முஸ்லிம் மருத்துவர்கள் ஹுடுட் சட்டப்படி உறுப்புகளை வெட்டி எடுக்க முடியாது

ampuஹுடுட்  சட்டப்படி உறுப்புகளை  வெட்டி  எடுக்கும்  தண்டனையை  அறுவை சிகிச்சை  நிபுணர்களால்  நிறைவேற்ற  இயலாது  என  மலேசிய   இஸ்லாமிய  மருத்துவச்  சங்கம்  தெரிவித்துள்ளது.

மயக்க  மருந்து  கொடுக்காமல்  உறுப்புகளை  வெட்டி  எடுத்தல்  முஸ்லிம்  மருத்துவர்கள்  எடுத்துக்கொண்டுள்ள தொழில்உறுதிமொழிக்கு  விரோதமானது  என  அச்சங்கத்தின்  இமாம்  தலைவர்  டாக்டர்  அப்துல்  ரகிம்  முகம்மட்  மலேசியாகினிக்கு  அனுப்பிய  அறிக்கை  ஒன்றில்  கூறினார்.

“குற்றவாளிக்கு  எதிர்காலத்தில்  அப்படிப்பட்ட  குற்றச்செயலைச்  மீண்டும்  செய்யக்கூடாது  என்பதை  உணர்த்துவதற்கு  வலியையும்  அச்சத்தையும், அப்படிப்பட்ட  செயலைச்  செய்ததற்காக  வருத்தத்தையும்  உண்டுபண்ணுவதே ஹுடுட்டில்  அப்படிப்பட்ட  தண்டனை  கொடுக்கப்படுவதன்  நோக்கமாகும்.

“மயக்க  மருந்து   கொடுத்து  உறுப்புகளை  வெட்டி  எடுத்தால்  ஹுடுட்டின்  நோக்கம்  நிறைவேறாது”,  என  ரகிம்  தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில்  மாறுபட்ட  கருத்துக்களும்  உண்டு  என்றாரவர்.