காணாமல்போன மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370-ஐத் தேடும்பணியில் இதுவரை எந்தத் தடயமும் கிடைக்காத நிலையில் அடுத்த கட்டத் தேடும்பணி குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம் என ஆஸ்திரேலிய தற்காப்பு அமைச்சர் டேவிட் ஜான்ஸ்டன் கூறுகிறார்.
அடுத்து மேற்கொள்ளப்போகும் நடவடிக்கை குறித்து ஆஸ்திரேலியா இப்போது மலேசியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருப்பதாக அசோசியேடட் செய்தி நிறுவனம்(ஏபி) தெரிவித்தது.
“அடுத்த கட்ட நடவடிக்கையாக ஆழ்கடல் தேடும்பணியில் மேலும் வலுவான சோனார் கருவிகள் பயன்படுத்தப்படலாம்”,என ஏபி செய்தியறிக்கை ஜான்ஸ்டனை மேற்கோள் காட்டியிருந்தது.
உங்கள் கருத்துக்களை கேட்க கேனையன்களாக எங்களுடைய அரசாங்கம் இருப்பதால், உங்களுடைய நவீன கருவிகளை எல்லாம் பரிசோதித்து பார்க்க நல்ல வாய்ப்பு கிடைத்து விட்டது.
வாழ்த்துக்கள் !!!!!!