-மு.குலசேகரன், ஏப்ரல் 15, 2014.
மதமாற்றம் ஒரு நீண்ட காலப் பிரச்சனை. அதில் சம்பந்தப்பட்டவர்கள் மன உளைச்சளையும், நிம்மதியின்மையயும் அனுபவிக்கின்றனர்.
இதனால் தொடரும் துயரங்கள் குறித்தும் அதன் வழி வரும் இன்னல்கள் குறித்தும் 2009 ஆம் ஆண்டிலேயே நான் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளேன். அதன் விளைவாக அமைந்ததுதான் உயர்மட்ட அமைச்சரைக்குழு. குழந்தைகளின் பெற்றோர்களில் ஒருவர் இன்னொரு மதத்திற்கு மாறினால், குழந்தைகள் பெற்றோர்களில் ஒருவர் மதம் மாறுவதற்கு முன்னால் பின்பற்றப்பட்ட அதே மதத்தில் வளர்க்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அப்போதைய சட்ட அமைச்சரால் கூறப்பட்டது.
சுருங்கக் கூறின், இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஒருவர் அவர் இஸ்லாம் அல்லாத அவரின் முதல் மனைவியின் வழி பெற்ற குழந்தைகளை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றக்கூடாது.
இந்த அமைச்சரவையின் முடிவானது பின்னர் அதற்குண்டான திருத்தங்கள் செய்யப்பட்டு அமுலுக்கு வரும் என்று அப்போதே அரசாங்கத்தால் உறுதி கூறப்பட்டது.
ஆனால், இன்று வரை , அந்த சட்ட திருத்தம் செய்யப்படவே இல்லை. அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவே இல்லை. இது பாரிசான் அரசாங்கத்தின் மெத்தனப் போக்கையும் அவர்கள் இஸ்லாமியர் அல்லாதவர்களின் உணர்வையும் மதிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.
அன்றே அது சட்டமாக்கப்பட்டிருந்தால் இன்று தீபாபா போன்றோர்க்கு ஏற்பட்ட சங்கடத்தையும் துன்பத்தையும் தவிர்த்திருக்கலாம்.
மலேசிய இந்தியர்களை பிரதிநிதித்து அமைச்சரவைக் குழுவில் இடம் பெற்றிருக்கும் ஜி. பழனிவேலும், டாக்டர் எஸ். சுப்ரமணியமும் இதற்கு என்ன செய்யப் போகிறார்கள் ? மீண்டும் அமைச்சரவையில் இந்த பிரச்சனையை எழுப்புவார்களா ?
அதிகமான இந்தியர்கள் இப்பிரச்சனையில்பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் இந்தியர்களை வழி நடத்தும் கட்சி என்று கூறிக் கொள்ளும் ம.இ.கா அதன் பங்கை ஆற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது. பிரதமர் நஜிப்பிடம் இப்பிரச்சனையை அமைச்சரவையின் பார்வைக்கு உடனடியாகக் கொண்டு வர வேண்டும் என இவ்விரு அமைச்சர்களும் வலியுறுத்த வேண்டும். 2009 ஆம் ஆண்டில் கொடுத்த வாக்குறுதியை சட்டத் திருத்தத்தின் வழி நடைமுறைக்கு கொண்டு வருவது எப்போதையும் விட இப்போது மிகவும் அவசியமாகிறது.
உலகத்தில் வேறு எங்கும் இல்லாமல் இந்த நாட்டில் மட்டுமே மக்கள் இரு வகையான சட்டத்தின் பிடியில் சிக்கித் தவிக்கின்றார்கள். அதுவும் இஸ்லாமியர் அல்லாதவர்களை இந்த இருவகைச் சட்டங்கள் மூன்றாம் தர குடிமக்களை போலவே நடத்துகின்றது. மக்களைக் காக்க வேண்டிய காவல் துறை இஸ்லாம் அல்லதவர்களின் பதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கமறுக்கிறது. தீபாவுக்கு அவரது மகனை பாதுகாக்கும் பொறுப்பை சட்டப்படி உயர்நீதிமன்றம் வழங்கியும், அவரின் முன்னாள் கணவன் அக்குழந்தையை தாயின் கண்ணெதிரிலேயே அபகரித்து சென்றிருக்கின்றான். இந்த சட்டத்திற்கு புறம்பான செயல் குறித்து போலீசாரிடம் புகார் செய்தும் அவரின் உதவிக்கு போலீசார் வர மறுக்கின்றனர். இதற்கு போலீஸ் தலைமை அதிகாரியே தம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று கையை விரிக்கிறார். ஐஜிபியின் இந்தப் போக்கு நாட்டின் சிவில் சட்டத்தை கேலிக் கூத்தாக்குகிறது.
சிவில் சட்டத்தின் கீழ் பணிபுரியும் நாட்டின் முதல் நிலை போலீஸ் அதிகாரியான ஐஜிபியே சிவில் சட்டத்தை மதிக்காதபோது, சாதாரண மக்கள் எப்படி அதனை மதிப்பார்கள் ?
200 மில்லியனுக்கும் கூடுதலான மக்கள் தொகையைக் கொண்ட நாடும் 90 விழுக்காடு இஸ்லாமியர்கள் வாழும் நாடாகிய இந்தோனேசியாவில் இது போன்ற மத மாற்றங்களால் எந்த ஒரு பிரச்சனையும் வராத போது 30 மில்லியனுக்கும் குறைவான, 60 விழுக்காட்டு இஸ்லாமியர்களைக் கொண்ட மலேசியாவில் மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சனைகள்? மக்கள் அவரவர் விருப்பப்படி மதங்களை தேர்வு செய்து வாழ்வதற்கு ஏன் இந்த அரசாங்கம் குறுக்கே நிற்கிறது ? இந்தோனேசியாவில் ஒரே குடும்பத்தில் இஸ்லாமியர், கிறிஸ்துவர், இந்துக்கள் என எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக வாழும் போது மலேசியாவில் மட்டும் ஏன்முடியவில்லை?
மலேசியா, இந்தோனேசியாவிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு வேளை, மலேசியக் குழு ஒன்று இந்தோனேசியாவிற்கு சென்று எப்படி அங்குள்ள மக்கள் மத இணக்கத்தோடு வாழ்கிறார்கள் என்று கற்றுவருவது நலம் பயக்கும் என்று நான் கருதுகிறேன்.
ம.இ.கா அமைச்சர்கள் அவர்களின் சமூகக் கடப்பாட்டை, இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டுவதன் வழி வெளிக்கொணர வேண்டுமென மீண்டும் வலியுறுத்துகிறேன்.
தம்பி குலசேகரா! நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை. நம் நாட்டில் இரண்டு வகை சட்டங்கள் அமுலில் உள்ளது என்பது உலகறிந்த விஷயம். பழனி, சுப்ரா, என்ற இந்த இரண்டு அரைவேக்காட்டு முந்திரிகளை இடைவிடாமல் கடிந்து கொண்டு அரசியல் நடத்துவதில் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. உங்கள் கட்சியின் லட்சணங்களை பார்ப்போம். சீனர்களுக்கு காலில் முள் குத்திவிட்டாலும் அடி மட்ட தொண்டரிலிருந்து, மேல் மட்ட மண்டைகள் வரை எண்ணையில் இட்ட அப்பளம் துள்ளிக் குதிக்கிறீர்கள். ஒரு உதாரணம், அண்மையில் சிபுதே MP தெரேசா கோக்கிற்கு நேர்ந்த பிரச்சினைக்கு துதி பாட உங்கள் கட்சி மட்டுமல்லாது, PKR, PAS போன்றவையும் சேர்ந்துக் கொண்டு ஒத்து ஊதின. ஆனால், தீபா விஷயத்தில்? பேருக்கு இரண்டொரு அறிக்கை விட்டுக் கொண்டு அரசியல் நடத்துகிறீர்கள். இதே தீபா என்றில்லாமல், வேறு ஏதாவது சீனப்பெண் Tee Ah Baa வாக இருந்திருக்குமேயானால் அப்பப்பா உங்களுடைய ஆட்டம் சாதாரணமாக இருந்திருக்காது. பினாங்கில் ஆளுங்கட்சிக்காரரான Lim Chong Eu விற்கு நீங்கள் கொடுத்த சிறப்பு, சிலங்க்கூரில் மக்கள் தொண்டன் டேவிட்டுக்கு கொடுத்தீர்களா? அவ்வளவு ஏன், உங்கள் கட்சியை ஆரம்பித்த தேவன் நாயருக்கு உங்கள் தலைமையகத்தில் ஒரு படத்தையாவது மாட்டி வைக்க வக்கில்லையா?
வத்தலோ தொத்தலோ பொத்தலே பிரதானம் என்று இருப்பவர்களை சீண்டி பார்க்கிறீர்களே !!! உங்களுடைய நக்கலுக்கு ஒரு அளவே இல்லையா ???
என்னத்த இருந்தாலும் ம.இ.கா. அல்லவா? எப்படியாவது ஒரு தமிழன் கட்சியைத் தீர்த்திட வேண்டும் என்ற எண்ணம் குலசேகரனுக்கு உண்டு. பல வருடங்க்களாக முயற்சி செய்துக் கொண்டிருக்கின்றார். சீன கட்சியில் இருந்துக் கொண்டு தமிழனுக்கு உதவ முடியாமல் ம.இ.கா-வைச் செய்யச் சொல்கின்றார். ஹ ஹ ஹ பாவம் பரிதாபம்…இயலாமை …அறியாமை….முயலாமை….ஹ ஹ ஹ
மத்திய அரசு ஆட்சியில் உள்ளவர்களின் மீதுதானே அம்பு எய்ய வேண்டும். அதைத்தான் திரு குலா செய்துள்ளார். இந்த மத விவகாரம் மத்திய அரசின் கீழ் அல்லவா உருளுகிறது..!!!! இதற்க்கு முன் இந்திரா காந்தியின் உரிமைக்காக வாதிட்டவர் யாரென்று சற்று சிந்திக்கவும்….
முட்டாள்களையும், கோமாளிகளையும் நம் சமுதாயம் நம்பி ஏமாறியது போதும், சுயநலம் கொண்ட அமைச்சர், துணை அமைச்சர்களினால் அவர்களுக்கும்,அவர்களின் மனைவி மக்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் நன்மையே தவிர, நிச்சயமாக இந்திய சமுதாயத்திற்கு எந்த ஒரு நன்மையும் இல்லை. ம.இ.கா அமைச்சர்களை நம்பியிராமல் மாற்று வழிகளை கண்டுபிடித்து , அவைகளை செயல்படுத்தி முன்னேரும் சமுதாயமாக நாம் மாறவேண்டும்.
குலசேகரன் சொன்ன கருத்தில் உண்மையும் அதை விட ஞாயமும் இருக்கிறது .ம இ காவை பிரதிநிதித்து இரண்டு முழு அமைச்சர்கள் மத்திய அரசாங்கத்தில் இருகிறார்கள் .இந்த கட்சி நாங்கள்தான் மலேசியா இந்திய மக்களின் காவலன் ,நாங்களே மத்திய அரசாங்கத்தின் இந்திய சமுகத்தின் முழு பிரதிநிதி என்று தம்பட்டம் அடித்து கொள்கின்றனர் .மதமாற்று சட்டத்தில் ஏற்பட்டு இருக்கும் குளற்படிகும் குறிப்பாக இதில் பாதிக்க படுவது அதிகமாக இந்திய சமூகமாக் இருக்கும் காரணத்தினால் ,ம இ காவின் சார்பில் அதன் முழு அமைச்சர்களே களத்தில் இறங்க வேண்டும் .முடியாவிட்டால் ,பழனிவேலு தனது அமைச்சர் பதவியை ம இ கா இளைஞ்சர் பகுதி தலைவர் சிவராஜிடமும் ,சுப்ரமணியம் அவரது அமைச்சர் பதவியை சரவணனிடம் ஒப்டைத்து விட்டு கட்சிக்கு தலைவர் என்ற தகுதியில் இருந்தால் நல்லது .காரணம் சிவராஜிக்கு இருக்கும் துணிவு அந்த கட்சியின் தலைவருக்கும் .துணை தலைவருக்கும் இல்லை .
ஒரு நாட்டின் சட்டத்தையே எல்லா நாடும் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை , இங்கு மலேசியாவிற்கு என்று ஒரு சட்டம் உள்ளது அதைப்பின்பற்றித்தான் நாம் இங்கே வாழுகிறோம் , சும்மா இதை வைத்து அரசியல் பண்ணாமல் இந்த மதத்துக்கு என்ன நல்லது பண்ணலாம் அடுத்து என்று பாருங்கப்பா , இந்து மதத்திலிருந்து மாதமாதம் ஒருவர் இப்படி வெளியேறுகிறார் பின்னே கோர்ட்டு , போலிஸ் , விவாதம் ,அரசியல்,…எங்கே ஓட்டை என்று பார்த்து அதை நிவர்த்தி செய்யுங்கப்பா , அதை விட்டுட்டு ஒரே அரசியல் பண்ணி உங்களுக்கு லாபம் இந்த அப்பாவி மக்களின் நிலைமை என்ன …….
வாண்டு என்றால் சிறியது என்று பொருள். வாண்டு முருகனும் பெயருக்கேற்போல சிந்தனையிலும் சிறியதாக இருக்கிறார்.இந்த நாட்டில் ஒரு சட்டம் இருக்கின்றது என்று சொல்வதே தவறு. குலா குறிப்பட்டதுபோலா ஷரிய சட்டமும் சிவில் சட்டமும் இங்கு உள்ளது.அரசியல் சாசனத்தில் மலேசிய ஒரு மதச்சார்பற்ற நாடு என்றுதான் பதிவு செய்தயப்பட்டுள்ளது..ஆனால் இந்த நாட்டு அம்னோ அரசியல்வாதிகளோ ஷரியா சட்டத்தை அவர்களின் இஷ்டம் போல இழுத்து வளைத்து தங்களுக்கு சாதகமகா பயன் படுத்திக் கொள்கிறார்கள் . மதம் தனிப்பட்ட ஒருவரின் விறுப்பு வெறுப்புக் கேற்ப அமைவது .அதில் கட்டாயம் இருக்கக் கூடாது.மதத்தை விடுவதும் ஏற்பதும் எங்கேயும் எப்போதும் நடப்பதுதான் , மலேசியாவும் அதற்கு விதிவிலக்கல்ல . சிவில் சட்டப்படி திருமணம் புரிந்து கொண்ட ஒரு மங்கு மடையன் தான் இஸ்லாத்துக்கு மாறவிரும்பினால் அதே சிவில் சட்டத்தின் வழி விவகரத்து பெற்று பின்பு மதம் மாறியுருக்க வேண்டும். அதை விடுத்து இஷ்டப்படி இஸ்லாதில் மாறியது பெரிய தவறு , அதற்கு இடங்கொடுத்த அரசாங்கமும் தவறு புரிந்துள்ளது . மேலும் நீதிமன்ற, ஆணையை மீறி பிள்ளையை கடத்தியது பெருந்தவறு , அதற்குறிய நடவடிக்கை எடுக்காமல் இருந்த போலீஸ் அதைவிட பெரிய தவறு செய்துள்ளது. .இதை எடுத்துச் சொன்னால் அரசியல் பண்ணாதீர் என்று சொல்கிறீர்கள் .புரியத உங்களைப் போன்றவர்களுக்குகெல்லாம் விளக்கம் சொல்வேண்டுமென்பது குலாவின் தலைவிதி !
கர்ப்பாளி சிங்கின் மறைவு பெரிய இழப்பு