயக கட்சியில் அதாவது பேராக் மாநிலத்தில் உங்கள் கட்சி தேர்தலில் உங்களுக்கு ஆப்பு வைத்தார்களே ஞாபகம் இருக்கிறதா குலசேகரன் ,நீங்கள் உங்கள் சேவையை சரியாக செய்தும் உங்களுக்கு எதிராக சதி நடந்து ஞாபகம் இருக்கிறதா குலசேகரன் ? புளித்து போன ஒரு விசியத்தை வைத்து அரசியல் நடத்தாமல் இனிமேல் மக்களுக்கு குறிப்பாக இந்திய மக்களுக்கு உங்களுடைய சேவை என்ன வென்று காட்டுங்கள் குலசேகரன் .
ம இ கா ஹோல்டிங்க்ஸ் அடுத்தவர் கைக்கு மாறிய உடன் இப்பொழுது விலை RM 1.56 காசு எப்படி இது சாத்தியமாகியது ???அன்று இதை நிர்வகித்த கூ மூட்டைகலுக்கு புரியுமா ??? இவன்கள் மக்களுக்கு பயாஸ்கோப் படம் கான்பிக்கிரான்கள் .
ஒரு கம்பனியில் வேலை செய்வோறுக்கு சம்பலத்தை தவிர வேறு எந்த எலாவுன்சும் போனசும் தரமாட்டான் ஆனால் நிரைய டோனேஷன் கொடுப்பான் பின் டத்தோ பட்டம் கிடைக்கும் ஐ.எஸ்.ஓ கிடைக்கும்,நிரைய குத்தகை கிடைக்கும்,கம்பனியை விரிவாக்கம் செய்வான் நிறையப் பேறுக்கு வேலை கொடுப்பான்.இப்படி வளர்ந்தது தான் மலாயாவா இருந்த மலேசியா.தோட்டப்புர கலை கலாச்சாரம் இப்போ அனாகரீகமா தெரியுது.மோடன் மலேசிய தந்தை யாா்?,இப்போ நம் மக்கள் பயிலும் தொழில் கல்வி அமைத்து கொடுத்தவர் யாா்(நம்மவரது).பினாங்கில் இந்தியர்க்கு டி.ஏ.பி என்ன மாற்றம் தந்தது,பள்ளிக்கு வாா்த்த நிலம் பட்டா போட்டாச்சா?,பிறர் மீது குரை சொல்வதை நிறுத்தி,ஏதாவது செய்துவிட்டு மாா்தட்டிக் கொள்ளுங்கள் ப்லீஸ்,ஆணால் நம்மவர்கள் ம.இ.க ஹோல்டிங்ஸ் கூட்டத்தில் போலீஸ் காரா் முன்பே அடி வுதை வாங்கியது மறக்க முடியாத வொன்று அதிலும் வயதானவர்கள்.நாராயண நாராயண.
வேல்முருகன் அவர்களே உண்மையை சொன்னால் கசக்கிறதோ! YB குலா MAIKA HOLDING இல் பணம் போட்டவர், நடந்த அநியாயங்கள்,அக்கிரமங்கள்,தில்லுமுல்லு,மோசடி பற்றி குலா கேள்வி எழுப்பி அடி வாங்கியவர். சொந்த பணம் போட்டவனுக்கு தான் வழியும் வேதனையும் புரியும்.நீங்கள் உங்கள் பணத்தை யாராகவது கடன் கொடுத்து ,அல்லது நண்பர்களுடைய பேச்சை கேட்டு பணம் முதலிடு செய்து, ஒன்றும் கிடைக்கவில்லை என்றல் பேசாமல் சும்மா இருபிர்களா? அல்லது போனால் போகடும் என்று அஹிம்சை வழியில் செல்விர்களா? முடிந்து போனது என்று சொன்னால் சாமிவேலு வாயை முடிகொண்டு இருக்க வேண்டும்.மக்களை இன்னும் மடையர்கள், மா.இ.கா .காரர்கள் போல் ஆட்டு மந்தைகள் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்.சாமீ வேலுவின் TV 1 பேட்டியை நீங்கள் பார்த்திருக்க வேண்டும்.நாட்டில் இந்தியர்கள் சுபிட்சமாக வாழ்கிறார்கல்,என்று அல்லிவிடிட்ருகிறார்.
VEL MURUGAN DESA MENTARI PJ ஒரு ம இ கா கூஜாதூக்கி! இப்படியெல்லாம் எழுதி அண்ணா பெருசா எதோ அடி போடறாரு! அதனாலேதான் அவரு பெயரே கொட்டை எழுத்தில் எழுதிருக்காரு!
அவருடைய பொருளாதார அறிவு அவர் குடும்பத்தை உயர்த்துவதற்குத் தான் பயன் பட்டது. அவர் ஆபிஸ் பையானாக இருந்த போது இருந்த அறிவு அதற்குப் பின்னரும் மாறவில்லை.இல்லாவிட்டால் ஊதுப்பத்தி, விசிடி கம்பனிகளில் முதலீடு செய்வதென்றால் அது ஆபிஸ் பையன் அறிவு தானே! ஆனால் வேல்முருகன் சொல்வதில் ஒரு நியாயமுண்டு. மைக்கா ஹோல்டிங் தோல்விக்கு அவர் காரணம் இல்லை. அந்தக் காலக் கட்டத்தில் அவர் ஆஸ்திரேலேயாவில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருந்தார்!
வேல் முருகனுக்கு யாரோ ம இ காவில் பெருசா கொடுக்க போகிறார்களா ? ஏன் இந்த பொழப்பு வேல் முருகன் ? yb குலாவின் கட்டுரை உண்மைக்கு புறம்பானவை இல்லையே ! 25 வருடம் கழித்து ஒரு லோட்டுக்கு 900 வெள்ளி கொடுத்த சாமிவேலு சபிக்க படவேண்டியவரே ! நீங்கள் கூஜா தூக்கி சாபத்தை வாங்கதிர்கள் !
டத்தோ ஸ்ரீ சாமிவேலுவின் அன்றைய பேட்டி படு மோசம்.அன்று இருந்த வீரம் , கர்ஜனை,கொக்கரிப்பு, ஆணவம்,தலை திமிர் அனைத்தும் அடங்கி விட்டது.ஆனால் பேட்டியாளரின் கேள்விகளுக்கு நொண்டி சாக்கு கூரினார் என்றால் அது மிகையாகாது.மைக்க ஹோல்டிங்க்ஸ் விவகாரத்தை மிகவும் மழுப்பலான பதில்.அதிலும் சிக்கல்.
இருப்பினும் ம இ கா அளப்பரிய சேவை செய்துவிட்டதாக கொக்கரிக்கிறார்.இன்னும் தனது அய்யோக்கிய தனத்தை முடி மறைக்கிறார்.இது வங்கி பணம் விவகாரத்தில் முழுமையான பதில் கொடுக்கவில்லை.இதில் அரசு தொடர்ந்து ம இ கா விடம் தான் கொடுக்க வேண்டும்.அப்பொழுதான் ம இ காவால் தேர்தல் நேரத்தில் இந்தியர்களின் வாக்குகளை கொண்டு வந்து தேசிய முன்னணிக்கு கொட்ட முடியும் என்றும் பொய்யுரைத்தார் .டத்ஹோ ஸ்ரீ சாமிவேலுவிடம் அரசு 300 மில்லியன் ரிங்கிட் மானியமாக எம்மிஸ்ட் பல்கலை கலகத்திக்கு வழங்கி யுள்ளது என்று ஒப்புக்கொள்கிறார்.ஆனால் அவர் பொறுப்பில் இருந்த பொது அப்பணம் வாங்கிய உடனே என் சமுதயத்திக்கு அறிவிக்க வில்லை.அன்று அரசு கொடுத்த பணத்தை எவ்வளவு சுருட்டினார் என்பது யாருக்கு தெரியும்.அவரது காலத்தில் எல்லாமே ஊழல் .டத்தோ ஸ்ரீ பலனிவேளிடம் அரசு 200 மில்லியன் ரிங்கிட் கொடுத்தது அதற்கும் இன்னும் பதில் இல்லை.அந்த 200 மில்லியன் எங்கே போனது என்பதை இன்னும் பாரிசன் அரசும் ஊமை துரை பழனிவேலு இன்னும் வாயையே திறக்க மாட்ட்ரர்.இதே போல் டத்தோ ஸ்ரீ சுப்ரமணியத்திடம் தற்போது அரசு 150 ரின்ன்கிட் கொடுத்துள்ளது.அடக்கும் முறையான கணக்கு வழக்கு கிடையாது.இந்த பணத்தில் எவ்வளவு ரோச்மாவுக்கு லச்ச்சமாக கொடுத்தார் என்பது தெரிய வில்லை.
ஆக மொத்தத்தில் ம இ காவின் எல்லா தலைவர்களும் இந்திய சமுதாயத்தை மொட்டை யடித்தது அவர்களின் மா பெரும் சாதனை.
மைக்கா ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் தோல்விக்கு சாமிவேலு தான் முழுப் பொறுப்பு.அதே போல் மலேசியா இந்தியர்களின் கல்வி,பொருளாதாரம்,அரசு வேலை வாய்ப்பு, அரசு உயர் கல்விக்கூடங்க்கலில் உயர் கல்வி வாய்ப்பு, வியாபார லைசென்ஸ் வாய்ப்பு,SME LOAN , வங்கி கடன் வாய்ப்பு, அரசாங்க திட்டங்களில் இந்தியர்களின் உரிமை மற்றும் வாய்ப்பு,GLC நிறுவனங்களில் வேலை வாய்ப்பு, வாரிய உறுப்பினர் பிரதநீத்துவம் இன்னும் பல வாய்ப்புக்களை கொட்டை விட்டவர் இந்த மஹா கணம் பொருந்திய தலை கணம் பிடித்த,மாட்டரு கருத்தையே ஒளித்து கட்டிய முரடன் சாமிவேலு தான் எல்லாவற்றிக்கும் முழுக் காரணம்.
மைக்கா நிறுவனத்தை தாரை வார்த்துக் கொடுத்து தங்களுக்கு வேண்டியதைப் பெற்றுக் கொண்டவர்கள் இப்போது எம்ஐஇடி மற்றும் ஏய்ம்ஸ்ட் கல்லுரியையும் தங்கள் சொத்தாக்கிக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். குலா அவர்களே மக்கள் சொத்தை அபகரிப்பவர்களை மட்டுமல்ல அவர்களுக்கு ஜால்ரா போடும் ஆசாமிகளுக்கு ஆப்பு வையுங்கள்.
மணிமயமாகி சுப்ர பாதம் பாடும் இந்திய அமைச்சர் ஒருவர் தனது முன்னாள் அமைச்சகத்தின் வழி தொழிலாளிகளின் பிள்ளைகளுக்கு தனியார் தொழிற் கல்வி பயற்சி கொடுப்பதாக எழு எட்டு மையங்களை பினாமியின் பெயரில் வைத்து கொண்டு அரசாங்க மானியம் பெற்று ஏப்பம் விட்டதாக ஊர் குருவி ஒன்று வந்து காதோரம் கடிச்சி விட்டு போனது!.இது சம்பந்தமாக இன்னாரின் அண்ணா இலஞ்ச ஒழிப்பு இலாக்காவின் தேடுதலுக்குப் பயந்து வந்தவரை வாழ வைக்கும் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்ததாக பக்கத்தில் இருந்த இன்னொரு ஊர் குருவி ஓலமிட்டது. ஆக மொத்தம் இந்தியர்களை அரசாங்கத்தில் நிர்வகிக்கின்றோம் என்று கூறிக் கொண்டு, தற்கால பெருச்சாளிகளும் பழையதனையே புடம் போட்டு உருட்டி பிரட்டிக் கொண்டு போகின்றதாம்.கேட்க நல்லா இருக்கு இல்ல!?
யெமக்கு இதைபற்றி முலுமையாக தெரியாது,ஆனால் பல தொழில் கல்வி மையங்கள் அன்னாா் அமைத்து கொடுத்ததாக கேள்வி,இன்று நம் மக்கள் தொழில் பழக வசதியாக இருப்பதாகவும் கொண்டோம்.வாழ்க நாராயண நாமம்.
வேல் முருக சமுதய துரோகி சாமிவேலுவை நல்ல துக்கி பேசுகிறிர்கள் அவர் மைக்க ஹோல்டிங் பணத்தில் இருந்து உங்களுக்கு எதும் கொடுதார.அப்படி இருந்தால் நீங்களும் நாசமாக போய் விடுவிர்கள் .சுருக்கமா சொன்னால் போனால் இந்திய சமுதாயத்துக்காக போரடும் தமிழன் சகோதர குல.அவர்கள். வேல் முருக சாமிவேலுவிடம் கேளுங்கள் லாபு நெகிரிசெம்பிலன் தோட்ட மக்களிடம் பாண்டிதான் கூட சேர்த்து கொண்டு மிரட்டி பணம் வசுலித்த விதம் ஞாபகம் வருகிறத நாசமபோக
இந்த சங்கலி முத்து மகன் … ஒரு சமுதாய துரோகி,,,,,,,, இவனுக்கு வக்காலத்து வாங்கும் வேல் முருகன் ,,,, நீ ஒரு கூஜா தூக்கி..,,,
மைக்க ஹோல்டிங்க்ஸ் தோல்விக்கு அரசாங்கம் காரணமல்ல என்று
மலேசியா இந்தியர்க்கு தெரியும், சும்மா காதில் பூசசுற்றவேண்டாம் .இருபத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் தெரிந்ததா அரசாங்கம் ஒத்துழைப்பு தரவில்லை என்று? அதுசரி , யூஏபீ வங்கி மூடுவிழா கண்டதற்கும் அரசாங்கம்தான் காரணமா? என்னையா, கேல்வரகில் நெய்வழிகிறதென்றால் கேட்ப்பவனுக்கு எங்கேயயா போனது புத்தி. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. இப்படியே சாக்குபோக்கு இருக்கட்டும்
ஆமாம்.அன்வாருக்கும் ,கர்பால் சிங்குக்கும் வக்காளுது வாங்கியபோது எவனும் என்னை அன்வாரிடமும் நான் எதையோ எதிர்பார்கிறேன் என்று எவனும் சொல்லவில்லையே .பிஸ் போன பழுப்பு வெளிச்சத்தில் எனது கருத்தை படித்து விட்டு இங்கு எனக்கெதிராக கருத்து எழுதி இருக்கும் சிலரின் கருத்தை கண்டு எனக்கு வருத்தப்பட நேரமில்லை .எனது கருத்தில் சாமீ வேலு இந்தியர்களின் பொருளாதரத்தை இமயத்தின் உச்சியில் கொண்டு நிறுத்தி விட்டார் என்று இல்லை ,ஒட்டு மொத்த இந்தியர்களின் பொருளாதார வீழ்ச்சிக்கு சாமீ வேலுதான் முழு பொறுப்பு என்றால் ‘அதை ஏற்று கொள்வதற்கு அறிவிழந்த யாரோ ஒரு சிலராக மட்டுமே இருப்பார் ,சாமீ வேலுவை இந்தியர்களின் விழ்ச்சிக்கு போருபாளியாக சித்தரிச்சு அம்னோ தலைமையிலான மத்திய அரசாங்கத்தை இந்த எதிர்க்கட்சி நாடாளமன்ற உறுப்பினர் தற்காப்பது போல் இருக்கிறது .மைக்கா ஹோல்டிங்க்ஸ் தோல்விக்கு சாமீ வேலுவும் அதை நிருவகித்த வேல்பாரியும்தான் முழு பொறுப்பு அதை நான் மறுக்கவும் இல்லை மறைக்க கூடிய விசியமும் இல்லை .மத்திய அரசாங்கமே இந்திய சமுதாயத்தின் ஒட்டு மொத்த விழ்ச்சிக்கும் பொறுப்பாளி என்பதையும் யாரும் மறுக்க முடியாது .சாமீ வேலுவின் மீது மட்டும் அனைத்தையும் திணித்து;மத்திய அரசாங்கத்தை தற்காப்பது குறிப்பாக மாகதீரயும் ,அப்பொழுது துணை பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் பதவி வகித்த அன்வாரையும் ஒதுக்கி சாமி வேலுவை மட்டும் பலிகடாவாக அக்க வேண்டாம் என்பதுதான் எனது வேண்டுகோள் .மகாதிரும் பிரதமராகவும் ,அன்வார் துணை பிரதமராகவும் இருந்த காலத்தில் இந்திய மக்களுக்கு செய்த சாதனைகள் எத்தனை ? சாமீ வேலும் பல விசியங்களில் இந்தியர்களின் நலனிலும் அக்கரையிலும் கோட்டை விட்டவர்தான் என்பதை மறுக்க முடியாது .அதற்காக ஒட்டு மொத்தமாக எல்லாவற்றையும் அவர் மீது திணிப்பது அரசியல் கால்புணர்ச்சியே தவிரே வேறொன்றும் இல்லை .குறிப்பாக இந்த குலசேகரனை.vandu தற்காத்து ,அன்வாரை தற்காத்து இங்கே நான் பல முறை கருத்து எழுதி இருக்கிறேன் .அப்பொழுது எல்லாம் எவனும் என்னை துற்றி எழுதியது இல்லை கரணாம் எல்லாரும் எதிரணியில் இருகிறோம் என்ற உணர்வு ,அது உண்மையோ இல்லை பொய்யாக இருந்தாலும் வாயை பொத்திகொண்டு இருந்தோம் .நானும் எதிரணியில்தான் ஓர் உறுபினராக இருக்கிறேன் அதற்காக எல்வற்றுக்கும் ஆமாம் சாமீ போட்டு இங்கு கருத்து எழுத வேண்டிய கட்டாயத்தில் இல்லை .மை இ கா ஹோல்டிங்க்ஸ் கதை முடிந்த அத்தியாயம் ,அதற்க்கு முழு பொறுப்பாளி சாமிவேலும் ,அவரின் புதல்வரும் என்பது ஆணித்தரமான உண்மை .அது முடிந்து போன அத்தியாயம் .அது மிக்கி முக்காடு போட்டாலும் மீண்டும் வராது .அதை வைத்து கொண்டு தனி நபர் தாக்குதல் நடத்தி அரசியல் ஆதாயம் தேடும் குல சேகரனின் அரசியல் சுய விளம்பரம் வெட்கபட வேண்டிய விசியம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் .வண்டு முருகன் ,இங்கு தைரியம் இருப்பவன் மட்டுமே எந்த ஒரு ஒளிவு மறைவு இல்லாமல் தனது கருத்தில் உண்மை என்று ஆணித்தரமாக இருப்பவன் மட்டுமே தனது சொந்த பெயரிலும் முகவரியும் இட்டு எழுவான் .பொய்யும் புரட்டும் எழுதி பின்னால் பிரச்னையில் மாட்டி கொள்வோமா என்று என்னுபவந்தான் புனை பெயரில் எழுதுவான் .தமிழர் நந்தா எவனாச்சும் பெருசா குடுபாநானு எண்ணிதானே இங்கு எழுதுகிறிர்கள் .உங்களை மாதிரி விலைக்கு போன கருத்தாளன் நான் இல்லை ,திரு ராஜன் எனக்கு குத்தவும் இல்லை குடையவும் இல்லை ,யாருக்கும் குஜா துக்க நினைக்கவும் இல்லை அதற்கான அவசியமும் எனக்கு இல்லை .உங்கள் மதிபுகுரிய குலசேகரன் அவர்களை தனி நபர் தாக்குதலை நிறுத்தி ஒட்டு மொத்த இந்தியர்களின் விழ்ச்சிக்கு ,அன்வார் உட்பட அபொழுது இருந்த மத்திய அரசாங்கமே என்பதை உறுதிபடுத்தி கொள்ள சொல்லுங்கள் .சந்திரா அவர்களே இங்கு சாமிவேலுவுக்கு வக்காலத்து வாங்க வேண்டும் என்பதற்காகவும் தனி மனிதர் துதி பாட வேண்டும் என்பதற்காகவும் எழுத வில்லை .நண்பக தன்மையாகவும் ,உண்மையாகவும் ,எழுத வேண்டும் .மீண்டும் ஒருமுறை .இந்தியர்களின் மலேசியா இந்தியர்களின் பொருளாதார விழ்ச்சிக்கும் சாமிவேலு மட்டுமே முழு பொறுப்பாளி இல்லை .அபொழுது இருந்த மத்திய அரசாங்கம் அதில் அங்கம் வகித்த மாகதீர் ,சாமீ வேலு ,அன்வார் மற்றும் அன்றைய அமைச்சரவை அனைத்துமே முழு பொறுப்பு .அரசியல் தாக்குதல் நடத்த வேண்டுமா காரணமான அனைவரின் மீதும் இருக்க வேண்டும் .இந்தியர்களின் ஆதரவை பெற வேண்டும் என்பதற்காக தனி ஒரு நபரை அதுவும் இந்திய நபரின் மீது மட்டும் குறி வைத்து அரசியல் லாபம் தேடுவது மட்டமான அரசியல் .
யோவ் vel murugan desa mentari pj!;என் பெயர் வண்டு முருகன்! அதுலே உனக்கு என்ன பிரச்னை? அந்த சாமீ வேலு திருடன்தான் மற்ற இந்திய அமைச்சர்களை ஏற விடவில்லை அப்புறம் எங்கிருந்து மற்றவர்களை கேள்வி கேட்பது? மலேசியா ஒட்டு மொத்தம் இந்தியர்களின் பிரதிநிதி நான் வேறு எவரும் இல்லை! அப்பிடின்னு எல்லாத்தையும் தானும் தன் குட்டி பூதமும் ஏப்பம் விட்டானுங்க! அப்படியே யாரும் போட்டி இட்ட அவனுக்கு அடி ஒதை! நீ சொல்ற மாதிரி தேசிய பின்னணி அரசாங்கமும் அதற்கு ஒரு காரணம்தான் இல்லைன்னு சொல்லலே ஆனா அவர்கள் எல்லோருக்கும் வாய்க்கரிசி போட்டு சாமீ வேலு தனக்கு சாதகமா வச்சிகிட்டான்! இல்லனா எப்படி தேனாக ஷேர் பெரும் பகுதி மலாக்கரனுக்கு போய் சேந்துச்சி? எல்லாம் அந்த சோதனை தலைவரு செஞ்ச அட்டகாசம்!
வேல் முருகன் அவர்களே ! இந்த கருத்தை முன்னமே எழுதி இருந்தால் ஓரளவு நீங்கள் திட்டு வாங்குவதை தடுத்து இருக்கலாம் ! ஆனால் ”மைக்கா” ஒரு முடிந்த அத்தியாயம் என்கிறீரே அதுதான் ஏற்றுக்கொள்ள முடியாது தோழரே ! அது மக்கள் பணம் அல்லவா !
அன்றும் இன்றும் இனி என்றென்றும் அம்னோவும் ம இ காவும்தான் இந்தியர்களின் பின்னடைவுக்கு மூலகாரணம்…. இந்தியர்கள் விழித்துக் கொண்டாரானால் ஓரளவு உரிமைக்காகப் போராட வாய்ப்புண்டு… ம இ காவையே முழுமையாக நம்பினால் அம்போதான்>>>> இந்நிலை தொடர்ந்தால், கள்ள குடியேறிகளின் நிலைமையைவிட இன்னும் மோசமாக இருக்கும் நமது இந்தியர்களின் நிலை…
வேல் முருக சாமிவேலு 2008 முன்பு தேர்தலில் வெற்றி பெற்றதுக்கு காரணம் அவருடைய கள்ள ஓட்டுக்கள்.நாட்டில் பல பகுதிகளில் இருந்து அவருடைய குண்டர் கும்பல் மூலம் இந்தியர்களின் ஒட்டுகல் சுங்கை சிப்புடில் போடப்பட்டது. இந்த குண்டர் கும்பலை வைத்து தான் மைக்க ஆண்டு கூட்டத்தில் பணம் போட்ட ஏழை மக்கள் தாக்கப்பட்டனர்
ஐயா குலா ..! நீங்கள் சொல்வதில் எந்த மாற்று கருத்தும் இல்லை உண்மைதான்..! பாதிக்கப் பட்டவர்களில் நானும் ஒருவன் அன்று சாமிவேலுவின் வார்த்தையை நம்பி பொது மக்களிடம் பணம் திரட்டி கொடுத்தேன். திட்டம் எல்லாம் மண்ணாகி போனதுதான் மிச்சம்..? அந்த திட்டத்தில் பணம் போட்டவர்கள் பலர் மண்ணுக்கும் போய் சேர்ந்து விட்டார்கள். இன்று அதை தொட்டு பேசினால் அந்த திட்டத்தில் பணம் போடாதவர்களுக்கு தான் அதிக கோபம் வருகிறது. பழைய கதையை பேசுகிறோம் என்று..? இன்னும் சிலர் மறப்போம் மன்னிப்போம் என்கின்றனர். ம.இ.கா. வின் இன்றைய நிலைக்கு வீழ்ச்சிக்கு முழு காரணமே சாமிவேலுதான் அதற்க்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது..? சிலரின் கூற்றுப் படி சாமிவேலுவை மன்னித்து விடுவோம்..? அதுப் போலவே இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்தானே ராஜபக்சே அவனையும் மன்னிப்போம் மறப்போம் சரிதானே..?
யோவ் வண்ட முருகன் ,நீ வண்ட முருகனா இல்லை வண்டை வண்டயா புளுகும் முருகனா ,உன் பெயர் எதுவானாலும் அதுக்கு எனகென்ன வந்துச்சு சம்மதமே இல்லாம இருக்கு உனது கேள்வி !உண்மைதான் ஒட்டுமொத்த இந்தியர்களின் பிரதிநிதி அன்று சாமீ வேலு என்பதை ஒத்து கொள்கிறேன் ,ஆனால் ஒட்டு மொத்த மக்களின் பிரதிநிதியை விட்டு விட்டு சாமீ வேலுவை மட்டும் எதிரியாய் ஏன் காட்டுகிரிர்கள் என்பதுதான் எனது கேள்வி ?இந்திய சமுகத்துக்கு என்று தனியாக ஒரு பிரதமர் இந்த நாட்டில் இருந்தாரா என்ன ? அப்பொழுது இருந்த பிரதமரை விளாசுங்கள் அவருக்கு எதிராக அல்லவா கோபத்தின் உச்ச கட்டம் இருக்க வேண்டும் ,பூமிபுற்றாவுகெ முதலிடம் முதல் சலுகை என்று அன்று முழங்கிய மகாதிர் அவுருக்கு ஜால்ரா போட்ட அன்வாரும் இந்த இந்திய சமுகத்துக்கு விடி வெள்ளியா ? உண்மை உண்மை உண்மை சாமீ வேலு இந்திய சமுதாயத்தின் பொருளாதரத்தை மேம்படுத்த தவரியவர்தான் -ஆனால் அவர் முன்னெடுத்த பல விவகாரங்களுக்கு முட்டுகட்டையாக இருந்தது அன்றைய பிரதமர் என்பது உண்மை .எனது ஆதங்கம் எல்லாம் ஏன் சாமீ வேலுவை மட்டும் உன்னிப்பாக எதிரணியில் இருக்கும் இந்திய தலைவர்கள் குறி வைகிறார்கள் என்றால் அவர்களால் தமிழனிடம் மட்டுமே முட்டி மொத முடியுமே தவிர மூல காரணமான அம்நோவிடம் எடுபடாத காரியமாகவே இருக்கிறது .இங்கு எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை ,சாமீ வேலு காலத்தில்தான் குண்டர் கும்பல் பெருகியது என்றால் ,அதே காலத்தில் சீன இனத்தில் வட்டி முதலைகளும் ,திருட்டு கும்பல்களும் ,கூடா கடைகளும் ,இந்திய இலஞ்சர்களை இவர்களின் காரியங்களுக்கு குண்டர்களாக உருமாற்றியது ம சீ சா வும் டி எ பி யும்தான் ,அதாவது அன்றைய ம சீ சா தலைவரும்,டி எ பி தலைவருதான் என்றால் எவனாலும் ஜீரணிக்க முடியுமா ? மகாதிர் காலத்தில் மாட் ரெம்பிட் ,வழிப்பறி ,கற்பழிப்பு போதை பொருள் இதெல்லாம் பெருகி வழிந்தது அதற்கு காரணம் மகாதிரும் அன்வாரும்தான் காரணம் என்றால் எவனாச்சும் ஏற்று கொள்வானா ?சாமீ வேலு உள்துறை அமைச்சராக இல்லை குண்டர் கலாச்சாரத்தை ஒழிக்க ஒட்டு மொத்தமாக அணைத்து இனத்திலும் இருந்தது இந்த குண்டர் கலாச்சாரம் ,அதை தடுக்க அன்றைய அரசாங்கம் தவறி விட்டது என்று சொல்வதில் எனக்கு சற்றும் தயக்கமே இல்லை .தற்பொழுது எதிர்கட்சியில் இருக்கும் எதிர்கட்சியின் செயல்பாடும் சாமீ வேலுவை விட படும் மோசமாகத்தான் இருக்கிறது ,நாடாளமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் போட்டி இடும்போதுதான் பிரசார கூட்டதில் இவர்களின் குரல்கள் ஓங்கி இருததே தவிரே ,சட்டமன்றத்திலும் ,நாடலமன்றதிலும் இவர்களின் குரல்கள் அத்தி பூத்தது போலதான் இருக்கிறது ,எதிர்க்கட்சி தலைவர்களின் வழக்குகளில் கலந்து கொண்டு விட்டு நீதி மன்ற வாசலில் அந்த தலைவருடன் போஸ் குடுத்து மறுநாள் பத்திரிகையில் தனக்கு சுய விளம்பரம் தேடுவதில் இருக்கும் கவனம் ஒட்டு போட்ட மக்களின் பக்கமும் ஏனோ தானமாகதான் இருக்கிறது என்பது உண்மை மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது .சாமீ வேலுவை குறை சொல்லியே பேர் போட்டு அல்லது சுய விளம்பரம் தேடி கொள்ளும் அவசரம் எதிரணி இந்திய மக்கள் பிரதிநிதிகள் மக்கள் பிரச்சனைக்கு குடுக்க மாறுகிறார்கள் .சாமீ வேலு ஒன்றுமே செய்ய வில்லை என்றே வைத்து கொள்வோம் ! அவரது காலம் போய் விட்டது ,இனி ஒட்டு போட்டு எதிரணி இந்திய பிரதிநிதியாக நாடலமன்றதுகும் சட்ட மன்றத்துக்கும் அனுப்பி வைத்து உள்ளோம் ,உங்கள் திறமையை அங்கு காமியுங்கள் ,முன்பு ஒரு அமைச்சர் இந்தார் தற்பொழுது இரண்டு இந்திய அமைச்சர் மத்திய அரசாங்காதை பிரதிநித்து அங்கு அமர்ந்து உள்ளனர் ,அவர்களிடம் உங்கள் வாத திறமையை காட்டுங்கள் .நான் சொல்வது சாமீ வேலு முடிந்த அத்தியாயம் அதை பேசியும் எதையும் சமுதாயத்துக்கு நாம் சாதிக்க போவது இல்லை .அவர் மட்டும் பலிகடாவாக ஆக்கி விட்டு நாம் குளிர்காய்வது அரசியல்வாதிக்கும் அழகல்ல .இனி எதிரணி தலைவர்கள் தங்கள் குறிப்பாக நாடாளமன்ற உறுபினராக அமர்ந்து இருக்கும் இந்திய தலைவர்கள் கடுமையான வாதத்தையும் இந்தியமக்களின் பிரச்சனைகளை அங்கு எடுத்து சென்று கலைவதற்குண்டான வழியை தேடுங்கள் .