மனித உரிமை மீறல்கள் குறித்து தகவல் வழங்கக் கூடாதா? -அப்படியொரு சட்டமில்லை என்கிறார் கிரியெல்ல

laxman_giriyella_001ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பணியகத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள விசா­ரணை செயற்­பா­டு­க­ளுக்கு தகவல் வழங்கும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என அரசாங்கம் தெரி­வித்­துள்­ளமையானது. அவர்­களை அச்­சு­றுத்தும் செயற்­பா­டாகும். அப்­ப­டி­யொரு சட்டம் நாட்டில் இல்­லை­யென ஐக்­கிய தேசிய கட்­சியின் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார்.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையில் இலங்கை அர­சுக்கு எதி­ராக நிறை­வேற்­றப்­பட்­டுள்ள பிரே­ர­ணை­யினை தாம் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை எனவும் அதற்கு ஒத்­து­ழைப்பு வழங்கப் போவ­தில்­லை­யெ­னவும் தெரி­வித்­துள்ள அர­சாங்கம். அவர்­களின் விசா­ரணை செயற்­பா­டு­க­ளுக்கு தகவல் வழங்கும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என தெரி­வித்­துள்­ளது.

இது அவர்­களை அச்­சு­றுத்தும் செயற்­பா­டாகும். அப்­ப­டி­யொரு சட்டம் நாட்டில் இல்­லை­யென ஐக்­கிய தேசிய கட்­சியின் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார்.

இலங்­கையில் ஆட்­க­டத்­தல்கள், கொலைகள் மற்றும் அச்­சு­றுத்­தல்கள் உள்­ளிட்ட மனித உரிமை மீறல் செயற்­பா­டுகள் இடம்பெறு­வ­தாக முதன்முதலில் 1990ம் ஆண்டு ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வைக்கு தகவல் வழங்கிய­வர்கள் தற்­போ­தைய அமைச்சர் வாசு­தேவ உள்­ளிட்­ட­வர்கள் என்­பதை மறந்­து­விட முடி­யா­தெ­னவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் விசா­ரணை செயற்­பா­டு­க­ளுக்கு தகவல் வழங்கும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென அர­சாங்­கத்தின் அமைச்சர் ஒருவர் தெரி­வித்­தி­ருந்தார்.

அதற்குப் பதி­ல­ளிக்கும் போதே நாடா­ளு­மன்ற உறுப்­பினர் லக்ஷ்மன் கிரி­யெல்ல இவ்­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் விசா­ர­ணைக்கு அர­சாங்கம் முகம் கொடுக்க வேண்டும். எம்மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்கள் நியா­ய­மற்­றவை என்­பதை நிரூ­பிக்க வேண்டும். அதனை விடுத்து நாம் ஒருதலைப்பட்­ச­மாக அதனை நிரா­க­ரிக்­கின்ற போது அது எமக்குப் பாத­க­மா­கவே அமையும்.

இலங்கை அர­சாங்கம் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் விசா­ர­ணையில் கலந்து கொள்­ளா­விட்டால் தனித்து விசா­ரணை நடத்­தப்­பட்டு தீர்ப்பு வழங்­கப்­படும். இவ்­வா­றா­ன­தொரு சந்­தர்ப்பம் அமைந்தால் இலங்கை மீது பொரு­ளா­தாரத் தடை விதிக்க நேரி­டலாம்.

பொரு­ளா­தார தடை எனும்போது சொத்­துக்­களை முடக்­கு­வது, பயணத் தடை மற்றும் வெளி­நாட்டு முத­லீ­டு­களை நிறுத்­து­வது போன்ற செயற்­பா­டு­களை சர்­வ­தேசம் மேற் கொள்ளும். எனவே, இதனால் ஏற்­படும் பாதிப்பு நாட்­டிற்கும் நாட்டு மக்­க­ளுக்­கு­மே­யாகும். எனவே, அர­சாங்கம் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.

மனித உரி­மைகள் குறித்து ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வைக்கு தகவல் வழங்கக் கூடா­தென்று சட்டம் எதுவும் கிடை­யாது. இவ்­வா­றான நிலையில் இலங்­கைக்கு எதி­ராக நிறை­வேற்­றப்­பட்­டுள்ள அமெ­ரிக்க பிரே­ர­ணைக்கு தகவல் வழங்கும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்வாறான செயற்பாடுகளானது அரசாங்கத்திற்கு எதிராக உள்ள சகல வழக்குகளின் சாட்சிகளுக்கும் அச்சுறுத்தல் விடுத்து சட்டத்தையும் ஒழுங்கையும் இந்த அரசு மீறுகின்றது என்பதை உலக நாடுகளுக்கு ஒப்புவித்துள்ளது எனவும் தெரிவித்தார்.

TAGS: