நேற்று, குறைந்த-கட்டண விமான முனையத்தில் (எல்சிசிடி) நெரிசல் ஏற்பட்டதற்கு ஏர் ஏசியாதான் காரணம் என்று குடிநுழைவுத் துறை பழி போட முயல்வதாக அந்த விமான நிறுவனம் கூறுகிறது.
எல்சிசிடி-இல் தங்களுக்குத் தேவையான சேவைகள் குறித்து ஏற்கனவே குடிநுழைவுத் துறைக்குத் தெரிவித்துவிட்டதாக ஏர் ஏசியா தலைமை செயல் அதிகாரி அய்ரீன் ஒமார் இன்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“பிரச்னைக்கு ஏர் ஏசியாதான் காரணம் என்ற குடிநுழைவுத்துறையின் கருத்து ஏமாற்றமளிக்கிறது”, என்றாரவர்.
ஏர் ஏசியா கேஎல்ஐஏ 2-க்கு முன்கூட்டியே செல்ல மறுத்ததுதான் எல்சிசிடியில் நெரிசல் ஏற்பட காரணம் என்று குடிநுழைவுத் துறைத் தலைமைச் செயலாளர் அலோயா மாமாட் கூறி இருப்பதற்கு அய்ரீன் இவ்வாறு பதிலளித்தார்.
நாங்கள் மடையர்கள் அல்ல….
நீங்கள் … அது உங்கள் விருப்பம் ……
எங்களை மடையர்களாக, நினைக்க வேண்டாம்..
இது ஒரு சதி நா…. .எப்படியாவது ஏற் ஆசியா நிறுவனத்தை அழித்துவிடவேண்டும் . ஏற் ஆசியா அறிவாளி .