1974-இல், அன்வார் இப்ராகிம்தான் கோலாலும்பூரில் பாலிங் ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்தியவர் என்று கூறப்படுவதை பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி மறுத்துள்ளார்.
பாலிங் இரப்பர் தோட்டக்காரர்களுக்காக பல்கலைக்கழக மாணவர்கள் சிலாங்கூர் கிளப் திடலில் (இப்போது டாட்டாரான் மெர்டேகா) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது இரண்டாவது நாளில்தான் அன்வார் அங்கு தலை காட்டினார் என்றாரவர்.
“மணிலாவிலிருந்து திரும்பிய அவர் நேராக மஸ்ஜித் நெகாராவுக்கு வந்தார். கலகத் தடுப்புப் போலீசார் துரத்தப்பட்ட மாணவர்கள் அங்கு தஞ்சம் புகுந்திருந்தனர்.
“அப்போது மாணவர்களிடம் நான் பேசிக் கொண்டிருந்தேன். அன்வாரையும் பேசச் சொன்னேன். போலீசார் மாணவர்களைக் கைது செய்யத் தொடங்கினர். ஒரே குழப்பமாக இருந்தது. அன்வாரும் நானும் தப்பி ஓடினோம்.
“மாலையில் அன்வார் கைது செய்யப்பட்டவர்களைப் பார்க்க பிரிக்பீல்ட்ஸ் போலீஸ் நிலையம் சென்றார். அங்கு அவர் கைது செய்யப்பட்டார்”.
40 ஆண்டுகளுக்குமுன் முற்போக்கு மாணவர் குழு ஒன்று விவசாயிகளின் உரிமைகளுக்காக நடத்திய போராட்டத்தை நினைவுகூற கெடா, பாலிங்கில், நடந்த பேரணி பற்றிய செய்தியில் அன்வார்தான் அப்போராட்டத்துக்குத் தலைமையேற்றிருந்தார் என்று குறிப்பிடப்பட்டதற்கு எதிர்வினையாக இப்ராகிம் அலி இவ்வாறு கூறினார்.
என்ன காமடி ஜோக்.
நீ ஒரு அர வேக்காடு .
ஆகா தன்னுடைய அலிபாபா குகையை திறந்துவிட்டார் ???
அதனால என்னா? இப்ப என்னா கெட்டுப் போச்சி!
போடா………………..