‘ரோஸ்மா இறந்தார்’ என முகநூலில் பதிவிட்டவர் கைது

rosmahமுகநூலில்  ரோஸ்மா  மன்சூர்  போன்ற  ஒரு  படத்தைப்  புனைந்து  வெளியிட்டிருந்த  பேராக்கைச்  சேர்ந்த  ஒருவரை போலீஸ்  விசாரணைக்காகத்  தடுத்து  வைத்துள்ளது.

அவருக்கு  எதிராக  புகார்கள்  செய்யப்பட்டதை  அடுத்து  நேற்று  நள்ளிரவு  வாக்கில்  ஸ்ரீ ஸ்கந்தரில்  உள்ள  அவரது  வீட்டில்  அவர்  கைது  செய்யப்பட்டதாக  பெரித்தா  ஹரியான்  கூறியது.

‘சைட்  சைபுல்லா’  என்ற  அந்த  முகநூல்  பயனர்,  இறந்த  ஒருவரின்  உடலில்  ரோஸ்மாவின்  முகத்தை  ஒட்டி  வைத்து ‘அவனிடமிருந்து  வந்தோம்,  அவனிடமே  திரும்பிச்  செல்கிறோம்’  என்றும் அதற்குத்  தலைப்பிட்டிருந்தாராம். படத்தில் உள்ளவர்  ஒரு  விமான  விபத்தில்  காலமானார்  என்றும்  குறிப்பிடப்பட்டிருந்ததாம்.